(Reading time: 21 - 41 minutes)

னைத்தையும் மொத்தமாக தான் பில் செய்து கையில் எடுத்துக் கொண்டவன் இப்போது சென்று நின்றது அங்கிருந்த ரெஸ்ட் ரூம் முன்னால்…. இதுவும் இவளுக்கு தேவை தானே…… இவள் அதைப் பார்த்து திரும்ப…..விலகி தூரமாய் போய் நின்றான் அவன்.….

காரில் நீண்ட பயணம் எப்போது தன் அம்மாவுடன் சென்றாலும், இதெல்லாம் அவன் வீட்டில் கவனிக்கும் விஷயம் என்பதால் இயல்பாக செய்து வைத்தான் அபயன்…..

அதில் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் இருப்பது போல் உணரத் தொடங்கினாள் பவி…

அடுத்தும் சென்று காரில் ஏறும் முன் டிக்கியிலிருந்த இவள் சூட்கேஸை திறந்து அதிலிருந்து ஹெட் செட்டை எடுத்து கொடுத்தான்….இவள் சூட்கேஸை மூடியது அவனல்லவா இதை கூட கவனித்திருக்கிறான்…. அதோடு இவள் மௌனமாக அமர்ந்து கண்டதையும் நினைத்து பயந்து கொண்டிருப்பதையும் அறிவானோ…. அதற்குதான் பாட்டு கேள் என்கிறானோ….?

இப்போது இவள் காரின் உள்ளே ஏறலாம் தானே…..அவனுக்காக காத்திருந்தால்…..அவன் அருகில் உட்காருவேன்…என் கிளாஸ்மேட் அருகில் தான் உட்கார மாட்டேன் என காட்டிக் கொள்வது போல் இருக்குமே…..

ஆக அவன் டிக்கியை மூடிக் கொண்டிருக்க….இவள் உள்ளே ஏற முனைய…..அதற்குள் வந்துவிட்டவன்…இவளை தடுத்து தான் ஏறி அமர்ந்து அடுத்து அவளை கடைசியாகவே ஏற வைத்தான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...!

படிக்க தவறாதீர்கள்... 

இதில் இவளுக்கு சற்று உறுத்தலாய் இருந்தது….அதென்ன இவள் வேறு யார் அருகிலும் உட்கார கூடாதென அவன் நினைப்பது…? இவள் மீது உரிமை எடுக்கிறானோ….? இது சரியா? இப்படி எதுவெல்லாமோ தோண….அனைத்தையும் மறக்கவென மொபைலில் பாட்டுக் கேட்க தொடங்கினாள்….

சற்று நேரம் சென்றிருக்கும்…. இருட்ட தொடங்கியது……வெளியே குளிரும் கூட தொடங்கியது…..அவன் ஏன் இவளை இங்கு உட்கார சொன்னான் எனவும் அவளுக்கு புரியத் தொடங்கியது…… பசி என இவள் வாங்கி இருந்த ஜூஸ் ஒன்றை கையில் எடுத்து, ஸ்ட்ரா போட்டு குடிக்கலாமா…அதற்கு வாயை திறக்கலாமா….. என இவள் யோசிக்க….

ஜாலி ட்ரிப் போய்விட்டு வந்திருந்த இவளது க்ளாஸ்மேட்ஸ் இப்பொழுது கவனமாக காஷியஸாக லிகர் எடுக்க ஆரம்பித்தனர்…… இங்குள்ள குளிரில் பசங்களுக்கு இந்த பழக்கம் இருக்கும் என இவளுக்கு தெரியும்…..ஆனால் இந்த சூழ்நிலையில் இது விபரீதமாக பட்டது…..

அதோடு இவள் வளர்ந்த சூழ்நிலைக்கு இதைப் பார்க்கவே படு கஷ்டமாக ஒரு உணர்வு…. மெல்ல அபயனை நிமிர்ந்து பார்த்தாள் அவன் எதையும் கண்டு கொள்ளாதே என்பது போல் தலையை ஆட்டிவிட்டு மீண்டும் தன் மொபைலுக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டான்…..

இவன் மட்டும் கூட இல்லைனா என்ன செய்துறுப்பேன் என யோசிக்க தொடங்கினாள் பவி…..

அதனாலோ என்னவோ அவளையும் அறியாமல் அவள் பார்வை அவனிடம் சென்று சென்று மீண்டு கொண்டிருந்தது…..இப்பொழுது இவளை மீண்டுமாக நிமிர்ந்து பார்த்தான் அபயன்…

“என்னாச்சு…?” கேட்டது அவன் கண்கள்….

இதற்கு என்ன பதில் சொல்வாள் இவள்? வெளியே பார்வையை திருப்பிக் கொண்டாள்……இருட்டில் பார்க்கவுமே எதுவுமில்லை…..

இன்னும் சில நேரம் கழிய…..அந்த நேரத்தில் படு பயங்கர ட்ராஃபிக் ஜாமில் சென்று மாட்டியது இவர்கள் கார்…..இதன் மேல் எந்த வாகனமும் இன்னும் 8 மணி நேரத்திற்கு செல்லக் கூடாது என தடை போட்டிருந்தது போலீஸ்…. அவரவர் வாகனத்திலேயே அனைவரும் பொழுதை கழிக்கும்படி அலறிக் கொண்டிருந்தது ரிகார்டட் அறிவிப்பு….

பவிக்கோ இப்போது பயங்கர பதற்றம் தொற்றிக் கொண்டது….. அத்தனை பேரும் ஆண்களுடன் ஒரு ராத்தங்கல்…..

அபயனோ இப்படி  இங்கு காத்திருக்க வேண்டும் என சொல்லவும்…… அதிபனது காரும் இங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருக்குமோ என்ற உணர்வில் அவன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப…..அவனும் அங்கு  காத்திருப்பதை உறுதி செய்தான்….

ஆனால் நின்ற க்யூவில் அவன் எங்கோ முன்னாலும் இவர்கள் எங்கோ பின்னாலும் இருப்பார்களாய் இருக்கும்….

இரவு முழுவதும் எனும் போது காரின் ஃப்யூல் முழு நேரமும் இஞ்சின் ஆனிலிருந்து ஹீட்டரை இயக்க போதுமானதாய் இருக்காது என்பதால்……அதியிடமிருக்கும் லக்கேஜிலிருந்து தன் ஓவர் கோட்டை வாங்கி வர எண்ணினான் அபயன்.

ஆக இவன் காரைவிட்டு இறங்கினால்…..இவனுக்கு வழிவிடுவதற்காக இறங்கிய பவியோ இவனில்லாமல் காருக்குள் ஏற மறுத்து இவன் முகத்தைக் கெஞ்சலாய் பார்த்தாள்…..

எங்க அவனுக்கு தெரிஞ்சவங்க இவன் ஒரு பொண்ணோட வர்றதை தப்பா நினைச்சுடுவாங்களோ என ஒரு புறம் தவித்தாலும்……டிரின்ங்ஸ் சாப்பிட்டுவிட்டு இருக்கும் கூட்டத்தோடு தனியாக இருக்க பயம் இவளுக்கு….

ஆக அவளோடுதான் அதிபனது காரை தேடிப் போனான் அபயன். ஆனால் இவள் அவன் அதிபன் காரை நெருங்கியதும் பின்னிட்டு நின்று கொண்டாள்……அதனால் அதி இவளைப் பார்க்கவில்லை….

இதில் தன் ஓவர் கோட்டை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தவன் கைகளில் சில கதை புத்தகங்கள்…. நீராவுக்காக வாங்கி வந்தவை அவை….. இப்போது காத்திருக்கும் நேரத்தில் போரடித்துப் போய் கிடக்கும் இவள் வாசிக்கட்டுமே என எடுத்து வந்திருந்தான் அபயன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.