(Reading time: 19 - 38 minutes)

18. என் மனதை தொட்டு போனவளே - VJ G

சிறுவன் சிறுது யோசித்தான் சொல்வதா வேண்டாமா என்று, 'உனக்கு இஷ்டமில்லையென்றால் நீ சொல்லவேண்டாம்,' என்றுத் திரும்பினான், இருங்க அங்கிள், அப்பா பேர் ருத்ரா நீலகண்டன், அம்மா பேர் சித்ரா,' என்று பெருமையாக கூறினான் ரூபேஷ், ருத்ராவுக்கு தலையில் இடி இறங்கியது போல் இருந்தது கண்ணெல்லாம் சிவந்து முகம் கோவத்தில் விகாரமாகியது, அவனால் நிற்க முடியவில்லை, கை, கால்கள், நடுங்கியது, 'உன் அம்மா எங்கே,' என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான், அவன் முகம் சற்றுமுன் எவ்வளவு சாந்தமாக இருந்தது, இப்போ ஏன் இப்படி ஆனது என்று பயந்தான் சிறுவன்,' அங்கிள்.... '

'டோன்ட் கால் மீ அங்கிள்,' என்றான், சிறிது தன்னை தளர்த்திக் கொண்டான் குழந்தை பயப்படுவது தெரிந்தது 'உன் அம்மா எங்கே ரூபேஷ், எனக்கு உங்க அம்மாவை தெரியும், அவங்களைப் பார்க்கணும்' என்று தணிவாக கேட்டான்,

'அந்த ரூமில் இருக்காங்க,' என்றான்

en manathai thottu ponavale

'தேங்க்ஸ்,' என்று அந்த ரூம் கதவைத் திறந்தான், சித்ரா, இதோ வரேன் ருத்ரா, சாரி ரூபேஷ், என்று தலையை நிமிர்த்தினாள், அங்கு ருத்ராவை பார்த்ததும் அவள், தடுமாறினாள், எழுந்து அவன் காலில் விழுந்தாள், கதறினாள், என்னை மன்னியுங்கள் ருத்ரா, ப்ளீஸ் என்னை மன்னியுங்கள், ப்ளீஸ் என்னை மன்னியுங்கள், அதையே திரும்பி, திரும்பி சொல்லிக் கொண்டிருந்தாள்,

'ஏன், எதற்காக, இந்த வனவாசம், ஏன் என்னை விட்டு போனாய், நீ யோசித்தாயா நான் எவ்வளவு கஷ்டப் படுவேனென்று, என் மனசு எவ்வளவு பாடுப்படுமென்று, உனக்கு நான் என்ன செய்தேன் என்று என்னை விட்டு போனாய்,' என்று கோபத்தோடும், வருத்ததோடும் கேட்டான், 'இவ்வளவு பெரிய விஷயத்தை, என் ரத்தத்தை, எங்கள் வாரிசை, என்னிடமிருந்து மறைத்து வைக்க, உனக்கு என்ன ரைட் இருக்கு, உனக்கு என்ன தைரியம்,' என்று கேட்டான்

'என்னை மன்னியுங்கள் ப்ளீஸ்,'  

அவள் கதறினாள் அதை பொருக்க முடியாமல் அவளை இழுத்துக் கட்டிக் கொண்டான், ஏன் கண்ணம்மா, என்னை விட்டு விட்டு போனாய், உன்னை எங்கு தேடுவது என்று தெரியாமல் திண்டாடினேனே, ஏன், ஏன் என்னை தவிக்க விட்டாய்,' என்று அவள் முன் நெற்றி முடியைக் கோதி விட்டு அவளை பார்த்துக் கொண்டே கேட்டான்,

நான் உங்களை விட்டு போக ஆசைப் படுவேனா, நான் போவேனா, என் போறாத காலம் நிறைய நடந்து விட்டது, உங்களை நினைக்காத நேரமில்லை, நம் குழந்தை, ப்ரெக்னன்ட் ஆன விஷயத்தை முதலில், உங்க  கிட்டதான்  சொல்லனும்னு ஆசை, ஆனால் முடியவில்லை, நான் எவ்வளவு போராடியிருப்பேன் தெரியுமா, அந்த விஷயம் தெரிந்த நொடி என் அம்மா இறந்து விட்டாள், இறந்த நேரம், என் அம்மா சொன்னது,  "நீ சென்னைக்கு போகாதே," என்று, என் மனம் என்ன வேதனை பட்டது தெரியுமா, அவனைப் பாருங்கள் உங்களை மாதிரியே இருக்கிறான், எத்தனை அழகாய் இருக்கிறான்,'என்று நிறுத்தினாள்

அவளை இழுத்து அனைத்துக் கொண்டு, முகம் முழுவதும் முத்தம் மாறி பொழிந்தாள், அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது, திரும்பி அவளும் அவனை முத்தம் கொடுத்து சிவக்க வைத்தாள், கண்ணை துடைத்துக் கொண்டு 'உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா,' என்று கேட்டாள்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

அவனும் 'ம்ம், ஆகிவிட்டது,' என்றான்,

'வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா ?”

“ம்ம், எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்,'

'தாத்தா, எப்படியிருக்கிறார்?'

' நன்றாக இருக்கிறார்,'

'எல்லோரையும் நீயே வந்து பார்!' என்றான் ருத்ரா

'நம்ம விது, வணி, எல்லோரும் எப்படியிருக்கிறார்கள், அவர்களுக்கு குழந்தைகள், நம்ம கார்த்திக் மாமாவுக்கு குழந்தை,'

'இனி எல்லாம் நீ வந்து பார்த்துக் கொள்,'

'இங்கு நீ வேலை பார்க்கிறாயா,'

'இல்லை, இது நம் சொந்த ஓட்டல்தான்,'

'இன்னிக்கு சீக்கிரம் மூடி விடுகிறாயா? உன்னோட நிறைய பேசணும், இந்த ஹோட்டலை பார்த்துக் கொள்ள வேறு யாராவது இருக்கிறார்களா?' என்று கேட்டான் ருத்ரா

'அதை விட முதல்ல நம்ம பையனுக்கு நான் யாரென்று அறிமுகம் செய், அவன் என்னை அங்கிள், என்று கூப்பிடுகிறான், கஷ்டம், என்னோட நேரத்தை பாரு,’

'சாரிங்க,'

'அது சரி, நான் உள்ளே நுழையும் போது, இதோ வந்துடறேன் ருத்ரான்னு சொல்லிட்டு சாரி ருபேஷ்னியே அதென்ன,'

அவள் வெட்கப் பட்டுக்கொண்டே, 'அதொண்ணுமில்லை, நீங்கள் என்னோடு இருப்பது போல நானே ஒரு கற்பனைப் பண்ணி அவனை முதல்ல உங்க பேர் சொல்லிக் கூப்பிட்டு, அதற்கு பிறகு, அவன் பேரை சொல்வேன், அதற்கே அவன் கேட்பான், அப்பா இங்கில்லேன்னா கூட நீ எப்பவும் அப்பா பேரைக் கூப்பிட்டு என் பேரைக் கூப்பிடுறீங்க, ஒரு தடவையாவது என் பேரை முதல்ல சொல்லுங்க ப்ளீஸ்,அப்படின்னு,'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.