(Reading time: 21 - 41 minutes)

சின்னதாய் ஒரு ரீடிங் லைட்..…புக்கில் கிளிப் செய்து கொள்ளும் வண்ணம்….அதையும் சேர்த்து காருக்குள் இவனுக்கு அடுத்து அமர்ந்திருந்த அவள் கையில் அபயன் கொடுக்க….இவன் வீட்டுப் பெண்கள் கொடுத்து வைத்தவரகள் எனத் தோன்றியது பவிஷ்யாவிற்கு…

நடந்த எல்லாமே சிறு சிறு செயல்கள்தான்….இவளுக்காக அவன் மலையைப் புரட்டினான் என்றெல்லாம் இல்லை….ஆனால் அத்தனை அருகாமையிலும் இவள் பெண்மையை கூசச்செய்யாமல்….நான் நானாங்கும் என அலட்டிக் கொள்ளாமல்…..வெகு இயல்பாய் அவளை அவளாக ஏற்று நடத்திய அவனது பாங்கா…..எது அவளை பாதித்தது என்று தெரியவில்லை…. ஆனால் மறு நாள் காலை கல்லூரி அருகில் நெருங்கும் போது பிரிவை எண்ணி சற்று ஒரு மாதிரி இருந்தது தான் அவளுக்கு….

ஆபத்து பற்றி எந்த அறிவிப்பும் இப்போது இல்லை என்றாலும்….இன்னுமே எல்லோரும் மாஸ்க் மகராஜாக்களாக….மௌன விரதம் இருக்க…..ரிஃஸ்க் ஸோனை தாண்டிடாங்களான்னு சரியா தெரியலையே…..

ஆக கரைவிட்டு இறங்கும் வரையுமே எதுவுமே பேச முடியவில்லை அவனிடம்…..

அபயனுமே இதே வித தவிப்பை அனுபவித்தான் தான்…. ஆனால் அவன் பவியை விட சற்று ஷார்ப்பாக இருந்தான்….ஒரு சில மணி நேரத்தில் காதலில் விழிந்துவிட்டதாக அவனும் நினைக்கவில்லை எனினும்…..பவியோடனா தொடர்பு இதோடு முடியப் போவதாக அவனால் ஒத்துக் கொள்ள இயலவில்லை…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்... 

ஆக அவளை நீராவுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என நினைத்தான்…..அது நீராவுக்கும் கூட நல்லதென்பது அவன் நினைவு…..ஏனோ நீராவுக்கு இங்கு வந்து மிகவும் நெருக்கமான நட்பு என எதுவும் அமையவில்லை….

இவளின் இயல்பான குணம் நீராவுக்கு ஒத்துப் போகும்…..இவளுக்கும் நீராவைப் பிடிக்கும் என நம்பினான்….

இதில் கல்லூரி வாசலில் சென்று இவர்கள் இறங்க…..காரைவிட்டு இறங்கும் அந்த நேரம் அவள் நினைத்ததைவிட மிக மிக தவிப்பாய் உணர்ந்தாள் பவி….

சுற்றிலும் மாஸ்க் இன்றி மனிதர்கள்….ஆக இங்கு ப்ரச்சனை இல்லை என புரிய…. அவசரமாக தன் முக மறைப்பை நீக்கியவள்…..அந்த நொடி அவனது காண்டாக்ட் டீடெய்லை கேட்டுவிடலாம் என கூட எண்ணினாள்…. அவன் பெயர் கூட இன்னும் தெரியாது என்பது அத்தனை ஆழமாக சூடுழுக்கிறது இவளுக்கு….

இவள் முகத்தைப் பார்த்தபடிதான் இறங்கினான் அவன்…..அதன் உணர்வுகள் அவனுக்கும் புரிகிறது தானே…..ஒருவித நிறைவும் ஆறுதலுமான புன்னகையுடன் இவளிடம் ஏதோ சொல்ல அவன் வாய் திறந்த நொடி….

பார்வை படும் தொலைவில்….இவர்கள் நின்றிருந்த சாலையில்…..எல்லா வாகனமும் நிறுத்தப் பட்டு மொத்தமாக பின்பு செல்ல அனுமதிக்கப் பட்டு இருந்தல்லவா….அதனால் உண்டாகி இருந்த கடும் ட்ராஃபிக்கில்….

க்ரீச்…கிர்ரீச்…..ஷ்ஷ்ஷ்ஷ்……..டிட்ம்….ஃஸ்க்க்க்…. எதோ கார் எங்கோ இடிக்கும் சத்தம்…..அந்தரத்தில் தூக்கி வீசப் பட்டு தரையில் விழுகிறாள் ஒரு பெண்….

பார்க்க அது இந்தியப் பெண் என்பது வரை புரிய….”வந்து பார்க்கிறேன் “ என பவிஷ்யாவிடம் சொல்லிக் கொண்டே அத்திசையைப் பார்த்து ஓட துவங்கி இருந்தான் அபயன்.

தொடரும்!

Episode # 23

Episode # 25

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.