(Reading time: 21 - 41 minutes)

தற்குள் மன்னன் அவனை போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது எனச் சொன்னதைச் சொல்லி முடித்திருந்தார் அந்தணர்.

கண்களும் மனமும் மதிவதனியால் ஈர்க்கப் பட்டிருந்தாலும் அவன் செவிகள் மன்னன் சொல்வதாய் அந்தணர் சொல்லியதைக் கேட்கத்தான் செய்தது.ஏமாற்றத்தின் சாயல் அவன் முகத்தில் தோன்றி மறைவதைக் கண்ட மதிவதனியின் மனம் தவித்தது.தன்னின் இந்த பதினெட்டு வயது வரை தந்தையே என் உயிர் அவரும் அவரின் வார்த்தைகளுமே என் உயிர் மூச்சு என் தந்தை..இவர் என் தந்தை..என்று அவரின் பாசத்தில் கட்டுண்டு அவர் விரல் பிடித்து நடந்து தந்தை தந்தை என்று அவரையே வளைய வந்த மதிவதனிக்கு தந்தை மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த அந்த மன்னனின் மகளுக்கு முதன் முதலாய் தன் தந்தையின் மீது கோபம் வந்தது.என்ன இவர்?இப்படியா சொல்வது?போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் இவரும் ஒரு நாட்டின் இளவரசன் தானே?அந்தத் தகுதி ஒன்றே போதாதா என்ன?பாவம் அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறதே.. தந்தை ஏன் இப்படி நியாயம் இன்றி நடந்து கோள்கிறார்?இதை நான் எப்படி எடுத்துச் சொல்ல முடியும் தந்தையிடம்?...என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள் மதிவதனி.பதினெட்டு வருடம் தந்தையின் செல்லப் பெண்ணாக வளர்ந்தவள் பத்து நிமிடங்களுக்கு முன் சந்தித்தவனுக்காக தவிப்பதும் உருகுவதும் என்ன செய்வதென யோசிப்பதும் என்ன இது? காதல் கொண்ட பெண்ணின் மனது கண நேரத்தில் மாறிவிடுமோ?தந்தை மட்டும் இவரை அனுமதித்தால் நொடியில் மதம் கொண்ட யானையை அடக்கிய இவருக்கு இப்போட்டிகளில் ஜெயிப்பது கடினமான காரியமாய் இருந்துவிடுமா என்ன?இப்படியெல்லாம் மதிவதனி யோசித்து முடிப்பதற்குள் ஹஸ்த குப்தன் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு மன்னரிடமும் ராணியிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.அப்படிக்கிளம்பியவன் சரேல் என மதிவதனியின் கண்களைக் கண்களால் சந்தித்துவிட்டு மேடையை விட்டுக் கீழ இறங்கி நடக்கத் தொடங்கினான்.அப்படி நடந்து செல்லும் அவனைப் பின் தொடர்ந்து மதிவதனியின் மனமும் சென்றது.இனி மதிவதனி இது வரை இருந்த மன்னன் அதிவீரன்--ராணி ருக்மாவின் பாசமிகு மகளாய் இருக்கப் போவதில்லை.

அன்று அத்தோடு போட்டிகள் நிறுத்தப்பட்டன.இனி மறு நாள் தொடரும் என அறிவிக்கப் பட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

எப்போதும் தாயிடமும் தந்தையிடமும் தம்பியிடமும் கலகலப்பாய் பேசக் கூடியவள் அன்றைய போட்டிகள் முடிந்து அரண்மனை திரும்பியபிறகு யாரிடமும் பேசாமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.உணவையும் மறுத்துவிட்டுப் படுத்து விட மனம்... வந்து சென்றவனை தன் மனதைக் கொண்டு சென்றவனையே நினைத்திருக்க தன் அருகே அமர்ந்து கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தோழி சுசீயையும் கவனிக்க மறந்திருந்தாள்.

மதீ...நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படி என்ன யோசனை..?

இப்போதும் தோழி வந்ததையொ அவள் கேட்ட கேள்வியையோ கூட உணராமல் படுத்திருந்தாள் மதிவதனி..

மனம் முழுதும் ஹஸ்தனின் ஆக்ரமிப்பு.

என்னவாயிற்று இளவரசிக்கு..?நான் ஊர் சென்று திரும்ப பத்து நாட்கள்தானே ஆயிற்று அதற்குள் என்னவாயிற்று இளவரசிக்கு?..

இளவரசி மதீ..தோளைத் தொட்டு அசைத்தாள் சுசீ..

ஹா...நீ எப்போதடி வந்தாய் சுசீ..?

நன்றாய் இருக்கிறது கேள்வி...நான் வந்து வெகு நேரம் ஆகிறது..ஆனால் நீங்கள்தான் இங்கில்லை போல் தெரிகிறது..

ஐயே....நான் இங்குதானே இருக்கிறேன்..எங்கே சென்றுவிட்டேன்...

வாய்தான் சொல்கிறது..ஆனால் மனம் எங்கே உளளதென்று தெரியவில்லையே..?ஒரு வேளை போட்டியில் கலந்து கொள்ள வந்த ராஜகுமாரர் யாராவது தங்கள் மனதைக் கொள்ளையடித்து விட்டாரோ?

..............

சட்டென முகம் வாடிப் போயிற்று மதிவதனிக்கு..தோழி சுசீ கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருக்கவே..இளவரசி..நான் உங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேனா?...என்று கேட்டாள் சுசீ..

ப்ஸு..இல்லை அப்படியொன்றும் இல்லை..

இளவரசியின் மனதில் ஏதோ ஒன்று ஓடுவது புரிந்து போயிற்று தோழி சுசீக்கு..எப்போதும் கலகலப்பாக இருக்கும் இளவரசி இன்று இப்படி சுரத்தின்றி இருப்பது ஆச்சரியமாக இருதது சுசீக்கு.

சரி மதி... சொல்லாவிட்டால் விடுங்கள்..நீங்கள் இன்னும் உணவருந்தவில்லையாமே..மகாராணி உங்களை அழைத்து வரச் சொன்னார்..

இல்லை சுசீ எனக்குப் பசியில்லை..

அவள் சொல்வது அப்பட்டமான பொய் என்பது சுசீக்குப் புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.