(Reading time: 23 - 46 minutes)

....ஆகாஷ் ப்ளீஸ்,நான்  யாருக்காகவும் எங்கேயும் வர விரும்பல..,என்ன விட்டுடுங்க,உங்க குடும்பத்தோட நல்லா இருங்க,என்ன பத்தி யாரும் கவலைபட தேவையில்லை..”என்று அவள் முடிப்பதற்குள் அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது, காரை சடரென்று நிறுத்தியவன்

அவள் புறம்திரும்பி  அவள் எதிர்பாரத விதமாக அவளின் கைப்பற்றி தன் புறம் இழுத்தான்.

அவனது திடீர் இழுப்பில் அவன் மீதே விழுந்தால் கவி.

அவள் அடுத்து என்ன என்று யோசிப்பதற்குள் அவளிடம் கர்ஜிக்க ஆரம்பித்தான் ஆகாஷ்.

“என்னடி ஓவரா பேசிகிட்டே போர,சின்னபொண்ணுனு பார்த்தா...,என்னடி இப்ப அவங்கயெல்லாம் உன்னோட கால்ல வந்து விழனுமா..,உன்ன இந்த அளவுக்கு வளர்ததுக்கே நீ அவங்க காலுக்கு கீழ கடக்கணும்..,அத விட்டுட்டு  இப்படி எதுக்குடி என்னோட உயிரோட சேர்த்து எங்க வீட்டுல இருக்குறவங்க உயிரையும் சேர்த்து எடுக்குற..,போன போவுது செஞ்ச பாவத்துக்கு வாழ்கபுரா கூட இருந்து பார்த்துக்கலாம்னு வந்தா..,நீ என்னடி ஓவரா சீன் போடுற..,உன்பின்னாடி வந்த என்ன சொல்லணும்..”  என்று அவன் பேசிமுடிப்பதற்குள் கதவை திறந்துக் கொண்டு இறங்கி அவள் நடக்க ஆரம்பித்தாள்..

ஆகாஷோ பக்கத்தில் தான் அவர்கள் இருந்த குடியிருப்பு பகுதி இருந்ததால் அவனும் அவளை சமாதான படுத்தவில்லை,அதுமட்டுமில்லாமல் அவள் மீதான கோபம்,அவளது பேச்சு எல்லாம் சேர்ந்து அவனை அவளை நோக்கி செல்லாமல் தடுத்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அவளது அறைக்கு சென்ற அவளுக்கு கண்களில் இருந்து தண்ணீர் தானாகவே வந்தது, கடைசியில் அவன் என்ன சொல்லி விட்டான் பாவம் பார்த்து தான் ...சை...இவங்க குடும்பமே திருந்தாத குடும்பம்.இப்படிதான் இருக்கும்.இவன் மட்டும் எப்படி இருப்பான்...,இவங்க எல்லாரும் சேர்ந்து தாங்கள் செஞ்ச பாவத்துக்கு  பிராயச்சித்தம் பண்ண என்ன வளர்த்துட்டு .., நான் இவங்க  காலுல விழனுமா... எல்லாம் என்னோட  விதி... என்று நினைத்துக்கொண்டே கண்ணீரில் கரைந்தாள்.

விட்டுபோன இடத்தில் இருந்து அவளது கடந்தகாலம் நினைவில் வர ஆரம்பித்தது.

அன்று ஆகாஷ் அவ்வாறு சொன்னதும் கவி மிகவும் பயந்துவிட்டாள்.மஞ்சு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தார்.

கவியின் கண்களில் கண்ணீர் தானாகவே வந்தது.

“போ..,நீ இங்க இருக்க கூடாது..”என்று அவளின் கையை பிடித்து இழுத்தான் ஆகாஷ்.

அப்பொழுது அங்கு வந்த நாராயணன் அதனை பார்த்து

“ஆகாஷ் கவியோட கையை விடு ..”என்றுக்கூறினார்.

“நான் விடமாட்டேன் தாத்தா,இவ அம்மாவால தான என்னோட பாட்டி இறந்து போனாங்க..,அவ இங்க இருக்க கூடாது..”என்று கூற

அவனது அருகில் வந்த நாராயணன் அவனின் கை பிடியிலிருந்து கவியின் கையை பிரித்து எடுத்தவர்,அவளை தூக்கிக் கொண்டு அவளது கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தார்.

“ஆகாஷ் உனக்கு எப்படி இங்க உரிமை இருக்கோ அதே அளவு உரிமை கவிக்கும் இருக்கு ..”என்றுக் கூறிவிட்டு அவளை தூக்கி சென்றார்.

ஆகாஷிற்கு கவியின் மேல் இருந்த கோவம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. அதற்க்கு ஏற்றார் போல் அடுத்து அடுத்து விஷயங்களும் நடந்து அவனின் வெறுப்புணர்வை அதிகரித்து கடைசியில் அவனது தாத்தாவே கவியை ஹாஸ்டலில்  சேர்க்கும் அளவிற்கு கொண்டு சென்றது.

கவியை நாராயணன் நன்றாகவே கவனித்துக் கொண்டார்.தனது தாத்தா தன்னை விட்டுவிட்டு அவளை  நன்கு கவனித்துக் கொண்டது,அதுவும் தனக்கு பிடிக்காதவளை கொஞ்சுவது அவனுக்கு இன்னும் கவியின் மேல் வெறுப்பை அதிகரித்து.

அதற்கு அடுத்த படியாய் ஆகாஷின் தாய்மற்றும் தந்தை,அவனது தாய் மஞ்சு கவிக்கு உணவு ஊட்டி விடுவதிலிருந்து அவளை பள்ளிக்கு அனுப்புவது வரை அனைத்தையும் செய்தார் தாய் இல்லாத பெண் என்றநினைப்பால் .அவனது தந்தை  நடராஜனும் அவளை நன்கு பார்த்துக் கொண்டார்.

இவர்கள் அனைவரும் காட்டிய பாசத்தைவிட இவனது தங்கை தம்பி,அவள் மேல் காட்டியது தான் அவனின் கோபத்தை அதிகரித்தது.தனக்கு உரிமையான பொம்மையை தன்னிடம் இருந்து பறித்த குழந்தையை எப்படி அந்த பொம்மையை தொல்லைத்த குழந்தைப் வெறுக்குமோ அந்த  வெறுக்கும் நிலைமையில் இருந்தான் ஆகாஷ்.

அதற்கு ஏற்றார் போல்  காவ்யாவின் பிறந்தநாள் அன்று காவி அவனுக்கு கேக் முதலில் தராமல் கவிக்கு தர உச்ச கட்ட கோபத்திற்கு சென்ற ஆகாஷ்.தீபாவளிக்கு வாங்கிய பட்டாசை கவி தனியே இருந்த பொழுது அவளுக்கு அருகில் பத்த வைத்து விட்டான்.

அதனை தூரத்தில் இருந்துப் பார்த்த நடராஜன் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

கவிக்கு பயங்கரமாக அடிபட்டு விட்டது,அவளது தீக்காயம்  சரி ஆவதற்கே ஒரு மாதத்திற்கு மேல் ஆனது.

அன்றிலிருந்து ஆகாஷின் தந்தை அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். நாராயணன் அதற்கு  பிறகு யோசித்து தனது  குடும்பத்தின் நன்மைக்காகவும் ,கவியின் நன்மைக்காகவும் சரியான ஒரு காரியம் செய்வதாக நினைத்து தவறான காரியம் செய்தார்.

கவியை ஆறு வயதிலே ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார். தனிமையை அறியாத கவி அங்கு தனிமையில் வாடினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.