(Reading time: 6 - 11 minutes)

போஸ்ட் பண்ணிடலாம் லக்ஷ்மி.   ஃபோன் பண்ணி பேசி அட்ரஸ் வாங்கிடறேன்.  ஒரு ஒரு இடத்துக்கும் நேருல போகணும்ன்னா ரொம்பக் கஷ்டம்.  ரொம்ப நெருங்கினவாளுக்கு மட்டும் நேர்ல போய் கொடுத்தா போறும்”

“சரின்னா, சமயக்கார மாமா எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னார்.  சமையல் லிஸ்ட் போடணுமே’

“சாயங்காலமா வரேன்னு சொல்லி இருக்கார் லக்ஷ்மி.  ராமனும் அந்த நேரத்துக்கு ஆத்துக்கு வரேன்னு சொல்லி இருக்கார்.  எல்லாருமா சேர்ந்து பேசி சமையல் லிஸ்ட் ரெடி பண்ணிடலாம்”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது பத்துவின் கைப்பேசி அழைத்தது. 

“ஹான் சொல்லுங்கோ எப்படி இருக்கேள்.......”

“..........................”

“நாங்க எல்லாம் ஷேமமா இருக்கோம்..... கல்யாண ஏற்பாடு எல்லாம் பேஷா நடந்துண்டு இருக்கு........”

“..........................”

“ஓ அப்படியா......... ரொம்ப சந்தோஷம்........ ரொம்ப சந்தோஷம்.......... உங்களை மாதிரி பெரியவா கூட இருக்கறது யானை பலம் மாதிரின்னா........ திங்கக்கிழமைக்காக இன்னைலேர்ந்தே வாசல பார்த்துண்டு இருக்கப் போறேன்.  வாங்கோ வாங்கோ......”,  வாயெல்லாம் பல்லாக பத்து பேசி முடித்தார்.

“யாருன்னா ஃபோன்ல..... இத்தனை சந்தோஷமா பேசிண்டு இருந்தேள்....  அத்திம்பேரா....”

“இல்லடி என்னோட அத்தங்கா பேசினா..... ஸ்வேதா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே வந்துடறேன்னு சொன்னா.  வர்ற திங்கக்கிழைமையே வராளாம்.....”, பத்து சொல்ல, லச்சு மாமி இருந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாள்.

பத்து மாமா தண்ணீர் தெளித்து மாமியை எழுப்பி, ஃபேனை முழு வேகத்தில் சுத்த விட்டு சிறிது ஜூஸ் கொண்டு கொடுத்தார்.  இத்தனை சைத்தியோபச்சாரங்களுக்குப் பிறகு மாமி எழுந்து அமர்ந்தாள்.

“நீங்க இப்போ உங்களோட அத்தங்கா வரான்னா சொன்னேள்.....”, தான் சரியாகத்தான் கேட்டோமா என்று மறுபடி கேட்க, பத்து லச்சுவின் கேள்விக்கு ஆமாம் என்பது போல் தலையசைத்தார்.  தெளிந்த மாமி மறுபடி மயங்கினாள்.

இப்படி இரு வீட்டையும்  சுனாமி வந்து தாக்கப் போவதாக  அறிவித்த திங்கள்க் கிழமையும்  வந்தது. 

காலை ஆறு மணி அளவில் ஹரி வீட்டின் வாசலில் ஒரு ஆடிக்கார் வந்து நிற்க, அதிலிருந்து NACயிலிருந்து நேராக வந்தது போல் மடிசார் கட்டிய மாமி Rayban கண்ணாடியுடன் மாடர்ன் மகாலக்ஷ்மியாக  இறங்கினாள்.

அப்படியே பைனாக்குலரை வேளச்சேரியை நோக்கி ஃபோக்கஸ் பண்ணுங்க.  ஸ்வேதா வீட்டு வாசலில் ஓபன் டாப் ரோல்ஸ் ராய்ஸ் கார் வந்து நிற்க அதிலிருந்து Porsche குளிர்க்கண்ணாடியுடன் அடுத்த மகாலக்ஷ்மி இறங்கினாள்.

மகாலக்ஷ்மிகளின் திருவிளையாடல்களை அடுத்த அத்தியாயத்திலிருந்து பார்க்கலாம்.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.