(Reading time: 23 - 46 minutes)

தன் பின் அவள் ஒரு ஒதுக்கத்தை கடைபிடிக்க ஆரம்பிக்க ஆரம்பித்தாள்.அடுத்த  கட்ட வாழ்க்கை நகரலில் விஷ்வாவும் படிப்பிற்காக வெளிஊர் சென்றுவிட  கவியும் தனது தாத்தா வீட்டிற்கு செல்வதை குறைத்துக்கொண்டு தனது நேரங்களை நான்சியுடன் செலவழித்தாள்.

அதன் பிறகு அவள் கல்லூரி சேர்ந்தாள்.அப்பொழுதுதான் அவள் அந்த ஹாஸ்டலை  விட்டு செல்லும் நிலை வந்தது.

அவளது உயிர் தோழிகளான யாமினியையும்,அனன்யாவையும் பிரியும் நிலையும் ஏற்பட்டது.

அது வரை  வெளிஉலகத்தில் உள்ள மனிதர்களை பற்றி முழவதும் அறிய முடியாமல் வாழ்ந்த கவிக்கு அடுத்த அடுத்த கால நகர்வுகள் அவளுக்கு வாழ்க்கை என்ற பயணத்தின் பாதைகளின் கஷ்டங்களை அவளுக்கு புரிய வைத்தது...

அதுவரை துன்பங்கள் அவளை தொட்டு உறவாடி கொண்டிருந்தாலும்..,அதன் பின் வந்த காலங்களில் துன்பங்கள் அவளை கட்டி அணைத்து ஆலிலியம் செய்ய நினைத்தது...

அதன் பிரதிபலன் தான் இன்றைய அவளது நிலைமை....

அதற்க்கு மேல் அவள் எதனையும் நினைக்க விரும்பவில்லை...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவளது நினைப்பு ஆகாஷை நோக்கி சென்றது.

ஒரு வார்த்தையில் அவன் என்ன சொல்லிவிட்டான்.அப்பொழுது அவனுக்கு தன் மீது காதல் வரவில்லையா..,நாம் மட்டும் தான் அவனை விரும்பிகொண்டிருக்கிறோமோ என்ற எண்ணமே அவளின் மனதின் வலியை அதிகரித்தது...

இந்த வேதனைகளையே போதும் என்று அவள் நினைக்க அவள் விதியோ நீ பார்க்க வேண்டியதோ இன்னும் எவ்வளவோ இருக்கு என்று அவளை நோக்கி தனது ஆசிர்வாதத்தை தந்தது.......

ஆகாஷோ பயங்கிரமான கோபத்தில் இருந்தான்.எப்படி பேசுறா நாம அவ பின்னாடி நாய் மாதிரி போறதுதாலதான் அவ இப்படி நினைக்கிறா..,என்னோட லவ்வு இவளுக்கு புரியவே புரியாதா..,இவளோட வருகைக்காக எத்தனை பேர்  காத்துகிட்டு இருக்காங்க..,ஆனா இவளுக்கு....,ஆன என்னோட செல்லம் பாவம் அவள இனிமே  கஷ்டபடுத்த  கூடாது...

இன்னைக்கு பேசுனமாதிரி அவளை எதுவும் இனிமே பேசக்கூடாது என்று முடிவு எடுத்தவனாய் அவன் உறங்க செல்ல..

கவி அவள் உறக்கத்திரற்க்காக பாடலை ஒலிக்க விட்டாள்....

அது அவளது ஏக்கத்திற்கு ஏற்றதுபோல் ஒலித்தது....

அந்த பாட்டை கேட்டுக் கொண்டே அவளுக்கு இதன் பிறகு வரும் பிரச்சனைகளை பற்றி அறியாமல் ஆகாஷை பற்றியே யோசித்துக் கொண்டு உறங்கிவிட்டாள்.

நாளை அவள் பார்க்க போறவர்கள் அவள் இந்த உலகத்தில் மிகவும்  அவள் வெறுப்பவர்கள்...

ஆனால் ஆகாஷிற்கு மிகவும் பிடித்தவர்கள்.., யார் அவர்கள் அவரகளால் இன்னும் என்ன என்ன நிகழபோகிறது....

காற்றில் ஆடும் மாலை என்னை

பெண்மை என்றது காதல்

ஒன்றுதானே வாழ்வில்

உண்மை என்றது

இதழுடன் இதழாட

நீ இளமையில் நடமாடு

நினைத்தாள் போதும் வருவேன்

தடுத்தால் கூட தருவேன்

வெள்ளம் செல்லும்  வேகம்

எந்தன் உள்ளம் சென்றது

வேகம் வந்த நேரம் இன்ப

இல்லம் கண்டது

இனி ஒரு பிரிவேது  அந்த

நினைவுக்கு முடிவேது

இரவும் பகலும் கலையே

இருவர் நிலையும் சிலையே

 

AEOM

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.