(Reading time: 15 - 29 minutes)

ரிமா ரொம்பவே நேரமாகிட்டு….இன்னைக்கு அலைச்சல் வேற அதிகம்….சீக்கிரம் தூங்கப் பாருங்க…” இவள் கன்னம் தட்டி சொன்ன மரகதம் சிரித்த முகமாகவே விடை பெற்றார். படி இறங்கும் அவருக்கு துணைக்குப் போனான் அபயன்…..

ப்படியாக எல்லோரும் ஓரளவு இயல்புக்கு திரும்பி இருக்க…..இவை எல்லாவற்றையும்   என்ன செய்யவென்று தெரியாமல் பார்த்திருந்த அதிபன்தான் இயல்புக்கு திரும்ப முடியாமல் சிந்தை தடுமாற நின்றான்.

இந்த மொத்த நிகழ்வில் தம்பியின் திருமணத்தை குறித்து இனம் புரியா திருப்தி மனதிற்குள் நிறைந்து வழிய…..ஏன் எதற்கென்றே புரியாமல் அனு வந்து நின்றாள் மனதில்.

இங்கு இவன் குடும்பத்தோடு இன்று அவளும் இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாய்…..இன்னும் நிறைவாய் இருக்கும் என்று ஏனோ தோன்றுகிறது….

.எப்படித் தோன்றியது என்று தெரியவில்லை ஆனால் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றிவிட்டது அவனுக்கு….

அழுதாளே அவள்….எதற்கெடுத்தாலும் விலகினாலே…..அம்மா இன்று என்னாலதான் இதுன்னு பதறுனாங்களே அப்படித்தான் அவளுக்கும் இருக்குமோ….

‘எதோ இழப்பை மனசுல வச்சுகிட்டுதான் விலகி விலகிப் போறாளோ….. கார….கார்ல அவ உட்கார்ந்திருந்த இடத்தைக் கூட கைய வச்சு ஜெபம் தான் செய்தாளோ…..நம்மளால யாருக்கும் என்னமும் ஆகிடும்னு நினச்சாளோ……? கல்யாணம் பேசுற இடத்துக்கு வரவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாதானே….. ‘

நினைக்க நினைக்க மனம் உருகிப் போகிறது இவனுக்கு….

‘சே இது புரியாம நான் வேற அவளை கடிச்சு குதறிட்டேன்…..வினி அம்மாவ எவ்ளவு அழகா சமாதானப் படுத்தினா? இத்தனைக்கும் எவ்ளவு சின்னப் பொண்ணு அவ…..நானும் அப்டித்தான் அனுட்ட நடந்துகிட்டு இருந்திருக்கனும்….அதவிட்டுட்டு ஏன் இப்டி செய்து வச்சேன்….?’ குற்ற மனப்பான்மை வேறு குடைகிறது அவனை….

‘எதுக்கெடுத்தாலும் எப்டி பயப்படுற பொண்ணு அவ….எத்தனை மென்மையான மனம் அவளுக்கு……அந்த கோழிய பார்த்து கூட இரக்கப் பட்டா…..அவ போய் திருடுனா…..சொத்தை கொள்ளையடிக்க வந்திருக்கான்னு எப்டி நினைச்சேன் நான்….?

 என்னால தான் அவ ஊரைவிட்டுப் போய்ட்டா….திரும்பி வருவாளா? போய் இத்தனை நாள் ஆச்சே…. வராமலே இருந்துட்டான்னா….?’ இந்த நினைவில் விக்கித்துப் போனான் அவன்…

‘எப்டியாவது அவள கான்டாக்ட் பண்ணி திரும்பி வரச் சொல்லனும்…..’

இதே நினைவாக அங்கு நின்றிருந்தவன் காதில்…. அதற்குள் அம்மாவை கீழே விட்டுவிட்டு வந்திருந்த அபயனின் “வர்றியா அதி….தூங்க போலாம்?”  என்ற அழைப்பு விழ

அதன் மூலம் சற்று சூழ்நிலை உணர்ந்தவன்…..அதற்கு  மேல் அங்கு நிற்பது யவ்வனுக்கும் நிலவினிக்கும் இடைஞ்சலாக இருக்கும் என்ற புரிதலில்…. இருவருக்கும் பொதுவா  ஒற்றை “குட்நைட்” சொல்லிவிட்டு அபயனுடன் மாடியேற தொடங்கினான்….

ஆனால் இன்னும் மனமெங்கும் வெள்ளக் கோழி….

மௌனமாய் வந்த அண்ணனிடம் வழக்கமாக பேசும் வகையில் “என்ன அதி என்ன ஆச்சு? இவ்ளவு சீரியஃஸா என்ன யோசிக்ற நீ” என இயல்பாகத்தான் கேட்டான் அபயன்…

“அது ஒன்னும் இல்லடா…..அந்த அனு பத்தி ஏதோ தோணிச்சு….” ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாலோ….இல்லை தம்பியிடம் பெரிதாக எதையும் மறைத்து பழக்கமில்லை என்பதாலோ அந்த நிமிடத்தில் இப்படி பதில் சொல்லி வைத்தான் அதிபன்….

‘அனுவா?!!!!!!!!!!!’ அன்டெனா ரெய்ஸ் ஆகியது அபயனுக்குள்….

மெல்ல திரும்பிப் பார்த்தான் தன் அண்ணனை…… ‘என்னடா ஆச்சு உனக்கு?’

இதை எதையும் அதிபன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை….அவன் ஏதோ ஒரு உலகத்தில் இருந்தான்….

‘ஓ….?????....திஸ் சவ்ண்ட்ஸ் இன்ட்ரெஸ்டிங்’ அபயனுக்கும் ஆயிரம் ஆன்டெனாஸ் நவ்…

“யாரண்ணா சொல்ற…? அந்த வெள்ள கோழியவா?” இளக்காரமாய் சொல்வது போல் போட்டுப் பார்த்தான் இளையவன்….

“ஏய் என்ன நீ…..ஒரு பொண்ண போய் கோழி அது இதுன்னு சொல்லிகிட்டு….ஒழுங்கா அனுன்னு  சொல்லு….அது நம்ம சைடு பேர்தான….கூப்ட அழகாதான இருக்கு….?” அதிபனுக்கோ தான் அவளை வெள்ளக் கோழி என மனதிற்குள் கூப்பிடுவது ஒன்றும் விஷயமாக தெரியவில்லை……

ஆனால் அடுத்தவர் அதுவும் தம்பி அவளை அப்படி சொல்வது என்னவோ மரியாதை  இல்லாதது போலொரு உணர்வு…..ஆக இப்டி ஒரு ரெஸ்பான்ஸ்

அவன் தம்பியை திருத்திய வேகத்தில் விஷயம் என்னவென்று புரியாமல் இருக்குமா என்ன அபயனுக்கு…???

‘ஆஹான்….. அப்டினா நான் இனிமே அவங்கள அனு அண்ணினே கூப்டுறேன்……’ மனதுக்குள் சொல்லிக் கொண்டான் தம்பி……நிம்மதியும் குறும்பும் கும்மாளமும் சந்தோஷமும் அவனுக்குள் நொடிக்கு ஆயிரமாயிரம் கனஅடி வேகத்தில் நுழைகிறது.

இதில் மறுநாள் காலை அபயன் கண்ணில் விழுகிறாள் அனு…..கொண்டல்புரம் வந்திருந்தாள் அவள்.

‘வரே வா…..அண்ணா நேத்து அவ்ளவு ஃபீல் பண்ணான்…..அண்ணி இன்னைக்கு என்ட்ரி கொடுத்தாச்சு…..சீக்கிரமா வீட்டுக்குள்ளயும் என்ட்ரி கொடுக்க வைக்கேன்….’ முடிவு செய்து கொண்டான் அவன்…. 

தொடரும்!

Episode # 16

Episode # 18

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.