(Reading time: 15 - 29 minutes)

ந்த wax polished க்ரானைட் தரையில் என்ன திரவம் சிந்தியிருந்ததோ தெரியவில்லை……அதில் கால் வைக்க… சர்ரென வழுக்கி இவளுக்கு முன்பாக இருந்த வாசல் தாண்டி படிகளில் உருள முனைந்த உடலை எப்படி சமாளித்தாளோ….. ஒற்றைக் காலை பின்னால் மடக்கிய நிலையில் சட்டென வாசலில் உட்கார்ந்திருந்தாள்..... எப்படியோ வாசல் படியில் உருண்டு எதிரில் இருந்த சுவரில் மோதாமல் தப்பித்திருந்தாள்……

இதற்குள் சுற்றி இருந்த மூன்று பேரும் பதற….

 “வினு” என தவித்தபடி  யவ்வனோ உட்கார்ந்துவிட்ட அவள் எழும்ப உதவ முயன்றான்.

ஆனால் நிலவினியோ “ஒன்னுமில்ல…. ஒன்னுமில்ல ய….அடிலாம் எதுவும் படலை…ஜஸ்ட் ஃஸ்லிப் ஆயிட்டு….” என்றபடி யவ்வன் உதவியின்றியே எழ முயன்றாள்….

 அபயன் அதிபன் முன்னிலையில் விழுந்ததே இவளுக்கு தர்மசங்கடமாக இருக்கிறது எனில்…..அவர்கள் முன்னிலையில் யவ்வன் இவளை தொட்டு தூக்குவது இன்னும் சங்கடமாய் படுகிறது இவளுக்கு….. அதோடு அவர்கள் முன் யவ்வனை எப்படி அழைக்கவென்றும் தெரியாமல் தடுமாறுகிறது மனம்….கிராமமில்லையா இவள் அவனை மதிக்கவில்லை என்று நினைக்க தோன்றுமே….

ஆக தனியாகவே சமாளித்து…. மடங்கி இருந்த காலை அவள் சற்று அசைக்கவும்….. இடுப்பிலிருந்து தொடை வரை ஏதோ ஒரு நரம்பு விண் என தெறிக்க அத்தனையும் மறந்து அருகிலிருந்தவன் கையை அவளாகவே பற்றினாள்…..மறுகையால் வலித்த இடுப்பை அவள் பற்ற

“முடியல யவிப்பா” என முனங்குகிறது வாய்… கண்ணில் இதற்குள் வலியில் ஒரு துளி நீர் உதித்துவிட்டது…

“ஏ அபை….அம்மாவ கூப்டு….” சொல்லியபடி யவ்வனோ இவளை கைத் தாங்கலாக பற்றி மெல்ல அருகிலிருந்த சோஃபாவில் அமரவைக்க…....இதற்குள் வலியில் அதுவாக கண்ணிலிருந்து நீர் வழிந்திருந்தாலும்…..இப்போது வலி என்று எதுவுமில்லை இவளுக்கு…..

காலை நேராக கொண்டு வரும் நேரம் வலித்ததே தவிர அதன் பின் ஒன்றுமில்லை…

இதற்குள் அத்தனை முறை சொல்லிவிட்டாள் நிலவினி ….”அம்மா வேண்டாம் கூப்டாதீங்க… தேவை இல்லாம பயப்படுவாங்க…. எனக்கு ஒன்னுமே இல்ல…”.

ஆனால் அபயன் கூடவே வந்து நின்றார் மரகதம்…..”கட்டி பிள்ள வலிக்குதாம்மா….” என ஆரம்பித்தவர் அத்தனை விதம் விதமாக விசாரிக்க…. இவள் தனக்கு ஒன்னுமே இல்லை என அவரை நம்ப வைக்க முயன்று கொண்டிருக்க…

“யவ்வனோ அவ இடுப்ப பிடிச்சுட்டு அழுதாமா…..அதான் கூட்டேன்…..இப்ப நல்லாதான்மா இருக்கா…..” என அவனது அம்மாவுக்கு ஆறுதல் சொன்னானா இல்லை இன்னுமாய் கிளறிவிட்டானா என புரியாதவிதமாய் ஒன்றைச் சொல்ல….யாரும் பார்க்காத நேரம் அவனை முறைத்தாள் இவள்.

அதற்குள் மரகதமோ…..”சரிப்பா இப்ப வலி எதுவும் இல்லன்னா வினி படுக்கட்டும் …. நேரமாகிட்டு பாருங்க….நாளைக்கு எதுக்கும் நம்ம ஷீலாவ போய்ப் பார்த்துட்டு வந்துடுங்க” என்றார்…..

‘வினி இதுக்கு மிரளலாமா வேண்டாமான்னு மிரள……பின்னே அந்த ஷீலா டாக்டரோன்னு தோணுதுல்ல….”

‘ஹஸ்பிட்டல்னு போனாலே உனக்கு ஒன்னுமே இல்ல…. ஒன்னுமே இல்லன்னு சொல்லிகிட்டே டஜன் டஜனா மாத்திர தரும் டாக்டர்னு சொல்லிக்கிற டார்சான்  ஒன்னு….அதுக்கும் மேல பட்சி சிக்கிட்டுடான்னு பாழும் ஊசிய போட்டு எந்த நர்ஸாவது இவ தோள்ள தொழில் படிச்சாலும் படிக்கலாம்….’

“அதற்குள் ஆமா ஷீலா நாளைக்கு ஹாஃஸ்பிட்டல் வருவாதானே?” என மரகதம் அதியைக் கேட்டு இவளுக்கு மிரளுவதற்கு மொத்த அனுமதி கொடுத்தார்…

அவ்ளவுதான் அதிபன் பதில் சொல்லும் முன்பாக கூட துள்ளி எழுந்துவிட்டாள் இவள்….

“அம்மா இங்க பாருங்க நான் நல்லா தான் இருக்கேன்….” அங்குமிங்குமாய் ஒரு நடை நடந்தவள் “ டார்சான்லாம்…சே….டாக்டர்லாம் வேண்டாமா…” கெஞ்சினாள். டென்ஷன்ல வாய் குழறுதுல பொண்ணுக்கு….

இப்பொழுது சின்னதாய் புன்னகை வந்திருந்தது மரகதம் முகத்தில்…..மத்தவங்கல்லாம் சிரிப்ப அடக்கிட்டு இருக்காங்கன்றது வேற விஷயம்….

“ஷீலா பார்த்துட்டு ஒன்னுமில்லன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்னா திருப்தியா இருக்கும்ல வினிமா…..”தாய்மை உணர்வு வெளிப்பட சொன்ன மரகதம்

 “இப்பதான் உன் தலைல கை வச்சு ஜெபிச்சு அனுப்புனேன்….அதுக்குள்ள இப்டி ஆகிட்டேன்னு மனசுக்கு ரொம்பவும் ஒரு மாதிரி இருக்குமா….” என்றார் தவிப்பாக…

இப்படி எதையாவது யோசித்து வைப்பார் எனத்தான் வினி இவரை கூப்பிட வேண்டாம் என சொன்னதே…..இப்போது சுர்ரென யவ்வன் மேல் இவளுக்குள் ஏறினாலும் அதைக் காட்டாமல்

“இல்லையே நீங்க ஜெபம் செய்யப் போய்தான்… படில விழுந்து சுவர்ல இடிச்சு மண்டை உடையாம இது இவ்ளத்தோட போச்சு….” என மரகத்தை சமாதானப் படுத்ததான் முயன்றாள்.

படில விழுந்தா…… என ஒரு கணம் திக்கென பார்த்தாலும்…. அவள் சொன்ன கோணத்தில் யோசித்த மரகதம் முகத்தில் சின்னதே சின்னதாய் நிம்மதி….

“எப்பவும் நம்மளாலதான் இப்டி ஆச்சுன்னு நினைக்கிறதவிட….நாம இருக்கப் போய்தான் இவ்ளவாது நல்லா இருக்குன்னு  நினைச்சா நல்லா இருக்கும்தான…..” இவள் சொல்ல இப்போது அவர் முகத்தில் ப்ரகாசம் வந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.