(Reading time: 21 - 41 minutes)

ப்படி தனி ரோட்ல கொள்ளையடிக்கவங்க உண்டு போல….’ இதுதான் இவளது முதல் எண்ணம்…ஒரு வேளை கதவை திறந்து இவளை உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு போய்விட்டால்…..??!! அந்த அலறடிக்கும் நினைவில்தான் இவள் பதறிப் போய் அபயன் பின் சென்று நின்றது….

 ஆனாலும் அடுத்த நொடி உறைக்கிறது உள்ளே தெரிந்த மூனு நெத்தியும் வெளிநாட்டு வெண்ணெய் கலர் நெத்தி கிடையாது….. இதற்குள் அதில் ஒன்று இவளது க்ளாஸ்மேட் அகில் என புரிய அடுத்து மெல்ல புரிகிறது மூனுமே அவ க்ளாஸ்மேட்ஸ்தான்…...

அத்தனை நிம்மதி வந்ததுதித்தது அவளிடம்…… இவனுங்களுக்கு விளையாட வேற டெக்னிக்கே இல்லையா….இவனுங்கள இழுத்துப் போட்டு சாத்தனும்…. என இவள் நினைப்பதை முழுதாக உணரக் கூட விடாமல் தடுத்தது அவர்களது அவசர சைகை…ஏனோ யாரும் கதவை திறக்கவில்லை…..வின்டோவைக் கூட இறக்கவில்லை…..

அவர்கள் சைகையில் அப்படி என்ன செய்கிறார்கள் என புரியாமல் இவள்தான் முழித்தபடி நின்றாள். ஆனால் அபயனோ அவர்கள் சகை புரிந்தவனாக…அவசர அவசரமாக இவள் சூட்கேஸை மூடி….காரின் டிக்கியை திறந்து அவளது அனைத்து லக்கேஜையும்  உள்ளே தூக்கி வைத்தான்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

இதை தான் செய்ய சொல்லி இருக்கின்றனர் என்பதே அடுத்து தான் அவளுக்குப் புரிகிறது…. அதற்குள் காரின் கதவை படு வேகமாய் உள்ளிருந்த ஒருவன் திறக்க…. குனிந்து ஏறப் போனவள் காதில் விழுகிறது காரின் ரேடியோவில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த அறிவிப்பு….

இவர்கள் செல்ல வேண்டிய வழியில் எங்கேயோ ஒரு பேக்டரியில் ஏதோ விபத்தாம்….. காற்றில் ஆபத்தான ஏதோ ஒன்று பரவுகிறதாம்…. முகமூடி அணிந்து, வாய் திறந்து பேசாமல் அந்த பகுதிகளைவிட்டு மக்கள் கடந்து போக வேண்டுமாம்…..

ஆக அதனால்தான் இவளை இப்படி இறக்கி விட்டுவிட்டு அந்த ட்ரைவர் ஓடி இருக்கிறார்…..இதனால்தான் ஏர்போர்ட் டாக்சிகள் இயங்கவில்லை…..ரிஸ்க் எடுக்க தயங்காதவர்கள்  எக்கச்சக்க  பணம் வாங்கிக் கொண்டு வாகனத்தை இயக்கிக் கொண்டு இருக்கின்றனர் போலும்….

இதற்குள் இவள் கை  தன் துப்பட்டாவை அதுவாக பிடிக்க………அதே நேரம் இவளை வழி அனுப்பும் விதமாக அபயன் விலகினான்…

காரில் ஏற்கனவே ட்ரைவர் தவிர மூன்று பேர்…. இப்போது இவளும் என்றால்….?? அபயன் தான் உடன் செல்ல வேண்டும் என நினைக்கவே இல்லை…

உள்ளே நம்ம ஊர் முகத்தைப் பார்க்கவும்….காருக்குள் இன்னொரு நபருக்கு இடமில்லாத போதும் காரை நிறுத்தி இருப்பது புரியவும்… அவர்கள் அவளுக்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என புரிந்து கொண்டு….. அவள் பத்திரமாக போய்விடுவாள்…..அடுத்து தன்னைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தான் அவன்.

அதோடு குளிரை இப்போது முழுமையாக உணரத்தொடங்கி இருந்தான் அல்லவா…ஆக குளிரின் நிமித்தம் அவர்கள் மாஸ்க் போட்டிருக்கிறார்கள்…..வின்டோவை கூட திறக்கவில்லை…..இந்த பகுதி குளிருக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் போல எனதான் நினைத்தான்.…

அந்த அபாய அறிவிப்பை அவன் எதுவும் கேட்டிருக்கவில்லையே…. அதோடு அது ரஷ்யனில் வேறு இருந்தது….ஆக அவன் விலக….

தன் பின் நின்றிருந்தவன் விலகி நகர்வதை உணர்ந்த பவியோ….வாயை வேறு திறக்க கூடாது என்ற அறிவிப்பின் நிமித்தம் சட்டென அவன் கையைப் பற்றி நிறுத்த….ஒரு கணம் ஒன்றும் புரியாமல் அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன்….

பார்வையில் விழுந்தன அவள் பரிதவிக்கும் விழிகள்….அதிலிருந்த தீவிரம் அவனுக்கு எதோ சரி இல்லை என புரியவைக்க…..’என்ன’  என கேட்கும் நோக்கத்தில் அவன் வாய் திறக்க முனைந்தான்.….அதையும் அவசரமாக தடை செய்தது அவள் கரம்….

பின் அவசரமாக அவனை அவள் வேகமாக காருக்குள் தள்ளாத குறையாக இழுக்க….ஏதோ விஷயம் என புரிந்தவன் மறுப்பு சொல்லாமல் காருக்குள் வேகமாக ஏறி அமர்ந்தான்…. தன் துப்பட்டாவால் தன் நாசியை மறைத்துக் கட்டியபடியே அவசரமாக அவளும் உள்ளே வந்தாள்……இல்லை வர முனைந்தாள்….. அவள் எங்கு உட்காரவாம்….?

ஒரு கணம் தயங்கியவள்….அவன் முகத்திலிருந்த தர்ம சங்கடம் உணர்ந்து…..எதையும் முகத்தில் காட்டாமல் இவளுக்காய் பின் இருக்கையில் இருந்த மூவரும் மிகவும் சமாளித்து ஒதுக்கி இருந்த அந்த குட்டியோண்டு இடத்தில் முடிந்தவரை தன்னை குறுக்கி அமர்ந்து கதவை மூட…அடுத்த நொடி கார் நகர தொடங்கியது….

 கதவோடு கதவாக ஒண்டிய பவி அவளுக்கு அடுத்து இருந்த அபயனுக்கு விஷயம் என்னவென விளக்க தன் மொபைலில்  மெசேஜாக விஷயத்தை டைப்செய்து காண்பித்தாள் அவனிடம்….

அவ்வளவுதான் இப்போது அவசர அவசரமாக தன் மொபைலை எடுத்து அதியை தொடர்பு கொள்ள முயன்றான் அபயன். அதிக்கு யாரும் விஷயம் சொல்லி இருப்பார்களா?   இங்கு எல்லாமே ரஷ்யனில் வேறு இருக்கிறது…..அதோடு அன்ஃப்ரெண்ட்லி பீபுள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.