(Reading time: 13 - 26 minutes)

தோ ஒரு உந்துதலில் அவனை நோக்கி சட்டென திரும்பினான் அந்த சிறுவன். இதழ்களில் புன்னகை பூக்க அவனை பார்த்து புருவம் உயர்த்திக்கேட்டான் விவேக் என்னவாயிற்று என....

'எனக்கு சண்டைன்னா பயம்...' அவன் கொஞ்சம் தடுமாறும் குரலில் தமிழில் சொல்லி முடிக்க சிரித்தே விட்டான் விவேக்.

'எனக்கும் கூட ரொம்ப பயம் கொஞ்ச வருஷம் முன்னாடி வரைக்கும். இதுக்கு மட்டும் இல்ல எல்லாத்துக்கும் பயம். இப்போ எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டேன்...' கண் சிமிட்டி சிறுவனின் கன்னம் தட்டி சொன்னான் அவன். 'கவலைபடாதே நீயும் தூக்கி போட்டுடலாம்...'

மெல்ல தலை அசைத்த சிறுவனின் முகத்தில் நிறையவே வியப்பு. விவேக்கையும் அவன் சீருடையையும் பார்த்தவன்  ' நீங்க பைலெட்ட்டா..???' என்றான் மெதுவாக.

'எஸ்.. புன்னகை இன்னமும் மறையவில்லை விவேக்கின் இதழ்களை விட்டு. ஐ... யாம்... விவேக் .' என்றான் அவனது முகத்தில் ஓடும் அப்பாவி தனத்தை ரசித்தபடியே

'எனக்கும் பிளைட் பிடிக்கும்... ' மெல்ல சொன்னான் சிறுவன்.

'ஓ ரியலி... நீயும் பெரியவனா ஆனா பிளைட் ஓட்டலாம்... ஆமாம் உன் பேரென்ன...' மிக இதமான குரலில் கேட்டான் விவேக்.

விமானத்தில் இல்லாமல் தரையில் இருக்கும் தருணங்களில் இப்படி இறுக்கம் கரைந்து புன்னகையுடன் அவன் யாருடனும் பேசி பல வருடங்கள் ஆகின்றன.

'ஸ்ரீ.. நி.. வாசன்...' அவன் தனது பெயரை நிதானமாக உச்சரிக்க தனது ஒவ்வொரு நரம்பிலும் புத்துணர்ச்சியை செலுத்திக்கொண்ட ஒரு உணர்வில் முகம் மலர நிமிர்ந்தான் விவேக்.

'ஸ்ரீநிவாசன்!!!' குரல் நிறைய சந்தோஷத்துடன் உச்சரித்தான் விவேக். புன்னகை மாறா முகத்துடன் அவனை நோக்கி கை நீட்டினான் 'கிளாட் டு மீட் யூ மிஸ்டர் ஸ்ரீனிவாசன்..'

சட்டென அவன் கை பற்றி குலுக்கினான் சிறுவன். விவேக்கிடம் ஒரு ஆழமான சுவாசம். சிறுவனுக்கும்  நிறையவே சந்தோஷம். 'இதுவரை அவனை யாருமே மிஸ்டர் என அழைத்தது இல்லையே!!!

'எனக்கு காக்பிட் பார்க்கணும் என்னை கூட்டிட்டு போறீங்களா அங்கிள் '

ஓ... எஸ் கண்டிப்பா ஒரு நாள் உன்னை கூட்டிட்டு போறேன்....' என்றவன்  இது என்னோட கார்ட் என்றபடி தனது கார்டை அவனிடம் நீட்டினான் 'இதிலே என் நம்பர் இருக்கு. நீ அப்பபோ இந்த அங்கிளோட பேசறியா???'

சிறுவன் கார்டை வாங்கிக்கொள்ள விவேக்குக்கே கூட ஆச்சரியம்தான். ஏன் இந்த சிறுவனிடம் இப்படி கரைகிறேன் நான்???  

அதற்குள் அங்கே அந்த விவாதம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து ஹரிணி அங்கிருந்து நகர, அங்கே அவர்கள் அருகில் வந்து நின்றுவிட்டிருந்த ஒன்றிரண்டு பயணிகளும் நகர்ந்து விலக இவர்கள் இருவரையும் நோக்கி வந்தான் ராகுல்

அவனிடம் தன்னை அறிமுக படுத்திக்கொண்டு விட்டு, 'ஸ்ரீனிவாசன்... ' ரசித்து உச்சரித்த படியே சிறுவனை பார்த்து புன்னகைதான் விவேக்.

'நம்ம ஸ்ரீனிவாசன் சார் உங்க பையனா மிஸ்டர் ராகுல்??? ஸ்வீட் பாய்... இப்போதான் நாங்க ரெண்டு ஃபிரண்ட்ஸ் ஆனோம்...'

'ஓ...' வியப்புடன் புன்னகைதான் ராகுல் 'இவன் அப்படி சட்டுன்னு யாரோடையும் பேச மாட்டானே!!!'

'நானும் கொஞ்சம் அப்படிதான்னு வெச்சுக்கோங்களேன் . அதனாலே தான் என்கூட ஃப்ரெண்ட் ஆயிட்டானோ???' ஸ்ரீனிவாசனை விட்டு விலக மறுத்தது விவேக்கின் பார்வை.

'நான் உங்க பையோனோட ஃப்ரெண்டா இருக்க உங்க பர்மிஷன் வேணுமே' அழகான மென் நகையுடன் கேட்டான்  ராகுலை பார்த்து.

'ஓ ஷூர்' ராகுல் மகிழ்ச்சியுடன் புன்னகைக்க அதன் பிறகு ராகுலுடன் சில நிமிடங்கள் சாதரணமாக பேசிக்கொண்டிருந்து விட்டு

'நான் வரேன் மிஸ்டர் ஸ்ரீனிவாசன்..' சிறுவனிடம் சொல்லிவிட்டு ஒரு முறை அவன் கேசம் வருடிக்கொடுத்து விட்டு விவேக் நகரப்போக ஏனோ சட்டென அவன் கை பற்றிக்கொண்டான் ஸ்ரீனிவாசன்.

'அங்கிள் நான் அப்புறமா உங்க கிட்டே பேசறேன்...'

'வெயிட் பண்ணிட்டே இருப்பேன்.. இப்போ பிளைட்க்கு டைம் ஆச்சு நான் வரேன் ..' அவனிடம் விடைபெற்றுக்கொண்டு அவன் இறுக்கமாக பற்றி இருந்த கரத்தை விலக்க மனமில்லாமல் விலக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் விவேக். அப்போது ஒலித்தது அவனது கைப்பேசி.

'சொல்லுங்கப்பா...' என்றான் விவேக்.

நிறையவே உற்சாகம் அவனது குரலில். மறுமுனையில் இருந்த அப்பாவுக்கு அது புரியாமல் இல்லை. நிறைவாக இருந்தது அவர் மனம்.

'இல்லப்பா... நீ காலையிலே சாப்பிடாம கிளம்பிட்டே. மனசு கேக்கலை. அதுதான் கூப்பிட்டேன். சாப்பிட்டியாபா எங்கே இருக்கே நீ??..'

'சாப்பிட்டேன்பா.. திருப்தியா சாப்பிட்டேன். இப்போ டெல்லி ஏர்போர்ட்டிலே ஜாலியா சுத்திட்டு இருக்கேன்...'

'தெரியுதுபா. நீ ஜாலியா இருக்கேன்னு தெரியுது. என்ன விசேஷம்???' என்றார் மெதுவாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.