(Reading time: 21 - 41 minutes)

றை வாசலில் அரவம் கேட்க..உள்ளே நுழைந்து கொண்டிருந்தார் ராணி ருக்மா தேவி...

மதி..ஏன் உணவருந்த வரவில்லை..உடம்பு ஏதும் சரியில்லையா..?கேட்டுக் கொண்டே வந்தவர் மதிவதனியின் நெற்றியைத் தொட்டுப்பார்த்தார்.காய்ச்சல் இருப்பதுபோலவும் தெரியவில்லையே ஆனாலும்

உன் முகம் ஏன் இப்படி வாடியிருக்கிறது மகளே..?

எனக்கு ஒன்றும் இல்லை..தயவு செய்து என்னைக் கொஞ்சம் தனியே விடுங்கள்..எனக்குத் தனிமையில் இருக்க வேண்டும் போல் உள்ளது..என்றாள் மதிவதனி.குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது.இது வரை மகள் கோபப்பட்டு ஒரு முறைகூட பாத்ததில்லை என்பதால் மகளின் கோபம்  ராணியை ஆச்சரியப்படுத்தியதோடு சிந்திக்கவும் வைத்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

சரி மகளே நீ ஓய்வெடு நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன்..என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டுக் கிளம்பினார்.

நானும் சிறிது நேரம் கழித்து வருகிறேன் மதி என்றபடி கிளம்பினாள் சுசீ.தன்னை இளவரசி இருக்குபடி சொல்லுவார் என நினைத்த அவள் மதிவதனியின் மௌனத்தால் ஏமாந்து போனாள்.

ரவு முழுதும் அவனைப் பற்றிய சிந்தனையே அவளுக்கு.போட்டி நடக்குமிடத்திலிருந்து ஏமாற்றத்துடன் கிளம்பியவர் எங்கே போயிருப்பார்?தன் நாடு செல்ல பயணத்தைத் தொடங்கியிருப்பாரோ?என்னைப் பற்றிய எண்ணம் அவருக்கு இருக்குமா இருக்காதா?ஒரு வேளை நான்தான் அவரைப் பற்றிச் சிந்திக்கிறேனோ?

பின் அவர் கண்கள் நொடி நேரமே என்கண்களைச் சந்தித்தபோதிலும் ஆயிரம் விஷயங்களையல்லவா அவை சொல்லிவிட்டன?வாய்வார்த்தை பேசவில்லை.பேச எண்ணினாலும் கூட இருவருக்கிடையேயும் புரியாத மொழி...மனதைப் புரிந்து கொள்ள மொழி வேண்டுமா என்ன.?கண்கள் பேசும் மொழி போதாதா?இல்லாவிடில் அவர் கண்களால் சொன்னதாக நான்தான் புரிந்து கொண்டேனா?இனி ஒருமுறை அவரைக் காணும் வாய்ப்பு கிட்டுமா?நாளை நடக்கும் போட்டியில் எந்த நாட்டு இளவரசனாவது ஜெயித்து விட்டால்

என் நிலமை என்னாகும்..?இல்லை இல்லை முடியாது..இனி எவனாலும் போட்டியில் ஜெயிக்க முடிந்தாலும் என் மனதை ஜெயிக்க முடியாது..என் மனம் என்னிடம் இல்லை...உறக்கமின்றி பலவாறு

மதிவதனி சிந்தித்துக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக இரவு கழிந்து பொழுதுபுலர்ந்தது.

ன்று போட்டியின் ..நான்காம் நாள்.வேண்டா வெறுப்பாய் வந்து அமர்ந்திருந்தாள் மதிவதனி.யாருடனும் பேசவில்லை.அவளின் மௌனத்திற்குக் காரணம் புரியாமல் தவித்தனர் மன்னனும் ராணியும்.இன்றைய போட்டியில் எந்த இளவரசனும் வெற்றியடைந்து விடக்கூடாதென்று இறைவனை வேண்டியபடி அமர்ந்திருந்தாள் மதிவதனி.அவளின் பார்வை போட்டியைக் கவனிக்கவில்லை.அதையும் தாண்டி யாரையோ தேடுவதைப்போல் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் பகுதியையே சுற்றிச் சுற்றிவந்தது.அவர்களில் ஒருவனாய் அவன் இருக்க மாட்டானா என்றே கண்களும் மனதும் தேடின.இவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடி அவளின் அருகே அமர்ந்திருந்த சுசீக்கு ஏதோ கொஞ்சம் புரிபட ஆரம்பித்தது போல் இருந்தது.

ஹஸ்தன் பார்வையாளர்கள் கூட்டத்தில் இருக்க மாட்டானா என தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்த மதிவதனியை இரண்டு கண்கள் அவளை அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தன என்பது என்னவோ உண்மை.ஆம் ஹஸ்த குப்தன் தன் சுய வடிவத்தில் இல்லாமல் மாறு வேடத்தில் கூட்டத்தினரோடு ஒருவனாய் நின்றுகொண்டு மதிவதனியை தன் மனதைக் கவர்ந்தவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.அவள் கண்கள் தன்னைத் தேடுவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.மன்னனிடமும் மகாராணியிடமும் விடை பெற்றுச் சென்றானேயொழிய அவனால் நாடு திரும்பிச் செல்ல முடியவில்லை.

நெஞ்சம் முழுதும் நிரம்பியிருந்த மதிவதனியை விட்டு வெகு தூரம் விலகிச் செல்ல அவனால் முடியவில்லை.எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் எதற்கும் அஞ்சாத தீரனாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மீது காதல் வந்து விட்டால் அந்த உணர்விடம் அவன் தோற்றுதான் போவானோ?அப்படித்தான் மதிவதனியைத் தவிற வேறு சிந்தனை ஏதும் இல்லாதவனாய் மாறிப் போனான் ஹஸ்த குப்தன்.அது எப்படி?இருவரும்  ஒருவரை ஒருவர் பல முறை பார்த்துக்கொள்ளவும் இல்லை.வாய்விட்டுத் தங்களின் காதலைப் பரிமாறிக்கொள்ளவும் இல்லை..நொடி நேரமே கண்கள் சந்தித்துக்கொண்டன.ஆயினும் எப்படி இப்படி?ஓ..இதுதான் காதலா?...

சோழ நாட்டு இளவரசர் விமலாதித்தனும் சேரனாட்டு இளவல் மாறவர்மனும் மட்டுமே களத்தில் மிஞ்சினர்.

ஒருவரை ஒருவர் வீழ்த்தக் கடும் போட்டி.அதிவீரன் பரபரப்பாய் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இருவரில் வெல்லப்போவது யார்.தன் அன்பு மகளின் கரம் பிடித்து பாண்டி நாட்டின் மருமகனாய் ஆகப்போவது யார் என்று பார்த்துக்கொண்டிருந்தார் அந்த பாசம் மிக்க தந்தை.ஆனால் மகளின் மன நிலையும் வேண்டுதலும் வேறாக அல்லவா இருந்தது.போட்டியாளர்கள் இருவரில் யார் ஜெயிக்கிறார்களோ தோற்கிறார்களோ அனால் இங்கே ஜெயிக்கப் போவது தந்தையா மகளா..?விதி என்ன செய்யப் போகிறது..?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.