(Reading time: 7 - 14 minutes)

" ளினி ?""

"இங்க கூட்டிட்டு வரும்போதே அண்ணன் , ஆட்டுகுட்டின்னு சொந்தம் கொண்டாடதேன்னு நீங்கதானே சொன்னிங்க ? இப்போ எந்த உரிமையில  நான் உங்க பையன் கிட்ட சண்டைக்கு போறதாம் ?".. கேள்வியாலேயே கணவரை மடக்கினார் நளினி ..

" ஹே அம்மாவும் மகனும் ஏதாச்சும் நாடகம் போடுறிங்களா  ?"

"அமாங்க .. அது ஒண்ணுதா இப்போ குறைச்சல் .. '"

" உங்களுக்கு வேணும்னா நீங்களே அவனை அடக்கி வைங்க .. உங்க பையன்கிட்ட என்னால  ஒன்னும் பேச முடியாது "என்று விருட்டென அங்கிருந்து  நகர்ந்தார் நளினி ..

"அம்மாவுக்கும் பையனுக்கும் பேசிட்டு இருக்கும்போதே பாதியில போறது  வேலையா போச்சு "என்று முணுமுணுத்தார் ஞானபிரகாஷ் .. அதே நேரம்  நந்திதா  அவர் கண்ணில் தென்பட ,

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்திடலமா  என்ற எண்ணத்துடன் , அவளை தேடி சென்றார் அவர் ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

" நந்திதா "

"சொல்லுங்க மாமா "

" நீ ரூமுக்கு போக வேணாம் "

"அத்தான் காபி கேப்பாங்க "

" அவனுக்கு நளினி காபி கொடுப்பாள் "

"மாமா "

"என்ன ? நான் சொன்னால் செய்ய மாட்டியா ?"

" அபப்டி இல்லை .. அப்பறம் அத்தான் திட்டுவாங்க .."

" நீ இங்க இருந்தாதானே திட்டுவான் அவன் ? இன்னைக்கு நீ என் கூடவே இரு ... நாம கோவிலுக்கு போகலாம் வரியா ? " இயல்பாய் கேட்டார் ஞானப்ரகாஷ் .. ஆனால் அவர் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்தது அவளின் முகபாவனை .. இரு விழிகளும் கலங்கிட அப்படியே உறைந்து நின்றாள்  நந்திதா ..

தன் மாமா , உரிமையுடன் தன்னை அழைத்து விட்டார் என்ற மகிழ்ச்சி அவளுக்கு .. என்னமோ  " என் மகன் உனக்குத்தான் "என்று அவர் சொன்னது போல சந்தோஷப்பட்டாள்  அவள் ..

"ஏன் அழற இப்போ ?"

"இல்ல மாமா ... 10 நிமிஷம் கொடுங்க ரெடி ஆகிடுறேன் ".. அவள் விழிகளில் தெரிந்த சந்தோசம் அவரையும் ஒரு கணம் கனிய வைத்தது .. "அப்படி என்ன சந்தோசம் என்னோடு வருவதில் ? அவ்வளவு அன்பா ? அதுவும் நான் பேசாமல் இருக்கும்போதே வா ? " நிறைய கேள்விகளுக்கு இடையில் அவரின் ஆழமானது சொன்னது ஒரே விஷயம் தான் .. நந்திதா சுபாங்கியை போல அல்ல , நளினியை போல ! அந்த ஒரு எண்ணமே அவருக்கு நிறைவை தந்தது ..

துள்ளலுடன் தனது அறைக்கு சென்ற நந்திதா , என்ன புடவை கட்டலாம் என்ற ஆராய்ச்சியின் இறங்கினாள் .. முதன்முறை அவளின் மாமாவுடன் கோவிலுக்கு போகிறாள் .. "ஐயோ ஊரே பார்க்கும் "சந்தோஷமாய் இருந்தாள்  அவள் ..

"ஹே லூசு , அந்த சாரீ  வேணாம் ..இதை கட்டிக்கோ "ரகசியாமாய் குரல் கொடுத்தான் சந்துரு .. அவளின் அறையில் திருட்டு தனமாய் நின்றவன் , கையில் ஒரு புடவையோடு நிற்க , புடவையை விட்டுட்விட்டு அவனை கட்டிக் கொண்டாள் ..”

" அத்தான் .. ஐ லவ் யூ அத்தான் .. இப்போ நான் அனுபவிக்கிற சந்தோசம் உங்களினால் தான் .. ஐ லவ் யூ "என்றவள் எம்பி அவன் இரு கன்னத்திலும் முத்தமிட்டாள் .. அவளின் திடீர்ன் அணைப்பிலும் முத்தத்திலும் மயங்கிவன் , பெற்றதை எல்லாம் இரட்டிப்பாய் திருப்பி தந்தான் ..

" எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா அம்மு .. உன்ன திட்டுறதுக்கும் அதட்டுரதுக்கும் மனசே வரல .. ஆனா , இப்போ உன் கண்ணுல தெரியுற சந்தோஷத்தை பார்க்கும்போது இதெல்லாம் தப்பு இல்லன்னு தோணுது .. "

"வீட்டுக்கு வந்ததுமே நீங்க என்னை மொறைச்சு பார்த்தாலும் , அப்போவே எதோ ப்ளான்  போடுறிங்கன்னு மனசு சொல்லிட்டே இருந்தது ..அதே மாதிரி நீங்க உங்க திட்டத்தை சொன்னதும் நல்லது நடக்கனும்னு நானும் ஒத்து கிட்டேன் .. எல்லாம் சரி ஆகிடும் ல அத்தான் ... நான் உங்களுக்கு தானே ?

"ம்ம்ம்ம் இந்த கோழி மொட்டை கண்ணும் , குண்டு குண்டு கன்னமும் எனக்கே எனக்கு தான் "

"ம்ம்ம்ம்ம்கும்ம்ம்ம் போதும் கை எடுங்க.. நான் கிளம்பனும் ..வெளில போங்க "

"அடிப்பாவி , புருஷனை வெளில அனுப்புற ? அப்போ அவ்வளோதானா ?"

"வெளில என் மாமனார் வைட் பண்ணுறார் புருஷா ..அதுனால அப்படித்தான் ..வெளில போங்க "என்றவளை  பார்த்து சந்துரு முறைக்க , போனால் போகட்டும் என்றும் மீண்டும் அவனுக்கு முத்தமிட்டு அனுப்பி வைத்தாள் ... பாஸ்கரனிடம் சொல்லிவிட்டு கோவிலுக்கு கிளம்பினாள்  அவள் ..

காரில் ,

" என்ன மாமா அடிக்கடி என்னை பார்க்குறிங்க ... ?"

""..""

"உன்கிட்ட ஒன்னு சொல்லணும் மா "

"சொல்லுங்க ""

அது என்னனு அடுத்த வாரம் சொல்லுறேன் ...

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 33

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 35

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.