(Reading time: 15 - 29 minutes)

வனுக்கு தன் தப்பு புரிந்தது, 'நீ காபி சாப்பிட வேண்டாம் அப்புறம் வயறு ஏதாவது செய்யபோகிறது ஏன்னா, நாம ட்ராவல் பண்ணனும், நானும் கொஞ்ச கொஞ்சமா இந்தப் பழக்கத்தை விட்டுடறேன்,' என்றான்

'நீங்கள் எதற்கு விடனும், அதற்கு நான் சமாளிக்கிறேன் அவனை,' என்றாள் சித்ரா

'ரூப்,' என்று அழைத்தாள் சித்ரா

'எஸ் மாம், புக் எடுத்து கொண்டிருக்கிறேன் படிக்க,' என்று கூறினான்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

சித்ரா, அவனிடம் போனாள் அவன் ஹாலில் ஒரு டேபிளில் உட்கார்ந்தான் புக்கை பிரித்து வைத்துக் கொண்டு, மகனின் அருகில் போய் மெதுவாக, ‘நாம் இன்னிக்கு நம்ம பாமிலியை பார்க்க சென்னைக்கு போகிறோம், ஸோ நீ போகும் வழியில் படிக்கலாம் என்ன சொல்கிறாய், யு கேன் டேக் யுவர் ஸ்கூல் பாக் வித் யு,' என்று கூறினாள்

'குட் மார்னிங் டாட், நாம சென்னைக்கு போறோமா தாத்தா பாட்டியை பார்க்க போறோமா,' என்று கேட்டான் ரூபேஷ்

'குட் மார்னிங் சன், ஆமாம் ரூப், உனக்கு ஓகே தானே,' என்று கேட்டான் ருத்ரா அவன் மகனின் அழகு, பேச்சு எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டே,

'எஸ் டாட், ஐ அம் ஹாப்பி, நானும் அம்மாவும் எங்கேயும் போனதே இல்லை, இல்லம்மா,' என்று கேட்டான்,

அவள் தலையை திருப்பிக் கொண்டு கண்ணை துடைத்துக் கொண்டு, 'உன் ட்ரேஸ்செஸ் எடுத்து வச்சுக்கோ ரூப்,' என்றாள், 'ஹௌ மெனி, என்று அவன் கேட்டதும்

ரெண்டோ இல்லை மூன்றோ, எடுத்துக்கோ,' என்று சொல்லி

அவள் தனக்கு எடுத்துக் கொள்ள உள்ளே போனாள்,

அவன், அம்மாவுக்கும், மகனுக்கும் உள்ள புரிதல், ஒரு பாசம், உரிமை, நட்பு, மரியாதை, என்று பல பரிமாணங்கள், எப்படி இவளால் தனியாக இந்தக் குழந்தயை இப்படி வளர்க்க முடிந்தது, ஒரு வேளை தனியாக இருந்ததால் தான் இது சாத்தியாமாக இருக்கவேண்டும் யாரோட தலையீடலும் இல்லாமல், தான் நினைத்த மாதிரி நல்ல விதமாக வளர்த்தல், சாத்தியமாக உள்ளது, பாவம் என் சித்து இவ்வளவு வருடமாக எங்கேயும் போகாமல் வீடு, வொர்க், பாவம் என் குழந்தையும் எங்கேயும் போகவில்லை, இவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளனும், அதற்கு தாத்தாவிடம், பேசவேண்டும் என்று தீர்மானித்தான்,

'சித்து, என்று கூட்டுக் கொண்டே ரூமுள்ளே போனான், அப்போது அவள் கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தாள்,' என்னம்மா ஆச்சு, உனக்கு இஷ்டமில்லையா வருவதற்கு,’

‘அதெல்லாம் இல்லை, எல்லோரையும் எப்படி பார்ப்பேன், அதான்,' என்றாள்

'உன்னை யாரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள், நீ கவலைப் படாமல் வா, உன்னைப் பார்த்தாலே எல்லோரும் சந்தோஷப் படுவார்கள், நம்ம பயலைப் பார்த்தால் அவ்வளவுதான், கேட்கவே வேண்டாம், வா கிளம்பு,’ என்று அவளை இழுத்து கிஸ் கொடுத்தான், 'திரும்பி குளிக்கலாமா,' என்று கேட்டான் கண்ணடித்துக் கொண்டே, 'வளர்ந்த பையனை வைத்துக் கொண்டு கேட்கிறதை பார்,' என்றாள் சிரித்துக் கொண்டே

'பின்னே எவ்வளவு வருஷம், விட்டு போன பாக்கியை எப்போ, கொடுப்பே, ஒரு நாளைக்கு மூன்று முறை என்று வைத்துக் கொள், பதினோரு வருடங்கள், கணக்கு பண்ணு, கணக்கு தெரியுமில்லே,'

அவள் சிரித்துக் கொண்டே 'நீங்க கணக்கு பண்றதிலேயே இருங்க,' என்று வெளியே ஓடினாள், அவன், அவளை பிடிக்க அவள் பின்னாடியே ஓடினான், அவளை இழுத்து கட்டிப் பிடித்தான், அப்போது எதிரே வந்தான் ரூபேஷ், 'மாம், வாட்'ஸ் கோயிங் ஆன்,' என்று கேட்டான்

'ஆர் யு டூ பைடிங்க்,' ருத்ரா முணுமுணுத்தான் ‘போட்டிக்கு வந்துட்டான்பா,’ என்று

'நோ, வி ஆர் நாட், சும்மா, நீ எல்லாம் எடுத்துக் கொண்டாயா வா, போலாமா,’ என்று ருத்ராவைப் பார்த்து கேட்டாள், திடீர்னு சீரியஸ் ஆகிவிட்டாள்,

'ம், ரெடி' போகலாமென்று தன் பாகை எடுத்துக் கொண்டான்,

'நாம ஹோட்டலுக்கு போயிட்டு, அங்கிருந்து போகலாம், இன்னிக்கு உனக்கு இட்லி, நம்ம ஹோட்டல்ல சாப்பிடலாம்,' என்றாள் மகனிடம்,

'நாம கூட அங்கேயே சாப்பிடுவோம், அப்படியே உங்கள் ஹோட்டல் செக் அவுட் பண்ண வேண்டாம்,' என்றாள்

'நான் ஹோடலே எடுக்கவில்லை, போற வழியில் இங்கு சாப்பிட வந்தேன், அவனைப் பார்த்தவுடன், நான் சின்ன வயதில் எப்படியிருந்தேனோ அப்படியே  இருந்தான், ஒரு க்யூரியசிடி, யாரோட பையன், ஒரு வேளை, எங்களுக்கு உறவுக் காரங்க யாராவது என்று நினைத்தேன், ஆனால் அவன் என் பையனா இருப்பான்னு சத்தியமா நினைக்கவில்லை,’ என்று மெதுவாக இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்,’ இந்த ஹோடலைப் பத்தி எனக்கு ஐந்து வருடங்களாக தெரியும், ஒரு ப்ரண்ட் சொன்னார், என் மேல் தப்பு அப்பவே வந்திருந்தால், இந்த ஐந்து வருடத்தையாவது மிச்சம் பண்ணியிருக்கலாம், கணக்கில் குறைந்திருக்கும்,' என்றான் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு,

‘ஐயோ, எப்பவும் இதே நினைப்புதானா,’ என்று கேட்டாள்,

'பிசினெஸ்மேன் மா, கணக்குல கரெக்ட்டா இருக்கணும் சரியா, நீயும் பிசினெஸ் உமன் தானே, ஸோ, உனக்கு தெரிந்திருக்குமே, கரெக்டா இல்லையா,'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.