(Reading time: 9 - 17 minutes)

ன்ன ஆச்சு சுபத்ரா..”

“ப்ரோ.. நான் உங்களைத்தானே ஸ்பொன்சர் பண்ண சொன்னேன்.. நீங்க ஏன் இந்த சிடுமூஞ்சி கிட்ட அனுப்பி வச்சீங்க..”

“ஹேய்.. யாரு சிடுமூஞ்சி.. “

“பொறுமை கேப்டன்.. பொறுமை.. “

“நீ அடிச்ச கூத்துக்கு அந்த புத்தருக்கே பொறுமை போய் இருக்கும்..”

“அப்படி என்னடா பண்ணினா அவ ?”

“இதோ இருக்கிற மிளகாய் பஜ்ஜி கடையில் ஆரம்பிச்சு , அந்த கடைசியில் இருக்கிற கார்ன் விக்கிற கடை வரை ஒரு item பாக்கி இல்லாமல் வாங்கி தின்னுருக்கா.. கூடவே அவ friend வானரத்துக்கும் சேர்த்து. ரெண்டு வானரமும் சேர்ந்து  horse ride ஆரம்பிச்சு பலூன் சூட் வரை ஒன்னு விடலை.. அதுலேயும் ஆர்மிலே ஷூட்டிங் first வந்தவ இங்கே இந்த வெத்து துப்பாக்கி பலூன் கூட மல்லு கட்டுறா.. பலூன் கடைக்காரன் என்னை ஒரு மாதிரி பார்கிறான்.. அவன் கடையே நான் காலி பண்ண வந்த மாதிரி.. நீ உன் ஆளோட கடலை போட என் purse காலி பண்ணதும் இல்லாமல், பலூன் கடைக்காரன் வரை என்னை ஒரு மாதிரி பார்க்க வச்சுட்டியே.. ” என்று புலம்பி தள்ளி விட்டான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இதை கேட்ட ராகுலும், நிஷாவும் சிரிக்க, அர்ஜுன் இருவரையும் முறைத்தான்..

அப்போது மகிமா.. “அடியேய். சுறா.. என்னது இது.. இந்த பூனையும் மில்க் குடிக்குமான்னு இருந்த நிஷா இப்போ மில்க்ஷேக் வித் ஐஸ்கிரீம் அடிக்கிறாளா?” என்று வினவ,

“அடியேய்.. கீமா.. வாட் யு டெல்லிங்..” என்று ஓட்டை இங்கிலீஷ் லே ஒட்டிக் கொண்டிருந்தாள் சுறா..

“இல்லடி .. சாதுவான நிஷா கூட காதல் வலையில் விழுந்து விட்டாளா.. நம்ப முடியவில்லை .. இல்லை.. இல்லை. “ என்று எகோ எபக்ட் கொடுத்து பாடினாள் மகிமா.

“நானும் அப்படிதாண்டி நினைச்சேன்.. ஆனால் இவள் எப்படி தெரியுமா..? என்று முதல் நாள் படத்தை செவேன்ட்டி எம்எம் ரீல் ஒட்டி சொன்னாள் சுறா..

சுராவை நிஷா அடிக்க வர, அவளை மகிமா காப்பாற்ற என்று அவர்கள் மூவரும் ஓட, இதை பார்த்தபடி வந்த மிதுன் ..

“ஹ்ம்ம்.. டேய் ராகுல் உன் காட்டில் மழை தாண்டா..” என்று பெருமூச்சு விட்டான்..

மிதுனை பார்த்த மகிமா “ஹாய் மிதுன்.. நீங்க எங்கே இங்க.. ?” என்று வினவ,

“இங்கே ஒரு பச்சை கிளி  எனக்காக காத்துட்டு இருக்குன்னு பட்சி சொல்லிச்சு.. “ என்று முனகினான்

“என்ன சொல்றீங்க . புரியல ?” என்று மீண்டும் மகிமா வினவ,

“ஒன்னும் இல்லைமா.. இங்கே வெளிச்சம் பிரகாசமா இருக்கே.. எல்லா லைட் உம பிரகாசமா எரியுதோ நு யோசிச்சேன்..” என்று கூற, ராகுலும், அர்ஜுனும் மிதுனை பார்த்து சிரித்தனர்.

மழை பொழியும்

Episode 22

Episode 24

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.