(Reading time: 23 - 46 minutes)

"நான் கேட்டு பார்த்தேன் ப்ரீதா, அதெல்லாம் வேண்டாம்மா, ரொம்ப டிஸ்டன்ஸா இருக்கு. பொட்ட பிள்ளைங்க இவ்வளவு தூரம் வந்து போறது கஷ்டமா இருக்குமேமான்னு"சொல்லிட்டான் ப்ரீதா , ஷைனி கிட்ட அமைதியா சொல்லி வை என்ன? வேணும்னா அவளுக்கு உங்க வீட்டுக்கு பக்கத்தில எங்கயாவது வேலைக்கு பார்க்க சொல்லட்டுமாம்மா? என்றுக்கேட்டார்.

 ப்ரீதாவிற்கும் அவர் சொல்வது சரியாகவே பட்டது. இப்போதைய ஃபேக்டரி கொஞ்சம் தூரமாக தான் அமைந்து இருந்தது.ஓரளவு அருகாமையிலிருந்த முந்தையஃபேக்டரியிலிருக்கும் போதெ பல நாட்கள் ரூபனை அவள் பார்த்தது இல்லை. இரவு லேட்டாக வந்திருப்பானோ? இல்லை அங்கேயே தூங்கி விட்டானோ என்கின்ற ஐயம் அவளுக்குஎழும். இப்போது அதை விட தூரம். எனவே தன் அத்தைச் சொன்னதை அப்படியே காப்பி பேஸ்ஃட் ((copy, paste) செய்து வைத்தாள் தன் தங்கையிடம்.

 ஷைனியும் முதலில் அதைக் கேட்டு சமாதானம் ஆனாலும், வேறுச் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தாள்.இன்னும் அக்காவின் வீட்டிற்கு முழு மேக் அப்போடு வருவதைநிறுத்தி இருக்கவில்லை. அப்போது தான் அனிக்கா அங்கே வேலைக்குச் செல்லப் போகும் விஷயம் தெரிய வந்தது. அவளுக்கு உள்ளும் புறமும் மனம் எரிந்தது. முதலாகவே அவளுக்குஅனிக்கா மீது எக்கச் சக்க பொறாமை. அவளுடைய குடும்ப பின்புலம் , அவளுக்கு அவர்கள் குடும்பம் கொடுக்கும் முக்கியத்துவம் எல்லாம் எப்போதோ அவளுக்கு பொறாமையைதூண்டி விட்டிருந்தன.

“ எனக்கு டிஸ்டன்ஸா இருக்கும்னா அப்போ அவளுக்கு டிஸ்டன்ஸா இல்லையா? நான் பொட்டப் பிள்ளனா அவ மட்டும் என்ன ஆம்பிள பிள்ளையா? இதென்ன ஓரவஞ்சனை.பணக்காரங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா ? என்று மனதிற்குள் வெகுண்டாள். அதன் காரணமாகவே அழைப்பு இருந்தும் பேக்டரி திறப்பு விழாவிற்கு அவள் கோபத்தில்செல்லவில்லை. ஆனால், பிறகு யோசித்த போது வீணாக வீட்டிற்கு அலைவதை விட , அவனைப் பார்க்க அவன் அலுவலகத்திற்கு செல்வது நல்லதல்லவா? என்றுத் தோன்றியது.

 அனிக்காவை அங்கிருந்து விரட்டி விட்டால், தான் அவள் இடத்தில் வேலையைச் செய்வதாகச் சொல்லி சேர்ந்துக் கொள்ளலாமே? அப்படியே அவன் மனதிலும் இடம் பெற்று விட்டால் நல்லதாக இருக்கும். என்று ஒரு எண்ணமும் தோன்றிற்று. ஒருவர் மனதில் இடம் பெறுவது அத்தனை சுலபமில்லை என்பது அவளுக்கு யார் புரிய வைப்பது. அவள் செய்யும்செயல்களால் அனிக்கா பாதிக்கப் படுவாளா என்றுப் பார்ப்போம்?

 தாமஸ் மகளைப் பார்ப்பதற்காகவே மதியம் ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம் இன்று மகள் வீட்டிலிருக்க மாட்டாளே? என்று நினைவுத் தோன்ற நேரடியாகவே ரூபனின்ஃபேக்டரிக்கு தன்னுடைய காரைக் கொண்டுச் செல்ல சொன்னார். அந்த டிரைவர் ஏற்கெனவே வீட்டுப் பெண்களை ஃபேக்டரிக்கு அழைத்து வந்திருந்த காரணத்தால் அவ்விடம் நோக்கிமேலும் விசாரிக்காமல் அழைத்துச் சென்றார்.

 ஏனோ தெரியவில்லை தாமஸீக்கு இப்போதெல்லாம் தனக்கு நிகரானவர்களிடம் தான் உறவு பாராட்டத் தோன்றுகிறது. அன்றைக்கு திறப்பு விழாவிற்கு வருவதாக சொன்னகிறிஸ்ஸிற்கு வேறு வேலைக் கொடுத்து அனுப்பி விட்டு தானும் சென்றிருக்கவில்லை. இதெல்லாம் ஒரு பிசினஸ்ஸா , தான் பார்க்காத பிஸினஸ்மேன்களா? என்று ஒரு எண்ணம்.

 எல்லாம் மனைவிக்காக என்றுப் பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் எப்போதோ தான் இருக்கும் வீட்டிலிருந்து பணக்காரர்கள் இருக்கும் பகுதிக்கு மாறி இருந்திருப்பார். வேறு வழியில்லாததால் அதே வீட்டை இன்னும் பிரமாண்டமாக கட்டி தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

 காரிலிருந்து இறங்கியவருக்கு அந்த பழைய கட்டிடம் அதன் மேலிருந்த "ரூபன் ஃபேக்டரீஸ்" என்னும் பெயர் பார்த்து கொஞ்சம் பிரமிப்பாகத் தான் இருந்தது. அவன் வயதிற்கு அவன்அடைந்திருக்கும் உயரம் அதிகம் தான் என்று எண்ணிக் கொண்டார். அவருடைய பிரமிப்பைக் கண்டுக் கொண்டன இரண்டுக் கண்கள்,

“இது சரியில்லையே?” என்று எண்ணியவளாக அவர் அருகில் வந்திருந்தாள் ஷைனி.

“குட் ஆப்டர்னூன் அங்கிள், நீங்க தி ஃபேமஸ் பில்டர்ஸ் "T & S constructions" ஓனர்தானே? எனக்கு உங்களைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா ஆகிட்டு அங்கிள்' என்று அவள் அவரைபார்த்துக் காட்டிய அதீத மதிப்பையும், அபிமானத்தையும் கண்டவருக்கு மறுபடியும் அதே போர்ட் கண்ணில் பட "ரூபன் ஃபேக்டரீஸ்" ஹ்ம் இவன் எல்லாம் என்ன ? என்னளவுக்குஇவனால முன்ன வரமுடியுமா? என்னும் இறுமாப்பு மனதில் எழ சற்றே ஏளனப் பார்வை வீசியவராக அங்கிருந்து முன்னே நகர்ந்தார்.

என்னடா பதிலே பேசாம போறாரே என்று எண்ணியவள் அவர் வேகத்திற்கு ஈடுகொடுத்தவளாக நடந்து,

“நீங்க எங்க இந்த பக்கம் அங்கிள்,?” என்று விசாரித்தாள்.

“என் மக இங்க தான் வேலைக்கு சேர்ந்திருக்கா?” என்றார்.

“ஆனாலும் நீங்க எவ்ளோ டவுன் டு எர்த் அங்கிள். உங்க பிசினஸே எவ்வளவு பெரிசு, நீங்க எல்லோரும் பெரிய ஆளுங்க அங்கிள் உங்க மக இந்த சின்ன ஃபேக்டரில வேலைக்கு வர்றதாஇது உங்க ஸ்டேடஸுக்கு எப்படி ஒத்து வரும்.அதைக் கூட பார்க்காம அனுப்பி வச்சிருக்கீங்க பாருங்க எனக்கே புல்லரிக்குது அங்கிள்.

இவள் யாரென்று அவளை ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்தார் அவர், அதற்குள்ளாக அவள் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.