(Reading time: 15 - 29 minutes)

'தோ ஹோட்டல் வந்துடுத்து,' என்றாள் சிரித்துக் கொண்டே, அவன் காரை பார்க் செய்தான், அவர்கள் சித்ராவின் ரூமிற்கு போனார்கள், ஒரு ஆள் ரெடியா பூஜைக்கு தட்டு எடுத்து வந்தான், அப்போது தான் அந்த ஹோட்டலின் பேர் அவனைத் தொட்டது, " ஹோட்டல்நீல்கந்த் " அத்தனை நேரம் தோணவில்லை, அவள் ஆரத்தி எடுத்து ஊதுபத்தியை வைத்து விட்டு வெளியே சென்றாள், ஹோட்டல் காஷ் ரேஜிச்டேருக்கு போய் அங்கு முடித்தவுடன், கூடவே வந்த ஆளிடம் கொடுத்தாள், அவன் மொத்த ஹோட்டலுக்கும் காட்டினான், உடம்பை விறைப்பாய் வைத்துக் கொண்டிருந்தாள், 'ராகவேந்தர் எல்லி,' என்று அந்த ஆளை கேட்டாள்,

அவன் கிட்சென் ஸ்டோர் ரூமை காட்டினான், 'இங்கே வரச் சொல், அப்படியே, ஒரு ப்ளேட் இட்லி, ரெண்டு ப்ளேட் தோசை, ஒரு பணியாரம் கொண்டு வா,' என்று கன்னடத்தில் சொன்னாள்,

'தன், லாக்கரில் எவ்வளவு பணம் இருக்கு என்று பார்த்தாள், முப்பதாயிரம் இருந்தது, ராகவேந்தரிடம், நான் சென்னைக்கு போகிறேன் ஒரு வாரமாகுமென்று நினைக்கிறேன், இதில் முப்பதாயிரம் இருக்கு, தினம் வரும் காஷையும் வைத்துக் கொண்டு, நடத்து, டெய்லி நான் போன் செய்யறேன், சரோஜை வரச் சொல்லியிருக்கிறேன் அவள், காஷை பார்த்துப்பாள், நீ மத்ததை பார்த்துக் கொள், சரோஜ் என்ன சொன்னாலும் அதக் கேளு, நான் வரும் வரை எதுவானாலும் கோவப் படாமல் கேட்டுக் கொள்,’ என்று அறிவுரை வழங்கி ‘நான் சாப்பிட்டு கிளம்புகிறேன்,' என்றாள்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

வெளியே வந்தாள், ருத்ரா பையன் சாப்பிடுகிற அழகை பார்த்துக் கொண்டு அவளுக்காக வெயிட் செய்துக் கொண்டிருந்தான், 'ஏன் எனக்காக வெயிட் பண்ணறீங்க, நீங்க சாப்பிடறதுதானே இருங்க உங்களுக்கு சூடா வேறொன்னு கொண்டுவரச் சொல்கிறேன்,’ என்று கூறி ஆளைக் கூப்பிட்டாள், 'அதெல்லாம் வேண்டாம் சித்து, நான் இதையே சாப்பிடுவேன்,' என்றான்

'வேறென்ன வேண்டுமென்று கேட்டாள், அவனிடம், ' ஒன்றும் வேண்டாம், குழந்தைக்கு மதியானத்துக்கு ஏதாவது வாங்கிக் கொள்,' என்றான்

'வேண்டாம் எல்லாம் ஆறிவிடும், நான் கஞ்சி போட்டு எடுத்திருக்கேன், அதை அவன் சாப்பிடுவான், நாம் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்ளலாம்,' என்றாள் அந்த ஆளிடம் ஏதோ சொன்னாள்

அவனும் கொண்டு வந்தான் அவள் பணம் கொடுத்தாள்,

‘என்ன இது,’ என்று கேட்டான்,

'அப்புறம் சொல்கிறேன்,' என்று விடு விடு என்று சாப்பிட்டாள், அவனும் சாப்பிட்டான், சிறிது நேரத்தில் கிளம்பினார்கள்,

காரில் மூவரும் ஏறியவுடன், அவள் கழுத்தை பார்த்தான், அவன் வாங்கி மாட்டிய செயின், அவனுக்கு திருப்தியாக இருந்தது,

'இந்த செயின் இப்போதான் போட்டுக் கொண்டாயா, நான் நேத்து பார்க்கவில்லையே,' என்று கேட்டான்

'இல்லையே நீங்க போட்ட அன்றிலிருந்து நான் கழட்டவில்லையே,' என்றாள்

'அப்ப நான் சரியா பார்கலை போலிருக்கு, சாரி,' என்றான்

'சரி, உள்ளே பணம் கொடுத்தாயே எதற்கு,' என்று கேட்டான் 'நீ கூட அப்புறம் சொல்கிறேன் என்றாய்,'

'அது ஒன்றுமில்லை, இந்த ஹோட்டலில் வேலை செய்யாத போதோ, இல்லை யாரையாவது கூட்டிக் கொண்டு வந்தாலோ, பணம் கொடுக்க வேண்டும் ஓசியில் யாரும் சாப்பிடக் கூடாது வொர்கர்ஸ், அதுவும் வொர்க் பண்ணும்போது மட்டும்தான் ப்ரீ சாப்பாடு, அந்த ஆர்டரை போட்டவளே நான்தான், அதை நான் கடைபிடிக்கனுமில்லையா அப்பத்தான் அடுத்தவர்கள் நம்மிடம் பயப்படுவார்கள், அதான் நான் பணம் கொடுத்தேன்,'

அதை என் கிட்ட சொல்லக் கூடாதா, நான் கொடுக்க மாட்டேனா, என் மனைவிக்கும், பிள்ளைக்கும் நான் பணம் கொடுப்பது தானே முறை,’ என்று கேட்டான், வருத்ததுடனும், கொஞ்சம் கோவமாகவும்

'இத பாருங்க, இது நம்ம ஹோட்டல், அது நீங்களா, நானா, இல்லை ரூப்பா, மூவருக்குமான ஹோட்டல் இது, அதனால் இப்படியெல்லாம் கேட்டு என்னை கில்டி ஆக்கிடாதீங்க ப்ளீஸ்,'

அவன் ஒன்னும் பேசவில்லை, பின்னிருந்து, ரூபேஷ் குரல் கொடுத்தான், 'மாம் கேன் யு ப்ளீஸ் கால் மை ஸ்கூல் அண்ட் டெல் தெம் ஐ அம் நாட் கமிங் டு தி ஸ்கூல்,'

'சரி கண்ணா,'

அவள் உடனே போனை எடுத்து ஸ்கூலுக்கு கால் செய்தாள், ஸ்கூல் ஆபிசில் போனை எடுத்தார்கள்,

'ஹலோ, திஸ் இஸ் சித்ரா நீலகண்டன், எஸ், மை சன் ரூபேஷ் நீலகண்டன் வில் நாட் பி அட்டேண்டிங் தி ஸ்கூல் பார் எ வீக், எஸ் பிப்த் பி, எஸ், தாங்க்ஸ், எஸ்  ஐ வில் செண்ட் இட் வென் ஹி கெட்ஸ் பாக் டு ஸ்கூல், ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ், பை,' போனை ஆப் செய்தாள்

'தேங்க்ஸ் மாம், யு ஆர் டூ குட்,’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.