(Reading time: 12 - 24 minutes)

தியின் அம்மாவிற்கு தன் பையன் எங்கே சென்று விடுவானோ என்ற கவலை வந்தது, இதுவரை அவர் இப்படி எல்லாம் யோசித்தது இல்லை.. அவர் ஆதி தன் மாமியார் வீட்டிற்கு செல்கிறான் என்பதை விட, தன் கணவர் வீட்டார் முன், தன்னை விட்டுக் கொடுத்து விடுவானோ என்ற பயம்தான் பெரிதாக இருந்தது. அவர் இன்று வரை அவர்களுக்கு பயப்படுவார்.

ஆதி எப்படி நிலைமையை சமாளிக்க என்று யோசித்து கொண்டிருக்க, அவன் பெரியப்பாவோ , தன் பெண், மாப்பிளையோடு , ஆதியின் இன்னொரு பெரியப்பா, பெரியம்மா என எல்லோரையுமே அழைத்து வந்தார்.

வீட்டிற்குள் நுழைந்த கும்பலை பார்த்த ஆதி ஒருகணம் திகைத்தவன், பிறகு எல்லோரையும் விருந்தோம்பினான்.

ஆதி அம்மாவும் செய்வதறியாது முழித்தவர், பின் எல்லாரையும் வரவேற்றார்,

இத்தனை பேரை எவ்வாறு ஹோடேல்க்கு அழைத்து போக, என்பதோடு , அவர்கள் எதிரில் தன் அம்மாவை மட்டும் எப்படி தனியாக விட்டு செல்ல என்று தெரியவில்லை ஆதிக்கு.

இத்தனை பேரை பார்த்த ப்ரயு, மளமள வென்று சமையலை ஆரம்பித்தாள். உதவிக்கு ஆதி அம்மா, பெரியம்மாக்களும் வரவே எல்லோருமாக சேர்ந்து திருப்தியாகவே விருந்து செய்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

எல்லோரும் சாப்பிட்டு விட்டு கிளம்ப மணி பதினொன்று ஆகியது.

அதுவரை ப்ரயு, ஆதியிடம் எதுவும் பேசவில்லை ஆதி அம்மாவிற்கும் ஒரு மாதிரி கஷ்டமாகதான் இருந்தது. இன்று ப்ரயு கொஞ்சம் முகம் காமித்து இருந்தாலும்  மானம் கப்பல் ஏறி இருக்கும்.. அவர் உணர்ந்துதான் இருந்தார். ஆனாலும் அந்த கெத்து அவர் விடவில்லை.

தங்கள் அறைக்கு சென்ற ஆதியும், பிரயுவும் அமைதியாக இருந்தனர். ஆதி தான் முதலில்

“ப்ரயு .. சாரி டா.. இன்னிக்கு உன்னை கூட்டிட்டு வெளியே கிளம்பலாம் னு நினைச்சேன்.. ஆனால் இப்படி ஆகிட்டது”

ப்ரயு எதுவும் பேசவில்லை. ஆதி மீண்டும் மீண்டும் அவளிடம் பேச வர, அவள் மௌனமே பதிலானாள்.

“ப்ரயு.. நான் நாளைக்கு கிளம்பனும்.. இத்தனை நாள் நாம் கொஞ்ச நேரம் ஆசையா பேசக் கூட முடியல.. இன்னிக்காவது சந்தோஷமா பேசிட்டு இருக்கலாம்.. ப்ளீஸ்.. “

“என்னாலே முடியல... ஆதிப்பா.. நீங்க வந்து இத்தனை நாள் நான் எதாவது உங்கள தொந்தரவு பண்ணினேனா? எனக்காக இன்னிக்கு ஒரு அரை நாள் கூட ஒதுக்க முடியாதா.. ? “

“ஹே.. அப்படி எல்லாம் இல்லை டா... நான் நேத்தே வேலை முடிஞ்சுரும்னு நினச்சேன்.. ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டி இருந்தது.. அதனால் தான் இன்னிக்கு போயிட்டு வந்தேன்.. ஆனால் பெரியப்பா வீட்டுலே இப்படி பண்ணுவாங்கன்னு நானும் எதிர்பார்க்கல”

“அவங்கள சொல்லாதீங்க.. அத்தை இப்படிதான் எதாவது கிளப்பி விட்டு போயிடறாங்க “

ஆதிக்கு அவன் அம்மாவை எண்ணி கோபம் வந்தது.. ஆனாலும் பிரயுவிடம் விட்டு கொடுக்க முடியாமல்,

“அவங்க என்ன பண்ணுவாங்க.. ? வாய் வார்த்தையை சொன்னத அவங்க பிடிசுக்கிட்டங்க... “

“உங்க வீட்டுலே யாரையும் விட்டு கொடுத்துடாதீங்க... ஆனால் என்னை மட்டும் விட்டு கொடுத்துடுங்க..”

“உன்னை எப்போடி விட்டு கொடுத்தேன்.. நான் உனக்காக தானே அம்மாகிட்ட பேசினேன்.. “

“அதுக்கு ரிசல்ட் என்ன ?”

“இது எல்லாம் சூழ்நிலைதான் காரணம்.. யாரு மேலையும் தப்பு சொல்ல முடியாது.”

சற்று நேரம் அவளிடம் வாதாடியவன், பிறகு அவளை சமாதனம் செய்யும் பொருட்டு,

“சரி.. விடு.. ரதி குட்டி.. நாளைக்கு காலை முதல் கிளம்பும் வரை உன்னோடதான் நான்.. எங்கே எல்லாம் போகணும்னு சொல்றியோ.. போகலாம்.. “

பிரயுவிற்கு சமாதனம் ஆகவில்லை என்றாலும் அவனிடம் சண்டை போடவும் விருப்பம் இல்லாமல், அமைதியாக படுத்து விட்டாள்.

ஆதியோ மனதில் ஏதோ ஏதோ எண்ணி வந்தால் , இங்கே நிலைமை ஒன்றும் சரி இல்லையே... ஏன் தனக்கு மட்டும் எப்படி என்று மனதினுள் புலம்பினான்.

மறுநாள் காலை டிபன் முடித்து கிளம்பலாம் என்று எண்ணியிருந்தால்., அண்ணனை வழி அனுப்ப என்று வித்யா காலையிலேயே வந்து விட்டாள்.

ஆதியின் அம்மா கூட சற்று சங்கடப்பட்டு விட்டார். ஜாடையாக தன் மகளிடம்

“என்ன வித்யா.. சொல்லவே இல்லியே ? நீ சாயங்காலம் அவன் கிளம்பும் போதுதான் வருவன்னு நினைச்சேன்”

தனியாகத்தான் கேட்டார். மாப்பிள்ளை காதில் விழுந்தால் வம்பு என்று.

வித்யவோ “இல்லை மா.. சாயங்காலம் ஒரு கல்யாணம் reception இருக்கு... அதுதான் இங்கே வந்து அண்ணனோட இருந்துட்டு மதியனமா கிளம்பலாம் என்று சீக்கிரம் வந்தேன்”

அவருக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. ப்ரயு அவர்களை பார்த்தவள் , ஆதியை நேராக பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

ஆதிக்கு ஒரே வருத்தமாக போய் விட்டது. குழந்தையை அவன் அம்மா ரூமில் வித்யாவும், அவள் கணவரும் தூங்க வைத்து இருக்க, ஆதியின் அம்மா ஹால் இல் இருந்தார்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.