(Reading time: 23 - 46 minutes)

தனால் கவி ஆகாஷுடன் செல்ல வேண்டி வந்தது.மற்றவர்களுடன் செல்லலாம் என்றால்,அது அவர்களுக்கு சிரமத்தையும் தேவையில்லாத கேள்விகளையும் அவர்களது மனதிற்குள் கொண்டு வரும் என்பதால் அவள் அவனுடன் செல்ல சம்மதித்தாள்.

ஆகாஷ் கிளம்ப நினைக்கையில் அவன் அருகில் வந்த ராகவன்,ஆகாஷ் நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லுறேன் தப்பா நினைச்சிகாதிங்க...”என்றார்.

“என்ன அங்கிள்,என்ன இருந்தாலும் சொல்லுங்க..” என்றான் ஆகாஷ்

“நீங்க கவிய விரும்பிரிங்களா...”என்றுக் கேட்டார் ராகவன்.

இவருக்கு எப்படி தெரிந்தது என்பதுபோல் அவரைப் பார்த்தான்.

அவனது எண்ணத்தை படித்ததுப் போல் “என்னப்பா இவனுக்கு எப்படி தெரிஞ்சதுன்னு நினைக்கிறியா..,நீ கவிய பார்த்த பார்வையே சொல்லுதே அதுவே போதும்.....(உங்களுக்கு புரிது அவளுக்கு புரியலையே... இது ஆகாஷோடா மனசுங்க...),அவள்மேல் உனக்கு விருப்பம் இருக்குனு சொல்லுது...” என்று முடித்தார் ராகவன்.

என்ன சொல்வது என்று தெரியாமால் அவரை பார்த்தான் ஆகாஷ்.அவருக்கு எல்லாம் தெரிந்து விட்டதே...அவர் கூறியதுபோல் அவனால் கவியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் இங்கு அவன் வேறுஒரு கவியை அல்லவா பார்த்தான்.அவளது அந்த கலகலப்பு, ஒரு குடும்பத்துடன்,அதுவும் அப்பா-மகள் என்ற உறவை அடிப்படையாக கொண்டு அவள் அங்கு ராகவனுடன் பேசிக்கொண்டிருந்த அந்த உரிமை எல்லாம் அவனுக்கு அவளை புதியதாக காட்டியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவன் அதே யோசனையில் இருக்க அவனின் நினைவுகளை களைக்கின்ற வகையில் மேலும் அவரது உரையை தொடர்ந்தார்.

“ஆகாஷ் நான் உன்கிட்ட ஒரு ரிகுவஸ்ட் வைக்கிறேன்,நீ கவிக்கிட்ட உன்னோட லவ்வ சொல்லு ஆனா அவளை கம்பல் பண்ணாத...,ஏனா அவ ஏற்கனவே நிறைய கஷ்டங்கள அனுபவச்சிட்டா..,அதனால அது புரிஞ்சு நடந்துக்குங்க..,கவி ஓகே சொன்னா மிது-அமர் கல்யாணத்தோட உங்க கல்யாணத்தை நானே நடத்திவைக்கிறேன்..”என்று சொன்னார் ராகவன்.

அவர் கூறிய அனைத்திற்கும் தலையை ஆட்டிவிட்டு வந்தவன் நெஞ்சில் மட்டும் ஒரு எண்ணம் இருந்தது  (நீங்க மட்டும் இல்ல அந்த ஆண்டவனே நினைச்சாலும் கவி தான் என்னோட பொண்டாட்டிங்குறதுல எந்த மாற்றமும் இல்ல...)

யாமினியும்,விஷ்வாவும் சென்று விட,யாமினியும்,ஆகாஷுடன் கிளம்பினாள்.

அவன் அமைதியாக காரை ஓட்டிக்கொண்டு வர அவளும் அமைதியாக வந்தாள்.சாலை எங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைக்கட்டிருந்தது.

அவன் அவளுடனான தனிமையை ரசித்துக் கொண்டு வந்தான்.தனது மனதுக்கு பிடித்தவளுவடன் புதுவருடத்தின் முதல் துளியில் இருந்து தனது நேரத்தை செலவழிக்கிறான்.

அதுவும் இப்பொழுது தனிமையாக..

அவனது மனம் இறைவனிடம் வேண்டியது இந்த புது  ஆண்டு எப்படி அவளுடன் தொடங்கியதோ அதுபோலவே முடிய வேண்டும் என்று.இந்த தனிமை இதுவும் வேண்டும் என்று. ஆனால் அவனது  கடைசிபகுதியை மட்டும்தான் இறைவன் ஏற்றுக்கொண்டு விட்டான் அதுவும் இருவருக்கும் தனிமையை பரிசளிப்பது என்று முடிவு செய்துவிட்டான்..(நாம அவ்வளவு சீக்கிரம் சேர விட்டுவிடுவோமா...)

கவி மிகவும் சந்தோஷமாக  இருந்தாள்.அவளுக்கு இந்த நாள் மிகவும் பிடித்திருந்தது.அதனை கலைத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை,அதனால் அவள் வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.

அந்த மௌனத்தை அவன்தான் கலைத்தான்.

“கவி...”என்று மென்மையாக அழைத்தான் ஆகாஷ்.

அவனது அழைப்பில் திரும்பி பார்த்தவள்,அவனது கண்களில் தெரிந்த காதலில் ஒரு நிமிடம் தடுமாறிப் போனாள்.

ஆனால் அப்படியே இருந்தால் அது நமது கதையின் நாயகி இல்லையே....

ஆகாஷே பேச்சை தொடர்ந்தான்.

“மலர் அடுத்த வருஷம் புத்தாண்டை நாம வரவேற்கும் பொழுது நம்ம குடும்பத்தோட இருக்கனும்,தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,மாமா...என எல்லாரும் இருக்கனும்,மாமா எவ்வளவு சந்தோஷ படுவாறு...”என்று கூறிமுடித்து அவளை பார்த்தான்.

அவளது கண்களில்  அவன் கண்டது என்ன..,அவனுக்கே புரியவில்லை.

“அதான  பார்த்தேன் நான் சந்தோஷமா இருந்தா குடும்பத்துக்கே அதுவும் உங்களுக்கு பிடிக்காதே...,என்னோட நிம்மதிய குலைக்கவே  வந்திடுவிங்கலே..” என பொறிய ஆரம்பித்தாள் கவி.

“கவி ப்ளீஸ்..,இன்னைக்கி எதுவும் சொல்லாத இந்த வருடத்தோட முதல் நாள் நமக்குள்ள எந்த பிரச்னையும் வேண்டாமே....,நான் வாழ்க்கை முழுசும்  இதே மாதிரி இல்லாமா சந்தோஷமா இருக்கனும் ... புரிதா....”என்றான் ஆகாஷ்.

“இப்படியெல்லாம் நடக்காத கதைய பத்தி பேசாதீங்க...”என்றுக் கூறினாள் கவி

“எதுக்கு கவி இப்படியெல்லாம் பேசுற,உனக்கு என்னதான் புடிக்கலை..,ஆனா நாரயணன் தாத்தா,ஜனா இவங்களுக்காவது எனக்கூட வரலாம்ல...” என்றுக் கூறினான் ஆகாஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.