(Reading time: 21 - 41 minutes)

ட என்ன மாமா நீங்க ? வயசாகிட்டா ஏதாச்சும் ஆகிடும்ன்னு யார் சொன்னது ? நம்ம நிலாவோட சூப்பர்ஸ்டாரை பார்த்திங்களா? எத்தனை வயசாகியும் ஹீரோவாகவே ஜம்முன்னு இருக்காரு ? இனிமே வயசாகுதுன்னு சொல்லாதிங்க..இன்னும் ஒரு வருஷம் வைட் பண்ணுங்க..அதற்கு அப்பறம் கல்யாணம்தான் “என்றவன் பாக்யத்தை பார்த்து

“ அதுக்கு அப்பறம் நாளு பிள்ளைங்க அத்தை .. ரெண்டு பையன் ரெண்டு பொண்ணு நீங்க ரெண்டு பேரும்தான் கவனிச்சுக்கனும்..நானும் நிலாவும் நாடு நாடாய் தேன்நிலவுக்கு போயிருவோம்.. டீல் தானே குட்டிமா?” என்றபடி அவளை தோளோடு அணைத்தான் மதியழகன். யாருக்கும் கேட்காத குரலில்

“ பாரு மது இந்த அப்பாவை.. என் இப்படி எல்லாம் பேசுறார்?” என்றாள்.

“ குட்டிமா, அவர் உன் அப்பா..உன் அப்பா தப்பாக பேசினால் நீதானே அவரை கண்டிக்கனும்?” என்றுஅவன் கண்ணடித்தான். அவன் பார்வையில் தெளிந்தவள், தனது தந்தை அருகே சென்றாள்.

“ உனக்கு நூறு வயசு மனோ.. இப்படி   தப்பு தப்பா இனிமே உளற கூடாது.. மீறி அப்படி பேசினால் நான் உங்கூட பேசவே மாட்டேன்”என்று அவள் மிரட்ட

“அய்யோ பேபி நோ..நான் வேணும்னா தோப்புகரணம் போடுறேன்” என்றார் மனோ.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“ம்ம்ம் அந்த பயம் இருக்கனும்” என்று அவளும்சிரித்தாள். சோ நம்ம ஷக்தி வற்புறுத்தியதற்கு நம்ம மனோ சார்தான் காரணம்.

அதே நேரம், மித்ராவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தான் ஷக்தி..வழக்கம்போலவே அவளின் விரல்கள் அவன் கேசத்தில் விளையாட அவனோ மௌனமாய் அவளின் வயிற்றை வருடினான்.

“ நினைச்சேன்டா கேடி..இந்த கொஞ்சல் எல்லாம் உன் பாப்பாவுக்காகத்தானா?” என்று கேட்டாள் சங்கமித்ரா.

“ லூசு..” என்று முறைத்தவன் குறும்புடன் “ கண்டுபுடிச்சிட்டியா?” என்று கண்ணடித்தான்.

“மாமா எனக்கு கோபம் வருது”

“பாருடா ஆட்டோல வருதா?இல்ல பைக்கா?”

“ செம்ம மொக்க”

“மொக்க வைஃப் கூட குடும்பம் நடத்துறேன்ல!”

“ நான் மொக்க வைஃபா?இதெல்லாம் ஒவர்..எழுந்திரிங்க..நீங்க ஒன்னும் என் மடியில படுக்க வேணாம்”

“ஹா ஹா என்ன டீ பிரச்சனை உனக்கு ?”

“அப்போ இந்த கொஞ்சல் எல்லாம் எனக்கா?இல்ல பாப்பாவுக்கா?”

“ உனக்கு பதில் தெரியும்”

“ பரவாயில்ல உன் வாயால சொல்லு”

“நான் சொல்லலன்னா?”

“ நான் கேட்டுட்டே இருப்பேன்”

“ அப்பவும் சொல்லலன்னா?”

“ச்சீ போ”

“ ம்ம் அந்த பயம் இருக்கனும் மிது”

“ சோ நீ சொல்ல மாட்ட, அப்படித்தானே?”

“ லூசு, நீயும் எனக்கு குழந்தை தானே?”

“ப்பா..நீ எப்போதிலிருந்த் இப்படி பேச ஆரம்பிச்ச மாமா ?”

“ சும்மாபேசி பார்த்தேன்.. நல்லா இருக்கா?”

“கேவலமா இருக்கு.. தயவு செஞ்சு இனிமே இப்படி பேசாத மாமா”

“ அப்போ நீயும் அப்படி கேட்காதேமா”என்று அவளைப்போலவே அவன் கூறவும் அவன் நெற்றியில் முட்டி முத்தமிட்டாள் மித்ரா.

“ நீ சந்தோஷமா இருக்கதானே மாமா ?”

“ம்ம்”

“அதை பார்த்து எனக்கும் ரொம்ப சந்தோஷமாய் இருக்கு டா…எப்போ நம்ம பாப்பா வரும் , நீயும் பாப்பாவும் எப்படி கொஞ்சிக்கிறிங்க ? என்னன்ன சேட்டை பண்ணுறிங்க ,எல்லாத்தையுமே இப்போவே பார்க்கனும் போல இருக்கு”

“ம்ம்”

“ எப்படியும் நீ பாப்பாவை தான் அதிகமாய் கொஞ்சுவ..நானும் பிசியாகிடுவேன்.. ஆனா அந்த குட்டி குட்டி நேரத்துலயும் உன்னை ரசிச்சுகிட்டு உன் சந்தோஷத்தை எல்லாம் பார்க்கனும் மாமா”

“ம்ம்”

“என்னடா கதையா சொல்லுறேன்”

“ஓ.. அப்போ இது கதை இல்லையா?”

“ ஷக்க்க்க்க்க்தீதீ மாமா” என்று அவள் முறைக்கவும்காதலுடன் அவளை முத்தமிட்டான் ஷக்தி.

“ காதலை எல்லாம் பேச்சுல தான் சொல்லனும்னு எந்த மடையன் சொல்லி தந்தான் உனக்கு ? வேற மாதிரியும் சொல்லலாம்” என்றவன் அவள் முகத்தில் கைகளில் ஏந்தி முத்தமிட தொடங்கினான் ஷக்தி. மெல்லஅவன் தன்னை விடுவித்ததும் மீண்டும் முகம் சிவந்து போனாள் மித்ரா.

“ என்ன இன்னைக்கு நீ அநியாயத்துக்கு வெட்கப்படுற நீ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.