(Reading time: 25 - 50 minutes)

"ங்கு... பாட்டி யுக்தாவை பார்த்தப்போவே அவ அப்படியெல்லாம் செஞ்சிருக்கமாட்டான்னு என்கிட்ட சொன்னாங்க... எனக்கும் அப்படி தான் தோனுது... அவளே தப்பு செஞ்சதா ஒத்துக்கிட்டாலும்... கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதுதான் மெய்ன்னு சொல்வாங்களே... அது உனக்கு தெரியாதா..?? ஏதோ ஒரு காரணத்துக்காக அப்படி அவ சொல்லியிருக்கலாம் இல்ல...

இங்கப்பாரு எதுவா இருந்தாலும் யுக்தா உன்கிட்ட தான் மனசு விட்டு பேசுவா... இப்பயாவது அவக்கிட்ட பேசு... அன்னைக்கு என்ன நடந்துச்சோ... அதை யார்க்கிட்டேயும் சொல்லாம மனசுக்குள்ளேயே வச்சிருப்பா... இப்போ நியூயார்க் போறத பத்தில்லாம் பேசறா... அவக்கிட்ட பேசுனா அவ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவா... நான் இங்கே இருந்தா நல்லா இருக்காது... நான் வரேன்..." என்று தேவா கிளம்பிச் சென்றான்.

அவன் போனப்பிறகும் கவி சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தாள்... தேவா சொன்னது போல் நானே சம்யூவை புரிந்துக் கொள்ளவில்லையா...?? பாட்டியும் தேவாவும் சம்யூ மேலே வைத்திருக்கும் நம்பிக்கையை கூட நான் சம்யூ மேல வைக்கவில்லையா..?? அன்னைக்கு அந்த பிரச்சனை நடந்து முடிஞ்சதும் சம்யூ ஏதோ என்கிட்ட பேச வந்தா... நான் தான் அவக்கிட்ட பேசாம கோபப்பட்டேன்... அவளை அடிச்சிட்டேன்... எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் நான்.." என்று குற்ற உணர்வால் தவித்தவள்... பின் தன் சகோதரியை தேடிப் போனாள்.

யுக்தா அந்த அறையில் இருக்கும் ஜன்னலில் நின்று வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்... அந்த அறைக்குள் நுழைந்த கவி அவள் அருகில் சென்றாள்.

"சம்யூ சாரி... ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்... நீ பிருத்வி மேல வச்சிருக்க காதலை அவன் புரிஞ்சிக்கல... ஆனா நீ அவனுக்காக உருகுறியேன்னு தான் எனக்கு கோபம்... தப்பு தான் தேவா முன்னாடி நான் அப்படி பேசியிருக்கக் கூடாது... சாரி சம்யூ என்ன மன்னிக்கமாட்டியா...??" என்று கவி கேட்டதும்... திரும்பி கவியை அணைத்துக் கொண்டாள் யுக்தா.

"கவி நீயும் நானும் இத்தனை நாள் பேசாம இருந்ததுல நமக்குள்ள பிரிவு வந்துட்டதா நான் நினைக்கல... ஆனா நீ பக்கத்துல இருந்தும் பேசாம இருக்கறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..." என்று அழுதாள்.

"ஹே ஏன் சம்யூ இப்போ அழற... எனக்கும் மட்டும் அது சந்தோஷமா இருந்துச்சா... பெங்களூர் போனதுக்கு அப்புறமும் உன்கிட்ட பேசலையேன்னு நான் வருத்தப்பட்டுக்கிட்டு தான் இருந்தேன்... நீ காணாம போனதும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா... ஆனா நீ பாட்டி வீட்டில் இருக்கன்னு தெரிஞ்சதும் திரும்பவும் கோபம் வந்துடுச்சு... சாரி உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல..."

"சே நான் அப்படி நினைக்கல... நான் செஞ்ச தப்புக்கு இதை தண்டனையா தான் நினைச்சேன்..."

"ஹே திரும்பவும் தப்பு செஞ்சதா சொல்லாத... அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாம நான் தான் உன்மேலே கோபப்பட்டுட்டேன்... அன்னைக்கு உன்னை அடிச்சிட்டேன் இல்ல... சாரிடி.."

"அன்னைக்கு என்ன நடந்திருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி நடந்துக்கிட்டது தப்பு தானே... அன்னைக்கு அப்பா அம்மா சாவிம்மா யாருமே என்னை அடிக்கல... நான் செஞ்சதுக்கு எதுவுமே தண்டனை கிடைக்கலியேன்னு நினைச்சேன்... நீ அடிச்சப்போ தான் கொஞ்சமாவது நிம்மதியா இருந்துச்சு கவி.."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

"பிருத்வி சொன்ன மாதிரி அன்னைக்கு நீங்க போதை மயக்கத்துல தானே இருந்தீங்க... தப்பு உன்னை மீறி தான் நடந்திருக்கனும்... ஆனா அந்த போதைமருந்தை கேக்ல கலந்ததா நீ ஏன் ஒத்துக்கிட்ட... இப்போ தான் நீ இப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டியோன்னு எனக்கு தோனுது சம்யூ... அன்னைக்கு பிருத்வி வந்து பேசிட்டுப் போனதுக்குப் பிறகு நீ என்கிட்ட எதுவோ பேச வந்த... ஆனா நான் தான் அதை கேட்காம போயிட்டேன்...

இப்பயாவது அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொல்லு... அந்த போதை மருந்தை கலந்தது யாரு... நீ ஏன் அதை ஒத்துக்கிட்ட... சொல்லு சம்யூ..." என்று கவி கேட்டதும் அந்த நாள் யுக்தாவிற்கு அப்படியே கண் முன் நிழலாடியது...

தூக்கத்தில் வரும் கனவில் நடந்ததே சில சமயம் மறந்து போகும்... ஆனால் அது பிருத்வி பற்றிய கனவு என்றால் அது கூட ஞாபகம் இருக்கும் யுக்தாவிற்கு... முதல் முறையாக அவளை அறியாமலே உண்டான போதை மயக்கமாக இருந்தாலும்... அந்த நாள் ஒரு கசப்பான அனுபவமாக இருந்தாலும்... அன்று பிருத்வியோடு இருந்த நேரங்களை அவளால் மறக்கவே முடியாது.

பிரண்ட்ஸ் அடுத்த அத்தியாத்திலிருந்து எல்லாம் சஸ்பென்ஸும் கொஞ்சம் கொஞ்சமாக கிளியர் ஆகும்... போதை மருந்து கலந்தது யாருன்னு அடுத்த அத்தியாயத்தில் சொல்ல முடியாது... ஆனால் அதற்கு அடுத்த அத்தியாயத்தில் கண்டிப்பாக சொல்கிறேன்... இதுவரை சஸ்பென்ஸை அறிந்து கொள்ள பொறுமையாக காத்திருந்து படித்த தோழமைகளுக்கு நன்றி.

தொடரும்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.