(Reading time: 7 - 13 minutes)

தை நினைத்து பார்த்தவளின் கன்னங்களில் வெட்கத்தின் செந்தூரம் குடியேறியது. ஏதோ குத்துமதிப்பாக வருணின் பெயரை சொல்லி வைத்தவள், அவன் இன்று தன் எதிரில்  நிற்பான் என்று கனவிலும் எண்ணவில்லையே!

அவளது எண்ண ஓசைகளுக்கு பங்கம் விளைவிக்கும் எண்ணம் இல்லாமல் அவளையே கூர்ந்து பார்த்தான் வருண்.

அன்பு, அதீத மகிழ்ச்சி,வியப்பு ,பரிதவிப்பு என விஷ்வானிகாவின் முகத்தில் ஒவ்வொரு உணர்வாய் தோன்றி மறைந்தது.கடைசியாய் எதையோ எண்ணி அவளது முகம் வாடிவிடவும்,

அவளுக்கு மட்டுமே கேட்கும்குரலில், என்னடா?என்றான் வருண்.

“நீ ஏன் என்னை விட்டுட்டு போன?”

“..”

“உன்னை நான் நிறைய தடவை மிஸ் பண்ணினேன் தெரியுமா?”

“..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“என்னை அவ்வளவு மிஸ் பண்ண வெச்சதுக்காக ஐ ஹேட் யூ” என்று முகத்தை திருப்பி  கொண்டாள் வினி. மிக இயல்பாய் வெகு உரிமையாய் அவளது தாடையைப் பற்றி திருப்பினான் வருண்.

“நான் உன்னை விட்டுட்டு எங்கே ஓடி போனேன் விஷ்வா? என்னால் போகவும் முடியுமா?”

“அப்போ நீ ஏன் என்னை பார்க்க வரல?உனக்கும் நான் வேண்டாமல் போயிட்டேனா?”

“ அப்படின்னு நான் எப்போ சொன்னேன்..? எனக்கு எப்பவும் என் விஷ்வாதான் முக்கியம்” சிறுவயதில் அவன் அடிக்கடி மொழிந்த வசனத்தை கொஞ்சமும் பிசகாமல் அவன் சொல்லவும் விஷ்வானிகாவின் முகம் மலர்ந்து போனது. அதே மலர்ச்சியில், சட்டென கேட்டிருந்தாள்.

“வைஷுவோட மரணத்துக்கு நான் காரணம் இல்லைல வருண்?”. அவனுக்கு சர்வமும் அடங்கி போனது.இப்படிபட்ட எண்ணம் இவள் மனதில் எப்படி விழுந்தது.இந்த எண்ணத்தை சுமந்து கொண்டுதான் வாழ்கிறாளா இவள்? பதட்டத்துடன் அவள்கையை அவன் ஆறுதலுக்காக பற்ற,விஷ்வானிகாவிற்குள் அசைக்க முடியாத நிமிர்வு.

இது வரை அவளது பெயரை சொல்லகூட நடுங்குபவள், இன்று நடந்ததை அசைப்போட ஆரம்பித்தாள் தைரியமாய்!

விஷ்வா, என்னை பிடி..என்னை பிடி..ஹா ஹா சகிண்ணா தள்ளி போ..அபிண்ணா விஷ்வா உங்க பக்கம் வர்றா ஓடுங்க” என்று அந்த வீடே அதிர்ந்தது அச்சிறுமியின் குரலில்.

தன் கண்கள் கட்டப்பட்டநிலையில் இருக்க,கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த விஷ்வானிகாவின் செவியில் சகிதீபன் என்றோ சொன்ன அறிவுரை கேட்டது.

“கண்ணாமூச்சி விளையாட்டில்கூட கத்துக்குறதுக்கு நிறைய இருக்கு விஷ்வா. கண்ணை கட்டியதால் நீ பலவீனமானவள்னு இல்லை. உன் உடல் உறுப்புல கண்ணு இப்போ ரெஸ்ட் எடுக்குது. சோ மத்த பார்ட்ஸ் அதிவேகமா வேலை செய்யனும். காதை கூர்மையா வெச்சுக்கோ.காலடி சத்ததைகவனி. பேச்சு சத்ததைகவனி. லைஃப்ல் எல்லா நிலையிலும் ஒரு வாசல் மறைஞ்சால் மறு வாசல் திறக்கும்.”

என்றோ சகிதீபன் சொன்னவார்த்தைகள் விஷ்வாவிற்கு சட்டென நியபாகம் வந்தது பெரிய அதிசயமே இல்லை.காரணம் அவளுக்கு எல்லாமே அவன்தான்! வைஷுவின் குரலை உன்னிப்பாக கவனித்து அவளை பிடித்து விட்டிருந்தாள் விஷ்வானிகா.

“வைஷு அவுட்டு.. வைஷூ அவுட்டு..”என்று அவள் குதிக்கவும்

“அச்சோடா… தோத்து போயிட்டேனா?” என்று முகத்திலே நவரசத்தையும் வெளிப்படுத்தினாள் வைஷாலிகா. விஷ்வானிகாவும் ஒரே வேளையில் ஒரே கருவறையை பகிர்ந்து பிறந்தவள்.!

ஹாய் ப்ரண்ட்ஸ்.. என் மேல கோபப்படாதிங்கப்பா.. போன எபிசோட்கு காய்சல். இப்போ பரிட்சைனு வாழ்க்கை என்னை போட்டு தாக்குது. அதான்..இன்னும் ஒரு வாரம் பொருத்துக்கோங்க..டக்குனு எக்சாம் முடிச்சிட்டு ஓடி வரேன்..எனக்காக ப்ரே பண்ணிக்கோங்க..நன்றி

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.