(Reading time: 21 - 41 minutes)

ல்லா வாங்கி கட்டுனியா?”

“ நான் பொறந்து வளர்ந்த இந்த 22 வருஷத்துல இப்படி ஒரு திட்டை நான் வாங்கினதே இல்லை.. அப்போவே முடிவு பண்ணிட்டேன்”

“அவனை அண்ணனாய் ஏற்றுக்கனும்ன்னா?”

“ இல்லை என் உள்ளம் கவர்கள்வனாய் ஏற்று லைஃப் லாங் பழி வாங்கனும்ன்னு”

“அடிப்பாவி..”

“அதற்கு அப்பறம் கொஞ்ச நாள் வாளை சுருட்டிகிட்டு சும்மா இருந்தேன்.. கோபம் வெறுப்பாய் மாறிட கூடாதுல?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“தெளிவுதான்..”

“ ம்ம்ம்.. இந்த பார்க்காமல் காதல் எல்லாம் ரொம்ப ஒவரா இருந்துச்சு..அதான் உங்க  நிச்சயத்தை யூஸ் பண்ணி அவனை பார்க்க வந்தேன்”

“பேசுனியா?”

“க்ரூப்பா பேசும்போது மட்டும் பதில் சொன்னேன்..மத்தபடி இல்ல”

“இது ஏன்?”

“ரிவர்ஸ் சைக்காலஜி..இந்நேரம் அவனை நான் மறந்துட்டேனோன்னு அவன் குழம்பி இருப்பான்.. நாளைக்கு நான் அங்க வரேன் அண்ணா ..ஆனால் எதுவும் பேச மாட்டேன்..நான் வருவேன்னு அவனுக்கு சொல்ல வேணாம் .. கிளம்பறதுக்கு முன்னாடி அவனை பார்க்கனும்..அவ்வளவுதான். என் ரஞ்சுவுக்கு என் காதல் புரியும்.. அப்போ தான் அவன்கிட்ட நான் நேரடியாய் பேசுவேன்..”

“ம்ம்ம் ஆல் தி பெஸ்ட் தங்கச்சி” என்றவன் சொன்னதை போலவே மறுநாள் அவளை அழைத்து சென்றான்.

மித்ராவுடன் ஹாஸ்பிட்டலுக்கு வந்திருந்தான் ஷக்தி..என்னத்தான் அவன் தைரியமாய் இருந்தாலும் மருத்துவமனையை நெருங்கியதும் லேசாய் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. வழக்கத்தை விட அதிகமாகவே அமைதியாய் காணப்பட்டான் அவன்.. மித்ரா தான் அவனையும் நிலாவையும் வம்பிழுத்து நேரம் கடத்தி கொண்டிருந்தாள். எல்லா பரிசோதனையும் முடிந்ததும், சங்கமித்ராவை சந்தோஷமாய் அணைத்து கொண்டாள் தேன்நிலா.

“ஹேய் கங்க்ராட்ஸ் டீ.. ரொம்ப ஹெல்தியா இருக்க நீ..இதையே மெயின்டைன் பண்ணிக்க”என்றவள் ஷக்தி மித்ரா இருவரின் அடிப்படை சந்தேகங்களுக்கு பதில் சொன்னாள்.ஒரு அளவிற்கு மேல் பொறுக்க முடியாமல்

“ ஹேய் நாமெல்லாம் ஒரேகுடும்பம்ன்னு ஞாபகம் இருக்கா உங்க ரெண்டு பேருக்கும்? இப்படி ரெண்டு மணி நேரமாய் உங்ககிட்டயே பேசினால்,என்னையும்  நம்பி இங்க வந்த ஜீவங்களை என்ன பண்ணுறது ?” என்றாள்.

“ சரி இவ்வளோ கெஞ்சுற ..இனிமே சந்தேகம் வந்தா ஃபோன் பண்ணுறேன்” என்று மித்ரா கூறிட, “அம்மா தாயே சங்கு,எல்லா சந்தேகத்தையும் ஒரு பேப்பர்ல எழுதி மொத்தமாய் கேளு” என்றாள். என்னத்தான் சலித்து கொண்டாலும் நிலாவுக்கும் மித்ராவை பார்க்க கொஞ்சம் பாவமாய் இருந்தது. ஷக்தி பிடிவாதமாய் தனது மனைவியை ஊருக்கு தனியாக அனுப்பி வைக்க மாட்டேன் என்று கூறி விட்டான்.மற்ற பெரியவர்களும் அங்கே நிரந்தரமாய் தங்குவது சிரமம் என்று கூறவும்,  மசக்கை நேரத்தில் இவள் தனியாக இருக்க வேண்டுமா ? என யோசித்தாள். மித்ராவோ இந்த சூழ்நிலையை காரணமாய் வைத்து காவியாவிடம் பேசினாள்.இறுதியாய் மித்ராவின் வற்புறுத்தலாலும், அவளின் நலனுக்காகவும் அவர்களின் வீட்டிலேயே தங்கவதற்கு முடிவெடுத்தாள் காவியதர்ஷினி. “என்ன அத்தை பொண்ணு ஒரே கல்லுல்ல ரெண்டு மாங்காய்யா?” என்று ஷக்தி கேட்கவும் “ ஷார்ப்பு மாமா நீ” என்று அவனைக் கொஞ்சினாள் சங்கமித்ரா.

(ஷபா இந்த ஜோடிகளை நிகழ்காலத்துக்கு கூட்டிட்டு வர்ரதுகுள்ள தலைவரோட கபாலி படமே ரிலீஸ் ஆகிடுச்சே.. ஆமாம்.. நாம வெற்றிகரமாய் நிகழ்காலத்துக்கு வந்துவிட்டோம்.. வாங்க மிதுவை பார்ப்போம்).

தொலைக்காட்சியில் ஏதோ படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கமித்ரா. அதில் நிறைமாத கர்பினியாய் இருக்கும் பெண், பிரசவதிற்கு பின் இறந்துவிட்டது போல காட்சியை காட்டியிருந்தார்கள். இதுவரை சந்தோஷமும் எதிர்ப்பார்ப்பும் மட்டுமே குடியிருந்த மித்ராவின் மனதில் பயமெனும் இருள் சூழ்ந்தது. தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தை விட, தான் இல்லாமல் ஷக்தி எப்படி இருப்பான் ?என்ற பயமே அவளின் நிம்மதியைக் கவ்வியது. மனைவியின் மனதில் ஓடி கொண்டிருப்பதை சற்றும் அறியாமல் தங்களது கடையில் இருந்தான் ஷக்தி. மித்ராவோ தேவை இல்லாததை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.