(Reading time: 23 - 46 minutes)

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனைவரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்தாள் மித்ரா.

அனன்யா ஊருக்கு செல்வதால் அவளை தவிர அனைவரும் வருவதாக அவளிடம் கூறினர்.ஆகாஷ் உட்பட..

கவிக்கு மித்ராவின் வீடு என்றாள் மிகவும் பிடிக்கும்.அதற்கு காரணம் மித்ராவின் பெற்றோர்கள் ராகவன்-மைதிலி.

முதன்முதலாய் கவி அவர்கள் வீட்டிற்கு சென்றவந்த பொழுது மித்ராவை பார்த்து மிகவும் பொறாமைபட்டாள்.

ஒரு மனிதனுக்கு தான் எதிர்ப்பார்க்கும் ஒரு பொருள் தனக்கு கிடைக்காத பொழுது அது அடுத்தவர்களிடம் இருப்பதை பார்த்து பொறாமை வருவது இயற்கை தானே..,அதுதான் கவிக்கும் ஏற்ப்பட்டது.

அவள் எதிர்ப்பார்த்து ஏங்கிய குடும்பம் மித்ராவின் குடும்பம்.அன்பான அப்பா-அம்மா,அவர்களின் மொத்த பாசத்தையும் குத்தகைக்கு எடுத்தவளாக மித்ரா.

ஆனால் அவளது பொறாமை கானல்நீர் போல் அடுத்து வந்த சந்திப்புகளில் மறைந்து விட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

கவியை பற்றி யாமினி சொன்னவரை மித்ரா அவர்களிடம் கூறியிருந்தால்,அது அவர்களுக்கு தெரிந்திருந்ததால் அவளை அழகாக கையாண்டார்கள்.

அனுதாபத்தினால் வரும் அன்பிற்கும்,உண்மையான அன்பிற்கும் வித்தியாசம் உள்ளது. மித்ராவின் பெற்றோர்கள் உண்மையான அன்பையே அவள் மீது காண்பித்தார்கள்.

அனுதாபத்தினால் வந்த அன்பையே அதுநாள் வரை எதிர்கொண்டவளுக்கு அந்த அன்பு அவளது ஏக்கத்திற்கு ஒரு வடிகாலாக அமைந்தது.

புதுவருட கொண்டடதிற்காக அனைவரும் மித்ரா வீட்டிற்கு சென்றனர்.ஆகாஷை தவிர அனைவரும் அங்கு சென்றிருந்தனர்.

அனைவரின் வருகைக்காக  மித்ரா வாயிலிலேயே அவர்களை எதிர்பார்த்து நின்றுக்கொண்டிருந்தாள்.

வீட்டின் கேட் உள்ளே சென்றதும் காரை விட்டு இறங்கிய கவி மித்ராவை கூட கண்டுக்காமல் வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் அவ்வாறு உள்ளே  சென்றதைப் பார்த்த ஆகாஷ் மித்ராவிடம் என்ன பிரச்சனை என்றுக் கேட்டான் ,அதற்கு ஒன்றும் இல்லை என்றுக் கூறிய மித்ரா உள்ளே போய் பாருங்க தெரியும் என்றுக் கூறினாள்.

“பப்பா...”என்று அழைத்துக் கொண்டே உள்ளே சென்றால் கவி.

அவளது குரலை கேட்ட உடனே சோபாவில் அமர்ந்திருந்த ராகவன் எழுந்து

“மைதி ஸ்வீட் எடுத்துட்டு வா..,கவிம்மா வந்துட்டா பாரு..”என்று கூறிக்கொண்டே வந்தார்.

“பப்பா,எப்படி இருக்கீங்க ..”என்றுக் கேட்டவாரே அவரது அருகில் சென்று அணைத்துக்கொண்டாள்.

அதற்குள் அனைவரும் உள்ளே வந்தனர்.அதற்குள் மைதிலியும் அவர்களுக்கு ஸ்வீட் எடுத்துகொண்டு வந்தார்.

மித்ரா ஆகாஷையும்,விஷாலையும் தனது பெற்றோருக்கு அறிமுக படுத்தி வைத்தாள்.பின்னர் வழக்கமான நல விசாரிப்புகளுடன் இரவு உணவை முடித்தனர்.

கவி,ராகவனுடன் இணைந்து அனைவரையும்  கலைத்துக் கொண்டிருந்தாள்.

விஷ்வாவும்,ஆகாஷும் அங்கு ஒரு புதிய கவியை சந்தித்தனர்.அவளது ஏக்கம் அவர்களுக்கு புரிந்தது.ஆனால் அவள் யாருடனும் இவ்வாறு உரிமையாய் பழகியது இல்லை.

தனது தோழிகளின் தந்தையை அவள் அப்பா என்று அழைப்பாள் ஆனால் இவ்வளவு அன்பாக யாருடனும் அவள் பழகியது இல்லை.

அதுவும் பப்பா என்ற அவளது அழைப்பு அவ்வளவு உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

ரவு உணவிற்கு பிறகு அனைவரும் வீட்டின் முன் இருந்த புல்வெளியில் அமர்ந்தனர்.

அப்பொழுது மைதிலி கவிக்கு பிடித்த ஐஸ்கிரீம் கொண்டு வந்தார்.

அதை சுவைத்துக்கொண்டே அனைவரும் கதை அடிக்க ஆரம்பித்தனர்.

“ஆன்டி இப்பதான் புரியுது மித்ரா எதுக்கு எப்பொழுதும் காண்டீன்லே...” இருக்கானு என்று பேச்சை ஆரம்பித்தான் ஆகாஷ்.

“அப்படியா..ஆகாஷ்,என்ன மித்ரா இது இப்படியா நம்ம குடும்ப மானத்த வெளியில காப்பாத்துவ,நான் கூட உன்ன தப்பா நினைச்சிட்டேன்..,நீ என்னோட பொண்ணுன்னு நிரூபிச்சிட்ட....” என்று  ராகவன் கூற அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“என்ன பண்றது தம்பி எல்லாம் என்னோட மனைவி பண்ண வேலை...”என்று மைதிலியை அவர் கலாய்க்கவும்

“கரெக்ட் அப்பா..”என்று மித்ரா அவருக்கு ஹை-பை கொடுத்தாள்.

அதனை கவி ஒரு வித ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.அதைப் பார்த்த ராகவன் கவியை மாற்ற நினைத்தார் அவர்.

 “அப்படியே இருந்தாலும் ஆகாஷ்,என்னோட மாப்பிள்ளை தான் ரொம்ப பாவம் ..,இல்லடா கவிம்மா..”என்று கவியை கேட்டார் ராகவன்.

அதுவரை ஏதோ யோசனையில் இருந்த கவி மீண்டும் கலகலப்பாக பேச ஆரம்பித்தாள் கவி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.