(Reading time: 11 - 22 minutes)

ப்போது நிஷா “ரகு, female soldier எங்கே எல்லாம் போஸ்டிங் இருக்கும் பா..”

“இப்போதைக்கு உங்களுக்கு NDRF (National Disaster Relief Force) , துணை ராணுவ படை இது மாதிரி இடங்களில் போஸ்டிங் வர வாய்ப்பு இருக்கு.. “

இப்படி மேலும் பல விஷயங்கள் கேட்டு தெரிந்து கொண்டே சென்னை வந்து இறங்கினர் நால்வரும்.

ட்ரைன் நிற்கும் முன்னே குதித்து இறங்கியவள் சுராதான்.. அவள்தான் டேஹ்ராடூன் காம்பஸ் வெளியில் வந்து ஆட்டோ ஏறி ஸ்டேஷன் வந்தது முதல் , போன ஸ்டேஷன் இறங்கி வாட்டர் பாட்டில் வாங்கிய வரை தன் அப்பாவிற்கு லைவ் மெசேஜ் கொடுத்துக் கொண்டு இருந்தாளே. அதனால் அவர் அவள் வந்து கொண்டிருக்கும் compartment நிற்கும் இடத்திற்கே வந்து நின்றார். அவரை பார்த்து விட்டுதான் ஒரே குதி சுறா மேடம்..

அவரோடு, நிஷா அப்பா, வருண் நிற்க, அவர்களோடு மகிமாவும் நின்று இருந்தாள். எல்லோரையும் பார்த்ததும் சுராவின் மகிழ்ச்சி கரை புரண்டு சென்றது. அவள் வந்தது பின்னிரவு வரும் ட்ரைன்.. கிட்டத்தட்ட இரண்டு மணிக்கு வந்தது.. அவள் எதிர்பார்த்தது தன் தந்தை மட்டும் தான்.. வருண் ஒருவேளை வரலாம் என்று எண்ணி இருந்தாள். ஆனால் மகிமாவை எதிர்பார்க்கவில்லை.

“ஹேய்.. கீமா.. surprise .. உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சோடாபுட்டி மட்டும் வருவான்னு நினைச்சேன்.. நீயும் வந்துட்டியே..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்..

“ஆமாம். உனக்கு என்ன ? நீ நல்லா என்ஜாய் பண்ணிட்டு வர... நான்தான் இங்கே வரகாட்டுலே மாட்டின மாதிரி ஆளே இல்லாமல் தவிச்சுட்டு இருக்கேன்.. “

“ஹேய்.. ஏண்டா. நீ வர்ஷா கூட friend ஆயிட்டு வெளியில் போறேன்னு சொன்னியே..”

“அத தான் இந்த தடி தாண்டவராயன் கெடுத்துட்டு இருக்கானே.. “ என.

“ஹேய். கொத்து பரோட்டா.. என்னை ஏன் கோத்து விடுற.. “ என்று சண்டைக்கு வர,

சுராவோ “டேய்.. என் செல்லத்த ஏன் வெறி ஏத்திட்டு இருக்கே.. ? உன்னை.. இரு.. தனியா வேப்பிலை அடிக்கிறேன்” என்று மூவரும் சென்ட்ரல் ஸ்டேஷன் அதிரும் வண்ணம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.

அர்ஜுன் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்... “ஐயோ.. இவளை என்ன பண்றதுன்னே தெரியலே.. இன்னும் குழந்தை மாதிரி சண்டை போடுறத.. “ என்று எண்ணிக் கொண்டான்.. என்றாலும் உள்ளூர ரசிக்கவும் செய்தான்.

கிருஷ்ணன் தான் மூவரையும் விலக்கி விட்டு “ஹேய்.. கொஞ்சம் பேசாம இருங்க.. சுபா.. என்னடா .. உன்னோட ஆபீசர்ஸ் எல்லாம் நிற்கிறாங்க.. எல்லோரும் கிளம்பலாம்.. வீட்லே போய் உங்க சண்டை ஆரம்பிக்கலாம்..”

அவர் சொன்னவுடன் உணரந்தவர்களாக வருண் முதலில் “ஹலோ .. அர்ஜுன் சார், ராகுல் சார் .. welcome.. எப்படி இருக்கீங்க.. “ என்று பேச ஆரம்பித்தான்.

மேலும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிருஷ்ணன் “எல்லோரும் போலாமா.. ? package இவ்ளோதானே.. அர்ஜுன், ராகுல் நீங்க ரெண்டு பேரும் எப்படி போக போறீங்க..? கால் டாக்ஸி சொல்லவா..” என்று வினவ,

“அதெல்லாம் வேண்டாம் அங்கிள்.. மிதுன் வந்து இருப்பான்.. நாங்கதான் அவன வெளியில் வந்து பார்கிரோம்னு சொல்லிட்டோம்.. சோ பார்கிங் லே வெயிட் பண்ணிட்டு இருப்பான்..” என,

“தென்..லெட்ஸ் கோ..” என்றபடி எல்லோரும் நடக்க ஆரம்பித்தனர்.

நிஷா தன் தந்தையோடு பேசியபடி வந்தாள்.. “அப்பா.. நீங்க ஏன்பா சென்னை வந்தீங்க.. நாந்தான் இன்னிக்கு மதியானமே நம்ம ஊருக்கு வந்துடறேன்னு சொன்னேனே “ என,

“இல்லைமா.. உங்க அம்மாவிற்கு நீ ஒரு வருஷம் கழிச்சு வரன்னுட்டு தானே கூட்டிட்டு போனனும்னு அடம்.. அதான் இங்கே வந்தோம்..”

“அப்போ அம்மா எங்கே அப்பா..?”

“அம்மா.. எல்லாம் நம்ம வீட்டிலே இருக்காங்க.. நாம எல்லோரும் நேரே நம்ம வீட்டுக்குத்தான் போறோம்.. அப்புறம் நீ அப்பா , அம்மாவோடு ஊருக்கு போகலாம்” என்றார் கிருஷ்ணன்..

ராகுலும், அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நிஷாவின் அப்பா “ஆமாம் நிஷா.. உன் அம்மாவை நாங்கள் சுபா அம்மாவோடு வீட்டில் இருக்க வைத்து விட்டு வந்தோம்.. இந்த பொண்ணு மகிமா தான் எங்களுக்கு முன்னாலே கார்லே ஏறி உட்கார்ந்துட்டு இறங்க மாட்டேன்னு சொல்லிட்டா.. வேற வழி இல்லாமல் கூட்டிட்டு வந்துட்டோம்..

இவர்களின் பேச்சை கேட்ட சுறா “மகி , நீ ஏண்டா இந்த நைட் வர்ற.. அட்லீஸ்ட் நம்ம வீட்லேயவது வெயிட் பண்ணலாம்லே.. நாளைக்கு காலேஜ் வேற போகணுமே..”

“ஹேய்.. நீ எப்போ இவ்ளோ நல்லவ ஆனே..நாமல்லாம் டெல்லிலே மழை பெஞ்சா, இங்கே லீவ் போடுவோம்.. கேட்டா இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் ன்னு prayerலே சொல்ற உறுதி மொழி சொல்லி, அங்கே என் சகோதரி மழையில் வாடும் போது , எனக்கு மட்டும் ஏன் காலேஜ்... ? ன்னு டயலாக் பேசி proffessor எ தெறிக்க விட்ட ஆளு..

என் ஆருயிர் தோழி ஒரு வருஷம் கழிச்சு வீடு திரும்புகிறாள்.. whats up லே smilee, face புக் லே பீலிங் excite ன்னு status, instagram லே செல்பி ன்னு எவ்ளோ அப்டேட் பண்ண வேண்டி இருக்கு.. நாளைக்காவது காலேஜ் போறதாவது..”

என்று அலப்பறை விட, மகியும், சுராவும் hifi கொடுத்துக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.