(Reading time: 23 - 46 minutes)

ண்டிப்பா பப்பா,நம்ப  வீட்டு மாப்பிள்ளை தான் ரொம்ப பாவம்...,நீ என்ன நினைக்குற அமர்..”என்று அவனையும் இழுத்துவிட்டாள் கவி.

என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான் அமர்.

“அந்த தம்பிய ஏன்மா கேக்குற மித்ரவா பொண்ணு பாக்குற வர மாப்பிள்ளை கிட்ட நாம முன்னாடியே சொல்லிடலாம்...”என்றுக் கூறினார் ராகவன்.

அதுவரை என்ன சொல்லுவது என்று தெரியாமல் இருந்தவன் மித்ராவை பொண்ணுபார்க்க வருகிறார்கள் என்றுக் கூறியதும் அதுவரை அமைதியாக இருந்த அமரின் வாயில் இருந்து வார்த்தை வந்துவிட்டது.

“என்ன அங்கிள் அப்படி சொல்லுறிங்க,அதுக்குள்ள மித்ராவுக்கு கல்யாணமா...”என்றுக்  கேட்டான் அமர்.

“ஆமாம் தம்பி,மிதுக்கு கல்யாணம் பண்ணலானு முடிவு பண்ணிருக்கேன்..,இதுல என்ன இருக்கு அமர்…”என்றுக் கேட்டார் ராகவன்.

“ அதுவா அங்கிள் நான் இருக்குறப்ப நீங்க எதுக்கு புதுசா மாப்பளை பார்த்துக்கிட்டு,நான் உங்க பொண்ண நல்லா பார்த்துக்குவேன்,அவ சாப்புடுறத பத்தி நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்,என்னை நம்பி உங்க பொண்ண தரலாம் மாமா,அவள மட்டும் இல்லாமல் உங்களையும் நான் நல்லா கவனிச்சிக்கிறேன்..”என்றுக் கூறி அனைவரையும் ஒரு நிமிடம் திகைப்பில் ஆழ்த்திவிட்டான்,மித்ரா உட்பட அமர்.(பின்ன என்னாங்க இப்படி பொண்ணு கேக்குறான்...)

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ஒரு நிமிடம்

 அவனையும்,மித்ராவையும்  ஒரு நிமிடம் முறைக்க பார்த்தார் ராகவன். பின்பு அவரும்,கவியும் ஹை-பை கொடுத்து கொண்டனர். அவருக்கு அமர் மற்றும் மித்ராவின் விஷயம் தெரியும் அவர்களைப் பற்றிய விஷயத்தை கவி ஏற்கனவே அவரிடம் சொல்லி  இருந்தால்,அது மித்ராவுக்கு கூட தெரியாது.

ராகவனுக்கு அமரைப் பற்றி தெரியும் அதனால் அவன் வாயல் அவனே சொல்ல வேண்டும் என்று நினைத்தவர் இப்படி ஒரு குண்டைபோட்டார்.

மித்ராவிற்கு அவளது தந்தை திருமணத்தை பற்றி பேசியதும் அவளுக்குள் ஒரு பதட்டம் இருந்தது,அமர் அவள் தந்தையிடம் தானே திருமணம் செய்துக் கொள்கிறேன் என்றுக் கூறிய பொழுது சந்தோசமும்,கோபமும் ஒரே  நேரத்தில் வந்தது. (லவ் ப்ரோபோஸ் பண்ணாம மேரேஜ் பத்தி பேசுனா கோபம் வருமா வராதா...)

அவளது தந்தை என்ன சொல்வார் என்று அவள் தன் தந்தையின் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தபொழுது  அவளது மனதில் ஒரு வித பயம் எழுந்தது.

கடைசியாய் கவியும் அவளது தந்தையையும் ஹை-பை கொடுத்து கொண்டதைப் பார்த்தவள் இது எல்லாம் கவி தான் கூறி உள்ளால் என்று புரிந்துக் கொண்டவள் அவளை ஒரு துவை துவைத்து எடுத்தாள்.

நிலவை உரசும் மேகம் அந்த

நினைவை நினைத்தே உருகாதா

உயிரை பருகும் காதல் அது

ஒரு நாள் உன்னையும் பருகாதா

நீ முடிந்த பூவில் ஒரு இதழாய்

வாழ்ந்துவிட்டு போவதற்கு நினைப்பேன்

நீ நடந்த மண்

எடுத்து சிலநாள் சந்தனத்தின்

வசம் அதில் நுகர்ந்தேன்

நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வாழ்கிறேன்

அதை பார்த்து அனைவரும் சிரித்தனர்.ஒரு வழியாக மணி பன்னிரெண்டை தொட அனைவரும் கேக் வெட்டி புது வருடத்தை அன்போடு  வரவேற்றனர்.

ஒரு வழியாக அந்த கொண்டாட்டம் எல்லாம் முடிந்ததும் அமர் ராகவனைப் பார்த்துக் கண் அசைக்க அவரும் கண்களாலே சம்மதம் சொன்னார்.

அதைக் கவனித்த கவி ”என்ன மாமனாரும் மருமகனும் கண்களாலே பேசிக்கிறிங்க..”என்று அமரை விசாரிக்க அவன்.

“அத வாயால் சொல்றத விட செயலாலே காமிச்சுடுரேன்.....” என்று சொன்னவன்

மித்ராவின் அருகே சென்று ஒரு பூங்கொத்தை கையில் கொடுத்தவன், அவளிடம் ப்ரபோஸ் செய்து,ஒரு மோதிரத்தையும் அவளது கைகளில் அனுவித்தான்.

அனைவரும் அவர்களது வாழ்த்தை தெரிவித்தனர்.

அனைத்தையும் வாங்கிக் கொண்டவன்.

ராகவனிடம் சென்று நன்றிக் கூறியவன்,”இந்த உலகத்திலே...இல்ல..இல்ல இந்த தமிழ்நாட்டிலே நானாக  தான் இருப்பேன் ..”என்று அவரின் கைகளை பிடித்து நன்றி தெரிவித்தான்.

அனைவருக்கும் அந்தநாள் மகிழ்ச்சியாக சென்றது.

அதன் பிறகு அனைவரும் தங்களது வீட்டிற்கு செல்ல தயாரானார்கள்.

விஷ்வா  யாமினியிடம் இன்று ஒரு நாளாவது தன்னுடன் வருமாறு சென்டிமென்டாக பேசி அவனுடம் அவள் வருவதற்கு சம்மதம் வாங்கிவிட்டான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.