(Reading time: 8 - 15 minutes)

ஸ்.. அர்ஜுன்.. இந்த முறைலே தான் நம்ம எதிரிகள் தகவல்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். நம்முடைய தகவல் தொடர்பு சாதனங்களும் hake செய்ய வாய்ப்பு இருக்கலாம் என்பதால் நாமும் அவங்களை மாதிரி பப்ளிக்கா அதே சமயம் ரகசிய வார்த்தைகளாலே தகவல் பரிமாறிக் கொள்ளலாம் என்று தோன்றியது.

“உங்க எண்ணம் கரெக்ட் தான்.. ஆனால் நாம அவங்க திட்டங்கள எப்படி புத்திசாலித்தனமா கண்டு பிடிச்சோமோ , same technic use பண்ணும் போது அவங்களும் அதை கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?”

விக்ரமன் யோசனை செய்தபடி “கரெக்ட் தான் அர்ஜுன்..”

“அதோடு இப்போ வரை நாம பண்றது அவங்களோட information தெரிஞ்சிக்கும் வழிகள்.. ஆனால் இனிமேல் நம்மோட ரகசியங்கள் நாம பகிரும் போது, அது இந்த மாதிரி பப்ளிக் பண்ண முடியாது.. “

“எஸ்.. அர்ஜுன்.. யு ஆர் ரைட்.. பட் நமக்கு வேற என்ன solution இருக்கு?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழ் என்று பேர்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ஹ்ம்ம்.. மிஸ்..சுபத்ரா.. இப்போ நீங்க செய்த டிசைன் இன்டர்நெட் மூலமா தகவல் பரிமாறும் வழியா தானே செய்து இருக்கீங்க..”

“எஸ்.. சார்..”

“ இதையே ..நாம ஏன்.. மொபைல் குரூப் மெசேஜ் அல்லது app மாதிரி பண்ணக் கூடாது.. “ என்று வினவினான் அர்ஜுன்..

“நீங்க சொல்றது புரியல.. சார்..”

“இப்போ இங்கே இருக்கிற பதினைந்து பேருக்கு மட்டும் தனி சிம் வாங்கி கொடுத்து , அந்த நம்பர்க்கு ஒரு குரூப் create பண்ணனும்.. அது complete ஆ நம்ம டெலிகாம் department மூலமா யாரும் hake செய்ய முடியாது என்பது மட்டும் இல்லாமல், அந்த நம்பர் கூட இந்த ஆபரேஷன் முடிஞ்சதும் destroy பண்ற மாதிரி இருக்கணும்.. & யாரு என்ன மெசேஜ் பாஸ் பண்ணினாலும் அது பர்டிகுலர் ஆ ஒரு நம்பர் அதாவது சர்வர் நம்பர் மாதிரி அங்கே மட்டும் தான் போகணும்.. சர்வர்லேர்ந்து மட்டும் தான் சம்பந்தப்பட்ட மத்தவங்களுக்கு மெசேஜ் போகணும்.. டைரக்ட் வெப்சைட் டிசைன் விட இது பெட்டெர் இல்லையா..?”

இதுவும் நல்ல ஐடியா என்று தான் எல்லோரும் எண்ணினார்கள்.. இது சம்பந்தப்பட்ட மேலும் சில சந்தேங்கங்களை அர்ஜுனிடம் கேட்க அவனும் தனக்கு தோன்றியதை சொன்னான்.

இதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து , ஒருவாறு எல்லோரும் ஒப்புக் கொண்டனர். இதில் உள்ள சில technical ப்ரோப்லேம் கூட விவாதித்தனர்.

பின் விக்ரமன் “சுபத்ரா.. இது உன்னால் முடியுமா...?” என்று கேட்டார்,

சுபா “முடியும் சார்..”

“எத்தனை நாளில் முடிப்பாய்..?” என்று கேட்க,

அர்ஜுன் இடையிட்டு “சார்.. நமக்கு அதிக அவகாசம் கிடையாது.. அதனால் நோ dead லைன்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதனை சீக்கிரம் நமக்கு கிடைக்க வேண்டும்.”

சுபத்ரா ரோஷமாக “சார்.. நாளை மறுநாள் இதே நேரத்தில் முடித்து விடுகிறேன்..” என்றாள்.

“குட். அப்போ எல்லோரும் போகலாம்.. நாளை மறுநாள் நாம இங்கே திரும்ப கூடுவோம்.. இந்த discussion மட்டும் இல்லாமல், அடுத்த action பத்தியும் பேசலாம்..” என, எல்லோரும் டென்ட் விட்டு வெளியே வந்தனர்.

வெளியில் வந்த எல்லோரும் மீட்டிங் பற்றி பேசாமல், வேறு ஏதோ பேச ஆரம்பித்தனர்.

அப்போ அவள் அருகில் அர்ஜுன் வர,

“என்ன மேஜர் சார்.. நக்கீரர் பரம்பரையோ..? ஏதோ பொண்ணு கஷ்டப்பட்டு ப்ரோக்ராம் பண்ணிருக்காலே.. அதை பாராட்டுவோம் நு இல்லாமல் குறை சொல்லிட்டு இருக்கீங்க..” என்று அவனிடம் பழிப்பு காட்டிய படி கேட்டாள்.

“ஹேய்..  வாலு.. உன் டிசைன் பத்தி நான் எதாவது சொன்னேனா..? கான்செப்ட் பற்றி தானே சொன்னேன்.. அதோட உன்னோட டிசைன் அப்படியே app ஆ கன்வெர்ட் பண்ண போற..? இதுக்கு ஏன் இந்த சீன்..?”

“போங்க..கேப்டன்.. இப்போ நான் இன்னும் ரெண்டு நாள் மூளைய கசக்கனும்..”

“ஹோய்.. அப்படி ஒன்னு இருக்கா என்ன.. உன்கிட்ட..?”

“இல்லாமலா இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் பண்ணினேன்..?”

“அது எல்லாம்.. கட் .. காபி.. பேஸ்ட் தானே..”

“பாஸ்.. உண்மை எல்லாம் பப்ளிக் லே சொல்ல கூடாது...” என, இருவரும் சிரித்து விட்டனர்.

“சரி விடு... உன்னோட வொர்க் & நீ கொடுத்த information எல்லாம் ரொம்ப effective ஆ இருக்கு சுபத்ரா... குட்.. & வெரி ப்ரௌட் ஒப் யு..”

“நன்றி தலைவா.. “ என்றவள் பின் “அர்ஜுன்.. என்ன ஆச்சு.. கொஞ்ச நாளா நீங்க மெசேஜ் பண்ணவே இல்லை..” என்று வினவ,

அட என்னை தேடினாளா என்று எண்ணி சந்தோச பட்டவன் “இங்கே உள்ள நிலவரம் புரியுது இல்லையா சுபா.. அதுதான்.. “ என்றான்.

“டேக் கேர் அர்ஜுன்.. & முடிஞ்ச வரை மெசேஜ் பண்ண ட்ரை பண்ணுங்க.. அப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆ இருக்கும்..”

“sure.. சுபா..” என்றவன், தன் மனதிற்குள் சுபத்ரா சாதரணமாக பேசும் போது நிக் நேம் வைத்து பேசுபவள், அக்கறையோடு பேசும் போது அர்ஜுன் என்று அழைப்பதை உணர்ந்தான்..

ஹாய்.. friends.. எக்ஸாம் டைம் என்பதால் கதைக்கு அதிக டைம் கொடுக்க முடியல .. அடுத்த எபிசொட் detail ஆ கொடுக்க முயற்சிக்கிறேன்.. பொறுத்துக் கொள்ளுங்கள் friends..”

மழை பொழியும்

Episode 29

Episode 31

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.