(Reading time: 21 - 41 minutes)

வன் மனம் இப்படி தன் அண்ணனுக்காய் தவிக்க…..பவிக்கோ இன்னும் அவன் மாஸ்க் எதுவும் போடவில்லையே என்பதில் போய் நிற்கிறது மனது…. கண்களில் போபால் விஷ வாயு கசிவின் கோர புகைப்படங்கள் ஊர்வலம்….

அவன் மொபைலை குடையும் விதமே மிக நெருங்கியவரை தொடர்பு கொள்ள முயலுகிறான் என புரிவிக்க…. இரண்டு நொடி பொறுக்க முடியாமல் பொறுத்துப் பார்த்தாள்…..

ஆனால் அபயனோ முதலில் அதிபனுக்கு மிஸ் கால் கொடுத்து….அடுத்து அவன் எண்ணுக்கு விஷயத்தை மெசேஜாக டைப் செய்து….அவனிடமிருந்து பதில் பெற காத்திருக்க  ஆரம்பித்தான்…. ஆக அவன் கவனம் மொத்தமும் அதில் தான் இருந்தது….

உயிர் காக்கும் மருத்துவம் படிப்பதாலா….இல்லை அது அவன் என்பதாலா…? இவளுக்காக அப்படி அடுத்த நாட்டில் எதையும் யோசிக்காமல் இறங்கி வந்தானே அதனாலா…? இல்லை எல்லாவற்றினாலுமோ…. எது அவளை உந்தியது என சொல்வதற்கில்லை….

கையில் அவனுக்காக எடுத்த ஷால் வைத்திருந்தாள் அல்லவா..? அதை ஒரு கணம் பார்த்தவள்......அதன் அடர்த்தி காரணமாக அதில் அவன் மூச்சுவிட முடியுமா என ஒரு சந்தேகம் வர….

தான் நாசி மறைத்து கட்டி இருந்த துப்பட்டாவின் அடுத்த ஓரத்தை எடுத்து அவசரமாக அவனுக்கு கட்டி வைத்தாள்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

தன் வேலையில் மும்முரமாக இருந்த அபயன் அவள் செயலின் தொடக்கத்தில் நிகழ்வுக்கு வந்து….சட்டென பின் வாங்க முனைந்தாலும் அவள் செயலின் அர்த்தம் புரிய…. என்னதான் அவள் ஒரு மெடிகல் ஸ்டூடண்ட் என அவன் இதற்குள் ஊகித்திருந்தாலும்……ஒரு நர்ஸின் காயம் கட்டும் செயலுக்கும் இதற்கும் வித்யாசம் எதுவுமில்லை என அறிவு அடித்து சொன்னாலும்…….ஏனோ இந்த நொடி அவன் அவளில் உணர்ந்தது தாய்மையை….. ஆடித்தான் போனான் அவன்…..

இதில்தான் அவன் காதலில் விழுந்தான் என்று சொன்னால் அது அபத்தம்…

. ஆனால் அவன் அஸ்திவாரம் அசைக்கப்பட்டதும்….அவளை அன்னியளாய் உணராமல் செய்ததிலும் இந்த செயலுக்கும் பங்கு இருக்கிறது என்பது என்னவோ உண்மை…..

இவன் தலைக்குப் பின்பாக முடிச்சிட அவள் முயன்று கொண்டிருக்க……இப்பொழுது இத்தனை வயதில் கூட குளித்த முடியை இவன் சரியாக துவட்டாமல் விட்டிருப்பதை அம்மா பார்த்தால் அடுத்த நிமிடம் சில திட்டுகளுடன் கையில் டவலெடுத்து இவனுக்கு துவட்டிவிடும் அந்த உணர்வு நிலை இவன் நரம்புகளில்……..

முயன்று கொண்டிருந்த அவள் கைகளிலிருந்து அந்த முனைகளை வாங்கி தானே அதை செய்து முடிக்க நினைத்தான்தான்…..இருந்த இட நெரிசலில் அதற்காக தன் கைகளை  இவன் அசைத்தால் கூட, இவனை எக்கி சூழ்ந்திருக்கும் அவள் மீது இவன் கை எங்கெங்கு படுமோ… என்ற புரிதலில் அவளே அதை செய்து முடிக்கட்டும் என விட்டுவிட்டான்…….

ஒரு வேகத்தில் இப்படி செய்துவிட்டாளே தவிர…..செய்து முடிக்கவும்தான் அந்த செயலின் ஆழம் புரிகிறது பவிக்கு…. என்ன செய்துவிட்டாள் இவள்??? பக்கத்திலிருக்கும் இவள் க்ளாஸ்மேட்ஸ் என்ன நினைப்பார்கள்…? இந்த இவனேதான் இவளைப் பத்தி என்ன நினைப்பான்?

கிட்டதட்ட அவன் தோளுக்கு அருகில் புதைந்தது போல் உட்கார்ந்திருந்தவள் தட தடத்த தடாக கண்களில் எழும்பி நின்ற  அந்த கேள்வி அபயனுக்கு புரியாமலில்லை…. ‘நான் ஒன்னும் தப்பா நினைக்கலை…’ என்ற செய்தி தாங்கிய பார்வையோடு தலையை சின்னதே சின்னதாய் இடவலமாய் ஆட்டினான்….

ஆனால் இதற்கு மேலும் இவனைப் பார்த்துக் கொண்டிருப்பதே கூட நல்லதிற்கில்லை…..அவன் இவளை என்னதாக புரிந்து கொள்வானோ என்ற உணர்வில் வேகமாக தன் பார்வையை வெளிப்புறமாக திருப்பிக் கொண்டாள் பவி…

அவள் உணர்வை புரிந்தவனாக அடுத்து இவனுமே அவள் புறம் திரும்பவே இல்லை…..

நேரம் மணிகளில் செலவாக இப்போது அவன் என்ன நினைக்கிறான் என்பதெல்லாம் தாண்டி இங்கு என்ன நடக்கிறது என்பதே பூதகரமாய் எழும்பி நின்றது பவிஷ்யாவிற்கு….செய்கை அற்ற மனம் அந்த விபத்து பற்றி அனைத்து விபரீத வாய்ப்புகளையும் சொல்லிக் காட்ட…. இவளின் பயம் கூடிக் கொண்டு போய் கொண்டிருந்தது…

இதில் காரை ஒரு கேஸ் ஸ்டேஷனில் சென்று நிறுத்திய ட்ரைவர் ஃப்யூல் நிரப்ப தொடங்க….. இன்னுமாய் தன் மடியில் அவள் வைத்திருந்த ஷாலை எடுத்து தனக்கு கட்டிக் கொண்டவன்…..தன்னோடு இணைந்திருந்த அவள் துப்பட்டாவை கழற்றிவிட்டான்…..

அவன் இறங்கப் போகிறான் போல என புரிந்து பவிஷ்யா அவனுக்கு வழி விடும் முகமாக இறங்க…. அவனோ சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன் அவள் கண்களைப் பார்த்தான்….. கூட அழைக்கிறான் என்பது வரை இவளுக்கு புரிந்தது….

எதற்காக இருக்கும் என புரியவில்லை எனினும் ஏனோ மறுக்க தோணாமல் கூடவே நடந்தாள்….அங்கு ஒரு கன்வேயன்ஸ் ஷாப் இருந்தது….அதற்குள் சென்று நின்றவன் ஜூஸ் அயிட்டங்களாக எடுத்து இவள் கையில் கொடுக்க ஆரம்பித்தான்….

உண்மையில் எப்போது ஹாஸ்டல் போய் சேருவார்கள் என சொல்வதற்கில்லை தானே….ஆக உணவு வாங்கி சேர்க்கிறான் என புரிய…..இவளும் ஜூஸ் ஸ்ட்ரா என அவனைப் பின் பற்றினாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.