(Reading time: 19 - 38 minutes)

"ரெண்டு விஷயம் பிரணா... பர்ஸ்ட் எங்க அம்மா... படிப்பு முடிஞ்சு இந்தியாக்கு வரப்போறன்னு தெரிஞ்சதும் அம்மா பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க... தினம் ஒரு பொண்ணு போட்டோவ மெயில் பண்றாங்க... கல்யாணம் வேண்டாம்னு சொன்னா.. உன்கூட படிச்சவங்களுக்கெல்லாம் ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆகுது... நீ ஏண்டா வேண்டாம்னு சொல்றன்னு கேக்கறாங்க...

அவங்கக்கிட்ட உன்னை லவ் பண்றேன்னு சொன்னாப் போதும்... படிப்பு முடியறவரைக்கும் வெய்ட் பண்ணுங்கம்மான்னா... அம்மா அமைதியாயிடுவாங்க... அதுக்கு முன்னாடி உங்கிட்ட சம்மதம் வாங்கனும்... அதுக்குதான் உன்னைப் பார்க்க வந்தேன்...

அப்புறம் இரண்டாவது என்னன்னா... நான் உன்கிட்ட லவ் சொல்றதுக்குள்ள வேற யாராவது உன்கிட்ட ப்ரோபோஸ் பண்ணிட்டாங்கன்னா.." என்று சொன்னதும்... திரும்பவும் அவனைப் பார்த்து முறைத்தாள்...

"சரி ஒருவேளை உங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாட்டாங்கன்னா... அதான் இப்பவே என்னோட லவ்வை சொல்லிட்டேன்... நீதான் இப்போ உன்னோட பதிலை சொல்லனும் பிரணா..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவன் சொல்லி முடித்ததும் சில நிமிடங்கள் மௌனத்திற்கு பின் அவள் பேச ஆரம்பித்தாள்... " என்ன சொல்ல சொல்றீங்க?? உங்களை மறுக்க எனக்கும் எந்த ரீஸனும் இல்லை..." என்று அவள் சொன்னதும் ஆனந்தப்பட்டான் வரூன்... பின் "ஆனால்" என்று அவள் ஆரம்பித்ததும் என்ன சொல்லப்போகிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தான்...

"அண்ணாவைப் பத்தி யோசிச்சீங்களா... அண்ணனுக்கு உங்க மேலே கோபம்... அப்படியிருக்க இந்த மேரேஜ்க்கு அண்ணா எப்படி சம்மதிக்கும்.... அம்மாவும் அப்பாவும் காதலுக்கு எதிரியில்லை... ஆனா அண்ணா மாதிரி நான் ஒருத்தரை காதலிக்கிறேன்... நான் அவரை மேரேஜ் செஞ்சுக்க நீங்க சம்மதிக்கனும்னு எல்லாம் என்னால நேரா அவங்கக் கிட்ட கேக்க முடியாது...

எதுவா இருந்தாலும் நான் அண்ணன் கிட்ட சொல்லி தான் அம்மா அப்பா கிட்ட பேச சொல்லனும்... அது நீங்களா இருக்கும் பட்சத்தில் நான் அண்ணன் கிட்ட எப்படி சொல்ல முடியும்... அப்படியே அம்மா அப்பா ஒத்துக்கிட்டாலும்... அண்ணன் ஒத்துக்காம உங்களை மேரேஜ் செஞ்சுக்க முடியாது...

"நீ சொல்றது புரியுது பிரணா... என்னால எங்க அப்பா அம்மாவை நேரா வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து உன்னை பொண்ணு கேக்க முடியும்.... அங்கிளும் ஆன்டியும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க... சப்னா விஷயத்துல என்ன நடந்துச்சுன்னு அவங்களுக்கு விளக்கம் கொடுக்கலன்னு தான் அவங்களுக்கு என்மேல வருத்தம்... மத்தபடி நான் சப்னா விஷயத்துல அப்படி செஞ்சிருக்க மாட்டேன்னு அவங்களுக்கு தெரியும்...

ஆனா பிருத்வி இருக்கானே அவன் எப்படி நடந்துப்பான்னு தெரியல... அவன் என்னோட அப்பா அம்மாவை ஒன்னும் சொல்லமாட்டான் தான்... இருந்தாலும் என்மேல இருக்க கோபத்துல அவங்க கிட்ட ஏதாவது தப்பா பேசிடுவானோன்னு பயமா இருக்கு... கோபம் வந்தா தான் அவன் எப்படி வேணாலும் பேசுவானே... அதான் உன்கிட்ட பேசறேன் பிரணா..."

"நீங்களே அண்ணனுக்காக தயங்குறீங்க அப்போ நான் மட்டும் என்ன செய்ய முடியும்... இது சரிவராது அதனால இந்த லவ்வெல்லாம் வேண்டாம்... உங்க அம்மா பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கங்க..."

"ஏன் பிரணா எல்லாம் முடிஞ்சா மாதிரி பேசற... இப்போ தான் யுக்தா கூட நீ குளோஸா இருக்கியே... யுக்தா இந்த விஷயத்துக்கு ஹெல்ப் செய்ய மாட்டாங்களா..??"

"என்ன வரூன் புரிஞ்சு தான் பேசறீங்களா..?? அண்ணா அண்ணி மேல கோபமா இருக்கு... இதுல அண்ணி எனக்கு ஹெல்ப் பண்ணி அதனால அண்ணனோட கோபம் அதிகமாயிட்டா.... நாங்க எல்லோரும் அண்ணனும் அண்ணியும் எப்போ சந்தோஷமா இருப்பாங்கன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கோம்... இதுல எனக்கு உதவ போய் அவங்களுக்குள்ள பிரச்சனை அதிகமாகறதை நான் விரும்பல... இது சரிவராது வரூன்... " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல எழுந்தாள்...

அவனோ... " நீ என்னைப் பிடிக்கலன்னு சொன்னாக்கூட பரவாயில்லை... ஆனா இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை... நானே இதை பார்த்துக்கிறேன்" என்று சொன்னான்... அவளோ அதை காதில் வாங்காமல் சென்றாள்..

இதையெல்லாம் யுக்தாவிடம் பிரணதி சொல்லி முடித்ததும்...

"அன்னைக்கு நான் வந்ததுக்குப் பிறகு வரூன் மெஸெஜ் பண்ணதுக்கு ரிப்ளையும் பண்ணல... அவங்கக் காலை அட்டண்ட் பண்ணவும் இல்லை... வரூன் இந்தப் பார்ட்டிக்கு வருவாங்கன்னு நான் நினைக்கல... அங்க வரூனைப் பார்த்ததே எனக்கு அதிர்ச்சி தான்... அதில்லாம அவங்க உங்கக் கிட்ட பேசவும் என்னைப் பத்தி தான் பேசறாங்களோன்னு பயம்... என்ன செய்யறதுன்னு புரியல... அதுக்குள்ள அம்மாவே உங்களை கூப்பிட சொன்னாங்க... ஆனா நீங்க என்னப் பேசிக்கிட்டீங்கன்னு தெரியல... அதை தெரிஞ்சிக்க உங்க கிட்ட கேட்டு நானே மாட்டிக்கிட்டேன்..."

"அப்போ நீ வரூனை லவ் பண்றீயா பிரணதி..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.