(Reading time: 8 - 15 minutes)

தோ இந்த யூனிட்டியை பார்க்கத்தான் இப்படி பேசினேன்.. நான் யாரையும் தாக்கி பேசல.. தனி மனிதனின் ஒழுக்கத்தை சாடவில்லை.ஆனால், மீடியாவை எதிர்த்து சொன்னதும் ஒற்றுமையா என்னை மன்னிப்பு கேட்கசொல்லுறீங்களே! எங்கள் இன்டஸ்டிரியிலும் இந்த ஒற்றுமை இருந்திருந்தால்நன்றாக இருந்திருக்கும்!”

“..”

“எந்த துறையில் தவறு நடக்கவில்லை?எந்த துறையில்தான் பெண்ணுக்கு எதிராக சூழ்ச்சி நடக்கவில்லை? இப்போ நான் சிலதுறைகளை குறிப்பிட்டு பேசினால்,உடனே போராட்டம் நடக்கும்! என்னைமன்னிப்புகேட்க சொல்லி மிரட்டல் வரும்! ஆனால், ஒரு நடிகையான நான் விமர்சிக்கப்படும்போது, எங்கள் துறையிலேயே குரல் எழுப்ப ஆளில்லை!”

“..”

“அடுத்த ரிலீஸ்லநம்மபடம் வருதா? நாம பேசினால் ரசிகர்கள் மத்தியில் பெயர் கெட்டு போயிடுமோ?மார்கெட்டை பாதிக்குமோ? இன்னும் சினிமாவில் நிலைத்து நிற்கவில்லையே, இப்போது குரல் உயர்த்திதான் ஆக வேண்டூமா?ன்னு மனதில் ஆயிரம் கேள்விகளை வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் விலகி இருக்கிறார்கள்! அப்படியே ஏதாவது ஒரு நடிகரோ,இயக்குனரோ  சப்போர்ட் பண்ணிட்டால்,அவருக்கும் அந்த நடிகைக்கும் என்ன உறவுன்னு ஒரு கேள்வி முன் வருது!”

“..”

“ பேஸ்புக் லைவ்ன்னு எதையும் நான் செய்ய போறது இல்லை!ஒவ்வொரு தினமும் என்னை நானே நிரூபித்துக் கொள்ள ஆரம்பித்தால் எனக்குன்னு வாழ்க்கையே இல்லாமல்போயிடும்!” என்றாள் அர்ப்பணா. மிகத் தெளிவான அவளது பேச்சைக்கேட்டு ராகவனுக்கு விசிலடிக்க ஆசையாக இருந்தது.

ஞான ஒளி வீசுதடீ,

நங்கை நின்றன் சோதி முகம்!” என்ற பாரதியின் வரிகள் நினைவிலாடின.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

தன்பின் காலம் அதன் போக்கில் சுழல, அர்ப்பணா எந்த தடையுமின்றி ராகவேந்திரனின் உள்ளத்தில் உலாவர தொடங்கினாள். இருந்தாலும், இதுதான் காதல்னு அவர் உணர்ந்த நொடி எதுன்னு அர்ப்பணா அவரை கேட்கும்போது தெரிஞ்சிப்போம்.. இப்போதைக்கு ஃப்லேஷ் பேக் முடிஞ்சு போச்சு..எல்லாருக்கும் மேல பார்த்து கழுத்து வலி வந்திருக்கும்..சோ கீழ பாருங்க! ஹீ ஹீ

தன் தோழியின் மீது மலையளவு காதல் கொண்டுள்ள காதல் எண்ணி சந்தோஷப்பட்டாள் நிரூபணா.

“என்ன ஆனாலும் சரி,ராகவன்தான் அர்ப்பணாவின் சரிபாதி! இவர் வந்துட்டா அவ வாழ்க்கைநிறைவாகிடும்!” என்று கூவியது அவளின் நட்பெனும் மனம்.

தே நேரம், இன்னொரு இட்த்தில், நட்பெனும் மனம் காதலை ஆழம் பார்க்க ஆரம்பித்தது!

விஹாஷினியின் பேச்சை கேட்டு முடித்துவிட்டு ஃபோனை வைத்த வெற்றிக்கு மனமெல்லான் வெறுமையாகத்தான் இருந்தது.நல்ல வேளையாய் கண்மணியும் சத்யேந்திரம் கொஞ்சம் தூரமாய் நின்று கொண்டு ஏதோபேசிக்கொண்டிருந்தனர். அதற்குள் கொஞ்சம் சமநிலை அடைந்தவன், சத்யனிடம் வந்தான்.

“சத்யன்!”

“சொல்லு வெற்றி!”

“ம்ம்… இது வரைக்கும் நான் ஒரு உதவி இயக்குனர், நீங்க ஒரு நடிகர்ன்னு தான் நாம பேசிருக்கோம்!”

“யெஸ்”

“நடிகர் சத்யனை எனக்கு தெரியும்.. அவரை எனக்கு ரொம்பவும்பிடிக்கும்”

“ம்ம்”

“ஆனால், என் கண்ணுவின் காதலனை எனக்கு பிடிக்குமான்னு கேட்டால் என்கிட்ட பதில் இல்லை!”

“கண்மணி விஷயத்துல நான் எப்பவும் அன்பான அண்ணன் மாதிரியும்,பொறுப்பான அப்பா மாதிரியும்தான் இருக்கனும்னு ஆசைப்படுவேன். அந்த வகையில் அவளுடைய காதலை நான் ஏத்துக்குறேன்..”

“ஆனால் மூணு நிபந்தனைகள்!” என்றான் வெற்றி.

“என்ன அது?” இருவருமே கேள்வியாய் பார்த்தனர்.

“முதலாவது,கண்மணி தான் உங்க வருங்கால மனைவின்னு நீங்க உடனே உலகத்துக்கு தெரியப்படுத்தனும்..இன்னைக்கு வந்த செய்திகளுக்கு அதுவே நல்ல பதிலாகனும்..”

“..”

“இரண்டாவது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கனும்!”

“டேய் கல்யாணமா? நோ ! முதலில் உன் படம் வரனும்..அதுக்கு அப்பறம்தான்” என்று கண்மணி சொல்ல,

“ கண்ணு அதுக்கு வாய்ப்பே இல்லை! என் பேச்சை கேளு! “ என்றான்.

“கல்யாணத்துக்கு என்னடா அவசரம்?”

“அவசரமில்லை! அவசியம்!”

“அப்படி என்ன அவசியம்?”

“அதை இப்போ நான் சொல்ல முடியாது!”என்று வெற்றி கூறவும், சின்ன புன்னகையுடன்,

“ரெண்டு நிபந்தனைக்குமேஎனக்கு சம்மதம் வெற்றி. மூணாவது என்ன?”என்றான் சத்யன்.

“நீங்க கல்யாணத்து அப்பறம் சினிமாவில் நடிக்கவேகூடாது!”என்றான் வெற்றி. அவனது நிபந்தனையில் முகம் சிவந்து முறைத்தாள்கண்மணி!

-வீணை இசைந்திடும்-

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.