(Reading time: 20 - 39 minutes)

வியின் ரூமுக்கு  சென்று பார்த்தாள் யாமினி. கவி குளித்துக்கொண்டிருந்ததால் அவளிடம் அர்னவ் வந்ததை கூறிவிட்டு காபி போடா சென்றாள்.

ஆகாஷின் வீட்டில் இருந்த விஷ்வாவின் மொபைலோ

யாமினி யாமினி

என் காதலி யாரடி..?

என்னிடம் என்னிடம் சொல்லடி

கிராமமா,நகரமா..?

இண்டியா தாண்டியா...?

எங்குதான் வாழ்கிறாள்

சொல்லடி 

என்று அழகாக சிணுங்கியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷாலக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அதனை காதில் எடுத்து வைத்த விஷ்வா “சொல்லு யாமி...”,அதுக்குள்ள மச்சானோட ஞாபகம்  வந்திடுச்சு...”என்றுக் கேட்டான்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..,இன்னைக்கி எதாவது ப்ரோக்ராம் வச்சிருக்கியா..,இல்ல அர்னவ் வந்திருக்கான்..,எல்லாரும் சேர்ந்து வெளிய போறாங்க...,அதான் நானும் போகலாமுன்னு..,நீ எதாவது பிளான் பண்ணிருந்தா என்ன பண்றது அதான் உன்கிட்ட கேட்டுட்டு போலமுன்னு...”என்று விளக்கம் கொடுத்தாள்  யாமினி.

“அப்படியெல்லாம்..,ஒன்னும் இன்னைக்கி பிளான் இல்லடா இன்னைக்கி கொஞ்சம் வொர்க் இருக்குடா..,அத்தை ஊர்ல இருந்து வராங்க அவங்கள பிக் அப் பண்ண போகணும்.அதனால நீ போயிட்டு வா..”என்றான் விஷ்வா.

“ம்ம்..சரி”என்று மொபைலை அணைத்தாள் யாமினி.

அப்பொழுது  தனது அறையில் இருந்து வெளியில் வந்தான் ஆகாஷ்.

“என்ன விஷ்வா..,ரொம்ப  சந்தோஷமா இருக்க போல என்னோட அத்த பொண்ணு ஓகே சொல்லிட்டாலா.....” என்றுக் கேட்டான் ஆகாஷ்.

“ஆமாம்,உங்களுக்கு என்ன சொன்னா என்னோட அத்த பொண்ணு என்ன சொன்னா..”என்றுக் கேட்டான் விஷ்வா.

ஆகாஷின் முகம்  இறுகி  இளகியது.அதை பார்த்த விஷ்வா

“என்ன அண்ணா ஆச்சு ...”என்றுக் கேட்டான் விஷ்வா.

“எப்பொதும் போலதான் அவ பேசுனா..,நான் கொஞ்சம் கோபமா பேசிட்டேன்..”என்றான் ஆகாஷ்.

“நீங்க பேசுனதுல தப்பு இல்லைன்னா  எல்லாம் அவ உடம்புல இருக்குற கொழுப்பு தான் காரணம்..,அத குறைச்ச எல்லாம் சரியாகிடும்..,என்னோட பழைய கவி இவ இல்ல..”என்றுக் கூறினான் விஷ்வா.

“சரி விடு விஷ்வா..,அவள போய் ஒரு தடவை பார்த்துட்டு வரியா..”என்றுக் கேட்டான் ஆகாஷ்.

“அர்னவ் வந்திருக்கான் அவன் கூட வெளிய போறாங்களாம்..,அதனால நீங்க கவலை படாம வேலைய பாருங்க..,அவ இயல்பாதான் இருப்பா...”என்றான் விஷ்வா.

“சரி..,இருந்தாலும் நீ எனக்காக ஒரு தடவை போய் பாரேன்...”என்றான் ஆகாஷ்.

சரி என்று சொல்லி கவியை பார்க்க சென்றான் விஷ்வா.

என் விழியன் கனவு

உன் சொந்தம் இல்லை

நீ காணாதே அதில்

பிழை தேடாதே

ர்னவ் சோபாவில்  அமர்ந்திருந்தான். குளித்துவிட்டு வெளியில் வந்தாள் கவி.

“ஏய்..அர்னவ்  ரொம்ப நேரம் காக்க வச்சிடேனா..happy new year..டா” என்று அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளை ஒரு ஆழ பார்வைபார்த்தவன் ”வா ..,கோவிலுக்கு போயிட்டு வரலாம்...” என்றுக் கூறி அவளை கிளம்ப சொன்னான்.யாமினியையும் கிளம்ப சொன்னான்.

மூவரும்   கோவிலுக்கு செல்ல கிளம்பி வெளியில் வரும்பொழுது விஷ்வா அவர்களை நோக்கி வந்தான்.

“எப்ப வந்திங்க அர்னவ்..” என்று அர்னவை பார்த்துக்கேட்டான் விஷ்வா.

“இப்பதான் வந்தேன்..,கோவிலுக்கு போறம் வாங்களேன் எங்க கூட...”என்று அழைத்தான் அர்னவ்.

“இல்ல எனக்கு இனைக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க  போயிட்டு வாங்க ..”என்றுக்கூறினான் விஷ்வா. விஷ்வா கவியின் முகத்தைப் பார்க்க அவளோ ஆகாஷின் வீட்டை வெறித்துக் கொண்டிருந்தாள். விஷ்வாவின் பார்வையை தொடர்ந்து பார்த்த கவி எதாவது சொல்வாள் என்று அவள் அர்னவும் அதனை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

“கவி..,இந்த மாமா பையனுக்கும் சேர்த்து வேண்டிகிட்டு வா..”என்று அவளின் சிந்தனையை மாற்றும் முயற்சியில் இறங்கினான் விஷ்வா.

அவன் தன்னை அழைத்ததுமே தனது பார்வையை திருப்பிகொண்டவள் அவனது கேள்விக்கும் பதில் அளித்தால்,”உனக்கு நான் எதுக்கு வேண்டிக்கனும் விஷு,உனக்கு வேண்டிக்கதான் பக்கத்திலேயே ஆளு வச்சிருக்கியே..”என்று பார்வையால் யாமினியை சுட்டி காட்டினால் கவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.