(Reading time: 19 - 38 minutes)

யுக்தா அமைதியாக பிரணதி சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தாள்..  வரூன் அன்னைக்கு பிரணதியை பார்த்து பேசிய விஷயத்தை வாய் வழியாக சொல்லிக் கொண்டிருந்தாலும் மனமோ அன்றைக்கு நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டது பிரணதிக்கு....

அன்றைக்கு காலேஜ் முடிந்து தோழிகளோடு பேசிக் கொண்டே வெளியே வந்தாள் பிரணதி... அங்கே வரூன் நின்றுக் கொண்டிருந்தான்... மூன்று வருடத்துக்கு முன் பார்த்ததை விட இன்னும் அழகாக கம்பீரமாக இருந்தான்... திடிரென்று பார்த்தால் அடையாளம் தெரியாதோ என்னவோ... பேஸ்புக்கில் அவன் ப்ரொபைல் பிக்சரை அடிக்கடி மாற்றுவான்... அதை வைத்து தான் இப்போது அவனை உடனே அடையாளம் காண முடிந்தது... அதை விட ஆச்சர்யம் இவன் எப்போது இந்தியா வந்தான்... அவனைப் பார்த்துக் கொண்டே யோசனையோடு வந்தாள்... அவனும் இவளை பார்த்துவிட்டு இவள் அருகில் வந்தான்...

"வரூன் நீங்க எப்படி இங்க..."

"பிரணா உன்னோட கொஞ்சம் தனியா பேசனும்... "

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அதற்குள் இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த அவளின் தோழிகள்.. " ஹே யாருடி இந்த ஹேண்ட்சம்... உன்னோட பாய்ப்ரண்டா..?? சொல்லவேயில்லை..." என்று கேள்விக் கேட்க ஆரம்பித்துவிட்டனர்... இவள் பதில் சொல்வதற்கு முன் வரூனே பதில் சொன்னான்...

"ஹலோ கேர்ள்ஸ்... நான் யாருன்னு பிரணா உங்களுக்கு நாளைக்கு சொல்வா.. இன்னைக்கு நாங்க கொஞ்சம் பேசனும்... ப்ளீஸ்" என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான்... இருவரும் ஒரு ரெஸ்ட்ரான்டில் உட்கார்ந்திருந்தனர்... சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் பிரணதி..

"ஹே பிரணா... என்ன சுத்தி சுத்தி பார்த்துக்கிட்டு இருக்க... கூல் இங்கல்லாம் உங்க அண்ணன் வரமாட்டான்... வந்தாலும் தான் என்ன..??"

அவனைப் பார்த்து முறைத்தாள் அவள்.. "நான் அண்ணன் வருமான்னுல்லாம் பார்க்கல... ஆமா என்னோட ப்ரண்ட்ஸ் கிட்ட ஏன் அப்படி பேசினிங்க...?? நாளைக்கு காலேஜ் போனா என்ன ஏதுன்னு கேட்டு நச்சரிப்பாங்க...  அப்புறம் எப்போ இந்தியா வந்தீங்க...?? நேத்து  நைட் சேட் பண்ணப்ப கூட நீங்க எதுவும் சொல்லல..."

"நான் நேத்தே வந்துட்டேன்... ஆனா உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் நான் எதுவும் சொல்லல..." என்று அவன் சொன்ன விதமும் பார்வையும் அவளை என்னவோ செய்தது... இதுவரைக்கும் மொபைல் மூலமா சேட்டிங்ல பேசியதற்கும்... இப்போது அவனோடு நேரே உட்கார்ந்து பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது...  அவன் பார்வையில் அவளுக்கு ஏதேதோ புரிந்தது...

"என்னவோ பேசனும்னு சொன்னீங்களே என்ன..?? என்று அவள் மனதில் தோன்றிய எதையும் வெளிக்காட்டாமல் சாதாரணமாக கேட்டாள்...

"பிரணா ஐ லவ் யூ.." என்று பட்டென்று சொன்னான்... அவன் பார்வையும் செய்கையின் அர்த்தமும் அவளுக்கு புரிந்தாலும் அவன் திடிரென்று சொன்ன ஐ லவ் யூவில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்... பக்கத்தில் திரும்பி பார்த்தாள்... ஆனால் பக்கத்தில் யாரும் இல்லை... அங்கங்கே ஒன்றிரண்டு ஜோடிகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்... இது பொதுவா லவ்வர்ஸ் வரும் இடம் போல...

இவன் சொன்னதற்கு அவள் ஒன்றும் சொல்லாமல் அவள் செய்த செய்கைகள் வரூன் முகத்தில் குறும்போடு ஒரு புன்னகையை வரவழைத்தது... அவனே திரும்பவும் பேச ஆரம்பித்தான்...

"நான் உன்னை லவ் பண்றேன் பிரணா... நான் ஜெர்மனி போறதுக்கு முன்னாடியே எனக்கு உன்னை பிடிச்சிருந்தது... ஆனா அது லவ்வான்னு தெரியல... பிருத்வி தப்பா நினைச்சா மாதிரி நீயும் என்ன தப்பா நினைக்கக் கூடாதுன்னு தான் அன்னைக்கு சப்னா பத்தி எல்லாம் சொன்னேன்... நீ என்னை நம்பனும்னு நினைச்சேன்... நீயும் என்னை நம்புன...

அப்ப இது லவ்வான்னு இருந்த குழப்பத்துல உன்கிட்ட எதுவும் சொல்லல... அதுவும் நீ ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருந்த... ஜெர்மனி போய்ட்டா எல்லாம் சரியாகும்னு நினைச்சேன்... ஆனா அங்கேயும் உன்னோட ஞாபகமாவே இருந்துச்சு... முடிவே பண்ணிட்டேன் இது லவ்ன்னு...

கல்யாணம்னு பண்ணிக்கிட்டா உன்னை தான் பண்ணிக்கனும்னு...

ஆனா பிருத்வியை பத்தி யோசிச்சேன்... அதில்லாம நீ இன்னும் படிப்பை முடிக்கல... இது தான் லாஸ்ட் செமஸ்டர்... மெதுவா சொல்லலாம்னு இருந்தேன்... ஆனா இப்போ உடனே உன்கிட்ட ப்ரோபோஸ் பண்ண வேண்டியதா போச்சு..." என்றான்... அவள் என்ன என்ற கேள்வியோடு பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.