(Reading time: 29 - 58 minutes)

தவையே பார்த்த படி நின்றவனை அதிக நேரமெல்லாம் வருந்த வைக்கவில்லை அவள்! சில மணித் துளிகளிலே கதவிடுக்கின் வழியே... தலையை மட்டும் நீட்டிக் கொண்டு கீச்சுக் குரலில் அவனை அழைத்த விதத்திலே..

இத்தனை நேரம் உருண்டு பிரண்டு அழுதவளா அவள்???? என்று கேட்க வைக்கும் அளவிற்கு.. ஸ்விட்ச் போட்டது போல பிரகாசித்த அந்த முகமும்... அந்த குரலில் இருந்த துள்ளலுமே காயத்தின் தடம் கூட ஏதோ கண் திருஷ்டி போல தோன்ற வைத்தது!

ஆம், அவன் ஒரு வார்த்தை கனிவாக பேசியதே பெரிய சமாதானமென முகத்தை கழுவியவளுக்கு மனமெல்லாம் பவதாரிணியிடமே இருந்தது!  மதுக்கூடத்தில் நடந்தது அவருக்கு தெரிந்தால் என்ன ஆவது?

‘என்ன ஆனாலும் சரி! பாவாவை கவலைப்பட விட மாட்டா அஞ்சனா!’,  என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு  குர்தாவை போட்டு விட்டு பாட்டமை தேட… அது இல்லை என்றதும் தான் இவனை அழைத்தாள்!

இவள் தெள்ளத் தெளிந்த முகம் ஒரு நிறைவை தந்தாலும்... இவன் மனமும், பார்வையும் அதிலிருந்த  காயத்தை நோக்கியேச் செல்ல.. அதை கலைப்பது போல...

“குர்தா இங்கே! பாட்டம் எங்கே?”, என்று  புருவத்தை மேலும் கீழுமாக அசைத்து எதுகை மோனையுடன்  அவள் கேட்கவும்..

“பாட்டமா???” - புரியாமல் முழித்தான் இவன்! இவன் என்ன செய்வான்? முன்ன பின்ன பெண்களுக்கு ஆடை வாங்கி இருந்தால் தெரிந்திருக்கும்! அதையெல்லாம் அஞ்சனா  யோசிக்கவில்லை!

“சீக்கிரம்  வாங்கிட்டு வாங்க ஆர்யா! கஷ்டமா இருக்கு!’ என்று மூக்கைப் பொத்தி கொண்டு அவனை விரட்டினாள்!

பாத்ரூமில் நிற்க வைத்து விட்டோமே என்று அவளின்  சங்கடத்தை உணர்ந்தவனாக வேகமாக  கடைக்கார பெண்ணிடம் அவள் சொன்னதையே  கேட்க, அவளோ,

“பாட்டம்ன்னா.. லெக்கிங்க்ஸ் .. பட்டியாலா... ஜீன்ஸ் எது வேணும் ஸார்?”

என்று பட்டியலிட... அவனிருந்த நிலையில் இதையெல்லாம் யோசித்தால் தலை வலி வந்து விடுவது போலிருக்க நெற்றியைத் தேய்த்த படி, “நீங்களே ஏதாவது கொடுங்க!”, என்று அவளிடமே முடிவை விட்டவனிடம் அடுத்து அவள்..

“என்ன சைஸ்?”, என்று கேட்க...  

“சைஸ்சா!!!!”, என்று அலறியவனை அந்த பெண் ஒரு மாதிரி பார்க்க... அவனுக்கு அந்த வார்த்தை  அப்ஸ்வரமாக அல்லவா காதிற்குள் ஒலித்தது!

‘ஒரு தடவை இந்த லூசுகிட்ட  சிக்கி பட்டது போதாதா! சைஸ்ங்கிற  வார்த்தையே என் டிக்ஷனரிலே கிடையாது!’, என்று தீர்மானித்தவனாக..

“என் கூட வந்தாங்களே... அவங்களுக்கு தான்.. நீங்களே பார்த்து கொடுங்க”, என்றதும்..

“அவங்களுக்குன்னா ஸ்மாலே போதும் ஸார்...”, என்று அந்த பெண் ஒரு லெக்கிங்கை கொடுக்க.. அதை அஞ்சனாவிடம் சேர்க்க வந்தவனுக்கு 

அவள் தலையை மட்டும் நீட்டி நிற்கும் ரகசியம் புரிந்தவனாக... தனக்குள் சிரித்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தவனின் பார்வை அந்த காயத்திற்கே செல்ல..

“ஹே... ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிட்டல் போயிடுலாமா?”, என்றான் சிறு தவிப்பு இழையோட!

முகத்தை கழுவும் பொழுது அந்த காயத்தை கவனித்து இருந்தவளுக்கு இந்த காயமெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை! அவன் தன்னை வெறுக்காமல் இருந்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே! கூடவே பவதாரணியிடம் பேசி விட வேண்டும் என்பதே மேலோங்க..

“ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுமே இல்லை! சீக்கிரம் ட்ரெஸ் செய்துட்டு பாவாகிட்ட பேசணும்! அது தான் இப்போ முக்கியம் நமக்கு!”, என்று சொல்லிக் கொண்டே அவன் கையில் இருந்த லெக்கிங்கை எடுத்து கொண்டு உள்ளே சென்று விட..

அவள் சொன்ன பாவாவில் இவனுக்கு பொசு பொசுப்பு உண்டாக..

‘இந்த நேரம் பாவாகிட்ட பேசறது ரொம்ப முக்கியம் பாரு! அதுல என்னையும் கூட சேர்த்துக்கிறா’, என்று  உள்ளுக்குள் புகைந்த படி ஓரிரு எட்டுக்குள் தான் வைத்திருப்பான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.