(Reading time: 9 - 18 minutes)

ற்று தற்காலத்திற்கு ஏற்ப மின்சாதனங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

எல்லாம் தேக்கு மற்றும் பழங்கால சந்தன மரத்தினால் ஆனது.

"கலாரசிகன்!"-என்று கூறிக்கொண்டான் அவன்.

அவ்வளவு நேரம் பயணத்த அலுப்பினால் நித்திராதேவியை நாடி சென்று உறங்க ஆரம்பித்தான் அவன்.

இனி வர போகும் துன்பங்களை அறியாமல் உறங்க ஆரம்பித்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "விடியலுக்கில்லை தூரம்.." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

றுநாள் காலை...

வழக்கத்திற்கு மாறாக விரைவாக எழுந்துவிட்டான் ஆதித்யா.இன்னும் சூரிய உதயமே நிகழவில்லை!!!இது அதிசயம் தான்.அவனுக்கே சற்று அதிர்ச்சிக்கரமாக தான் இருந்தது.

அதற்கு மேல் உறக்கமும் அவனிடம் வர மறுத்தது.

எழுந்து தன் கடமைகளை முடித்துக்கொண்டு உலவி வரும் பொருட்டு வெளியே வந்தான்.அப்போது தான் அதனை கவனித்தான்.

கோட்டையின் மிக அருகே,வெறும் இருபது அடி தொலைவில் அழகிய நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

அமைதியாக எவ்வித ஆக்ரோஷமும் இன்றி,நேராக ஓடிக் கொண்டிருந்தது.அதன் கரையில் பெரிய வில்வ மரம் ஒன்று அமைந்திருந்தது.

அந்நதிக்கு கட்டுப்பட்டவனை போல அதன் கரையில் அமர்ந்தான்.

சற்றே அந்நதி தன் எல்லையைவிட்டு வெளி வந்து அவன் பாதத்தை நனைத்தது.

ஸ்பரிசித்த குளிர்ச்சி அவன் உயிர்வரை ஊறியது.

மனதில் ஒருவித தடுமாற்றம்!!

எதையோ எண்ணி அமைதியாக இருந்தான் இயற்கை அவளின் அழகை பருகியபடி!!!

சற்று தூரத்தில் ஆதவன் உதயமானான்!!நதியின் கருவிலிருந்து பிறப்பது போல இருந்தது அக்காட்சி!!!மெய்மறந்து போயிருந்தான்.

காண்பது தான் நிஜமா?என்ற சம்பந்தமே இல்லாத கேள்வி அவன் இதயத்துள் தோன்றியது!!!

சற்று தூரத்தில் ஒலித்த,'ததோ யுத்த பரிஷ்யாந்தம் சமரே சிந்தையாஸ்மிதம்!'என்னும் ஆதித்ய ஹிருதய பாடலின் இனிமை அவன் செவிகளை தொட்டது.அந்த இனிமையை வைத்தே அக்குரலுக்கு உரியவர் யார் என்பதை கண்டறிந்தான்!!

யாத்ரா!அது யாத்ரா தான்!!

எவ்வளவு செய்கிறாள் எனக்காக??

இவளை பெறுவதற்கு தான் என்ன தவம் செய்தேன்??அவளுக்கான முழு அங்கீகாரத்தை அளிக்காத போதும் என்மேல் அவளது உரிமை நிறைந்த காதலை பற்றி யாது கூறுவேன்??ஏழேழு ஜென்மங்களாய் தொடரும் பந்தமாய் எந்த பிறப்பிலும் இவளே என் சதியாக மனம் ஏங்குகிறது!!!

மனதில் எண்ணினான் அவன்.

சில நிமிடங்களுக்கு பின்...

"கௌரி அக்கா!"

"என்னம்மா?"

"இங்கே சிவன் கோவில் எதாவது இருக்கா?"-யாத்ராவின் கேள்விக்கு கலகலவென்று சிரித்தார் கௌரி.

"எதுக்கு சிரிக்கிறீங்க?"

"நீ வேற..இந்த ஊர்ல கோவில்லே இல்லை!இதில்,சிவன் கோவிலுக்கு எங்கே போறது?"

"என்னக்கா சொல்றீங்க?"

"ஆமாம்மா!இந்த ஊர்ல செந்தில்நாதன்னு ஒரு பெரிய மனுஷன் இருக்கான்!அவனும்,அவன் பையனும் சேர்ந்து செய்யாத அட்டூழியமே இல்லை.அவன் தான் மகேசனாவது மன்னங்கட்டியாவதுன்னு கோவிலை மூடினான்."

"கடவுளே!"

"மனசுல வேண்டிக்கோம்மா!வேற ஒண்ணும் செய்ய முடியாது!"-கூறிவிட்டு கௌரி சென்றுவிட்டாள்.கலங்கி போய் நின்றவளை காண்கையில்,ஆதித்யாவிற்கு மனம் வலித்தது.தவறிழைத்தோமா?என்ற எண்ணம் கொண்டான்.

"பரவாயில்லை விடும்மா!ஒருநாள் தானே!நாளைக்கே வேற சிவலிங்கத்தை பிரதீஷ்டை செய்ய சொல்றேன்!"-ஜானகியின் ஆறுதல் மொழிகள் அவள் செவிகளில் விழ மறுத்தன.

கலங்கி போனாள் யாத்ரா.

"பயமா இருக்கும்மா"-என்று கண்ணீர் வடித்தாள்.

ஜானகி அவளை சமாதானம் செய்ய முயன்று தோற்று போனார்.

"மகேஷ்வரனை நம்பு!"-என்ற ஜோதிடரின் வாக்கியம் செவிகளில் ரீங்காரமிட்டது.

சில நொடிகள் சிலையாய் நின்றிருந்தவள்,கண்ணீரை துடைத்து கொண்டு வேகமாக உள்ளே சென்றாள் அவளது செய்கை விளங்காதவர்கள் குழம்பி போய் நின்றனர்.உள்ளே சென்றவள் ஒரு பாத்திரத்தை கொணர்ந்தாள்.

நதிக்கு அருகே சென்றவள்,நதி நீரை வணங்கியவள்,பாத்திரத்தில் நதிநீரை எடுத்தாள்.

வேதங்களில் இறைவன் பிறைசூடனின் பிம்பமாக விளங்கும் வில்வ மரத்தின் அடியில் மண்டியிட்டாள்.நதிநீரை மண்ணில் தெளித்தவள்,நிலத்தில் இருந்து சிவலிங்கத்தை வடிக்க தொடங்கினாள்.

அதுவரை அவளை குழப்பத்தோடு  பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் இப்போது ஆச்சரியத்தோடு பார்த்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.