(Reading time: 14 - 27 minutes)

போங்க அங்கிள் நா வந்து ரொம்ப நேரம் ஆச்சு நீங்க என்ன வயசானவங்க மாதிரி இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்கீங்க..

கார்த்திக்கோ ஆஹா ரிடெயர்ட் டீச்சர பத்தி தெரியாம இவ வாய காட்டுறாளே..அவரு மணிரத்னம் படம் மாறி ரெண்டு வார்த்த சேர்த்து பேசினால உலக அதிசயம்..மகளே மாட்டுன என அவர்களை பார்க்க..

என்னம்மா நீ 60 வயசு ஆயாச்சு அப்பறம் வயசானவனில்லாம நா என்ன காலேஜ் பையனா..

அடடா வயசெல்லாம் வெறும் நம்பர்தான் அங்கிள்..மதியானம் சாப்ட்டு இப்படிதூங்கினா அப்பறம் ஆன்ட்டிக்கு அண்ணா மாறியிருப்பீங்க..ஸ்வீட்டிய பாருங்க எப்படி காலேஜ் கோயிங் மாறியிருக்காங்க..அவங்களோட ரொமான்ஸ் பண்றதவிட்டுட்டு இப்படி டைம் வேஸ்ட் பண்ணா எப்படி..கீதா வேகமாய் வெளியே எட்டி பார்க்க கணவனின் பார்வையில் என்ன கண்டாரோ மறுபடியும் உள்ளே நுழைந்து கொண்டார்..இங்கு சிறியவர்களுக்கோ சிரிப்பு தாளவில்லை இருப்பினும் அவர்கள் அப்பாவிடம் இப்படியெல்லாம் பேசியதில்லை என்பதால் அடக்கி வாசித்தனர்..

ஒன்றும் கூறாமல் அளை பார்த்து லேசாய் சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டார்..சட்டென கார்த்திக்கை பார்த்தவள் இப்போ தெரியுது எதுக்கெடுத்தாலும் ஒரு சிரிப்பு  உங்களுக்கு யார்கிட்டயிருந்து வந்ததுநு..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "விவேக் ஸ்ரீநிவாசன்" - இனிய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

ஆனா சஹானா யு ஆர் க்ரேஸி..எப்படி இப்படி எல்லாரையும் போட்டு வாங்குறீங்க..ஆனா எங்கப்பா மாட்டினதுதான் ஹைலைட் என சிரிக்க..

நா கொஞ்சம் அப்படிதான் ஷரவ்..தோணினத டக்குநு பேசிருவேன்..பட் யாரையும் ஹர்ட் பண்றமாறி பேசமாட்டேன்..யுஷுவலா அவ்டெர்நூன் தூங்குறது நாட் குட் பார் ஹெல்த் சோ இப்ப நா சொன்னத வச்சு எதாவது சேஞ்ச் நடந்தா அது நல்லதுதான..அப்படியே ஆன்ட்டிக்கும் ஒரு கம்பனி கிடைச்சா மாறியிருக்கும்ல என கூறி கண்சிமிட்ட..அவளை விட்டு கண்அகற்றாமல் இருந்தான் கார்த்திக்..

அதன்பிறகும் எவ்வளவோ பேசிவிட்டு ஒரு வழியாக கிளம்ப தயாரனபோது மணி ஏழை தொட்டிருந்தது..கீதா, கார்க்திக் நீ கூட போப்பா இருட்டிருச்சு பாரு..

அதெல்லாம் வேண்டாம் ஸ்வீட்டி நா பாத்து போய்ப்பேன் அப்பறம் உங்க பையன பத்திரமா விட்டுட்டு வர சொல்லி எங்கம்மா என்ன கூட அனுப்புவாங்க பரவால்லையா??

நல்லா பேசுற..நீ இருந்தா நேரம் போறதே தெரில ஷரவந்தியும் வாலு தான் ஆனா உன்ன கம்பேர் பண்ணா அவ ஒண்ணுமேயில்ல..என்று அவள் கன்னத்தை கிள்ளி சிரித்தார்..

கார்த்திக் மனசு கேட்காமல் வாசல் வரை வந்து நா வேணா வரேனே சஹானா..தனியா மேனேஜ் பண்ணிடுவீங்களா??

கார்த்திக் உங்க மனசுல என்ன நினைக்குறீங்கநு தெரியும்..என்கிட்ட வம்பு பண்ணிணா அவன்தான் ரொம்ப பாவம்நு தான நினைக்குறீங்க..

ச்சச்ச அப்டிலா இல்லங்க..சரி ரீச் ஆனவுடனே மெசெஜ் பண்ணுங்க..டேக் கேர்..

ஷுவர்..பாய்..

வீட்டிற்கு சென்று அவனுக்கும் ஷரவந்திக்கும் மெசெஜ் அனுப்பிவிட்டு குளித்து இரவு உடைக்கு மாறி கட்டிலில் விழுந்தவளுக்கு வழக்கம்போல் கார்த்திக்கின் நினைவுகளே ஆட்கொண்டது..அதிலும் இன்று அவன் நின்ற கோலம் இப்போது நினைத்தாலும் ஏனோ வெட்கம் பிடுங்கி தின்றது..அங்கு கார்த்திக்கோ மொத்தமாய் சஹானாவை தான் நினைத்து கொண்டிருந்தான்..தன் தாய் தந்தையோடு அவள் பழகியவிதம்..ஷரவன் ஷரவந்தியோடு அரட்டை என அனைத்தையும் தாண்டி அவனை பார்க்கும் போது கண்களில் சிறு மின்னல் என ஏதேதோ நினைத்தவனுக்கு தன் எண்ண போக்கினை நினைத்து கோபம் வந்தது..இல்ல இது சரிவராது அறியாமல்கூட அவளை சஞ்சலபடுத்தி விட கூடாது என்று முடிவெடுத்தான்..இனி முடிந்தவரை அவளை பார்ப்பதை தவிர்க்க வேண்டுமெனவும் நினைத்து கொண்டான்..

ஹலோ ப்ரெண்ட்ஸ் வெலென்டைன்ஸ் டே ஸ்பெஷல் எப்படியிருந்தது..ஹீரோ அதிரடி முடிவெல்லாம் எடுக்குறாரு பட் நாம விட்டுருவோமா..நம்ம KC யோட அடுத்த மூவ் என்னனு பொறுத்திருந்து பார்ப்போம்..

தொடரும்

Ninnai saranadainthen - 02

Ninnai saranadainthen - 04

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.