(Reading time: 16 - 32 minutes)

ப்பா அர்ஜுன் பாண்டியன், அறுவை சிகிச்சை நிபுணர், அம்மா சம்யுக்தா, face book ல் farmville கேம் விளையாடி, அது ரொம்ப பிடிச்சு போய், சொந்தமா ஒரு இடம் வாங்கி அதுல ஒரு farm நடத்துறாங்க....... இப்ப எங்க அப்பாவை விட என் அம்மா தான் ரொம்ப பிஸி. அம்மாவை பற்றி சொல்றதுன்ன சொல்லிட்டே இருக்கலாம்...... யார் யாருக்கு, என்ன பிடிக்கும்ன்னு தெரிந்து கொண்டு, அவங்களுக்கு அதை மட்டும் தான் செய்வாங்க. அதை விட முக்கியமா, எங்களுக்கு எது பிடிக்காதுன்னும் தெரிஞ்சு வச்சிருப்பாங்க. அதை கண்டிப்பா செய்ய மாட்டாங்க. சாப்பாடு விஷயமா இருந்தாலும் சரி மத்த விஷயமா இருந்தாலும் சரி.

சின்ன வயதில் என்னை படிப்பை தவிர மற்ற வகுப்புகளிலும் சேர்த்தாங்க. பியானோ , கராத்தே , டென்னிஸ் , பாட்டுன்னு எல்லா வகுப்புக்கும் போவேன். அதுல பியானோ மட்டும் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்ன உடனே, அந்த வகுப்பை நிறுத்திட்டாங்க........ என்று இந்தர் சொல்லி முடிக்க..........

“வாவ் அப்படின்னா நீங்க நல்லா பாடுவீங்களா? அப்ப ஒரு பாட்டு பாடுங்க ப்ளீஸ், ப்ளீஸ்...... என பூர்வி கேட்டு கொண்டாள்.........

“சுமாரா பாடுவேன்...... பாட்டு மோசமா இருந்தா உன்னால காரை விட்டு குதிக்க கூட முடியாது, ஏன்னா, கதவில் சைல்டு லாக் போட்டு இருக்கு என சிறு புன்னகையுடன் கூறி கொண்டே, வெளியே தெரிந்த மலைகளின் மேல் இருந்த பனியை பார்த்து பாட ஆரம்பித்தான்........

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்த கொள்ளை நிலா உடல் அணைக்கின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது.........

என இந்தர் பாடிய பொழுது, பூர்வி அதை கேட்டு பரவச நிலையில் இருந்தாள்....... அவன் முழு பாடலையும் பாடி முடித்த பொழுது, பூர்விக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது.........

“ஹேய், நான் அவ்வளவு மோசமாவா பாடினேன்? கண்ணீர் எல்லாம் விடற.......... என இந்தர் குறும்பாக கேட்டாலும், மனதின் ஓரத்தில், அம்மா சம்யுக்தாவும் இவ்வாறு தான் ரசிப்பார் என தோன்ற தான் செய்தது......

அதற்கு பதில் கூட சொல்ல முடியவில்லை பூர்வியால் , சிறிது நேரம் கழித்து, அப்போ உங்க வீட்டில் ம்யூசிக் சிஸ்டமே தேவை இல்லை, உங்களையே பாட சொல்லி கேட்டு கொள்ளலாம் என பூர்வியும் குறும்பாகவே பதில் அளித்தாள்...........

“அப்பாவிற்கு பழைய பாடல்கள் என்றால் உயிர்....... அப்பா வீட்டில் இருந்தாலே பாட்டு சத்தம் இருந்து கொண்டே இருக்கும்...... வீட்டில் அதிக அளவு  CD சேகரிப்பு  இருந்தாலும், காரிலும் நிறைய CD இருக்கும் .  

ஊரில் எங்காவது குடும்பத்துடன், உல்லாச பயணம் போகும் போது, எப்பவும் யூத் எல்லாம் ஒரு காரிலும் , பெரியவங்க எல்லாம் ஒரு காரிலும் போவோம்...... அப்பா இருக்கும் காரில் எப்போதும் பழைய பாடல் தான் ஒலிக்கும் என்பதால், அபி, வர்ஷினி எல்லாம் அந்த காரில் ஏறவே மாட்டார்கள்........ என பேசி கொண்டே வந்தான் இந்தர்........

“அபி, உங்க சித்தி பையன், அது யார் வர்ஷினி?” என பூர்வி கேட்டதற்கு.....

“என்னோட மாமா பொண்ணு, எனக்கு சிஸ்டர் இல்லை என்ற குறை தெரியாத அளவு பார்த்து கொள்ளும் ஸ்வீட் ஏஞ்சல்........ “இவங்க எல்லாம் அம்மா பக்கம் சொந்தங்கள், இன்னும் அப்பா பக்கம் பெரிய குடும்பம், அவங்க எல்லாம் தூத்துக்குடியில் இருக்காங்க......

 “ I, love to spend time with my, all family members in holidays……. என இந்தர் ரசித்து கூறினான்...........

 என்ன தான் தமிழில் பேசினாலும், சில நேரங்களில் இந்தருக்கு ஆங்கிலத்தில் தான் பேச வருகிறது, என பூர்வி யோசித்து கொண்டு இருந்தாள்........

“சரி, இப்ப நீ எதாவது சொல்லு, என் இந்தர் கூறியதற்கு .........

“ம்ம் .... எனக்கு பாட தெரியாது, மேல சொல்லவும் ஒன்னும் இல்லை, என கூறி, விடுகதை கேட்கவா? நீங்க பதில் சொல்லுங்க” என்றாள் பூர்வி .

“ சாரிடா, எனக்கு அந்த அளவுக்கு தமிழ் தெரியாது.......

“ஏன்? நீங்க என்ன சந்திர மண்டலத்திலா, ஸ்கூல் போனீங்க? இல்லை, இரண்டாவது மொழி தமிழிக்கு பதில் வேற படித்தீர்களா?

அதற்கு பதில் சொல்வதற்குள் குக்கூ தொழிற்சாலை வந்தது......... அத்துடன் பேச்சு நின்றதால் இந்தர், மால்டிவ்ஸ்ல் பள்ளிக்கு சென்றது பூர்விக்கு தெரியாமலே போனது.......

இருவரும் காரை பார்க் செய்து விட்டு இறங்கி நடந்தனர்........ அந்த இடமே ரம்யமாக இருந்தது....... ஒரு மலை அடிவாரத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில், ஒரு சிறு ஓடையின் அருகே அழகாக அந்த குக்கூ கடிகார வடிவிலேயே, அதன் வெளிப்புற தோற்றம் அமைந்து இருந்தது........

இவர்கள் சரியாக மதியம் பன்னிரண்டு மணிக்கு அங்கு சென்ற போது, அந்த கடிகார அமைப்பின் மேலிருந்த, இரண்டு கதவுகள் திறந்து, அதில் ஆணும், பெண்ணுமான  பொம்மைகள்,  ஜோடியாக நடனம் ஆடியபடி, பெண்டுலம், பன்னிரண்டு முறை அடித்து முடிக்கும் வரை  சுற்றி வந்தது....... அதை பூர்வியும், இந்தாரும் ரசித்து பார்த்தனர்........

உள்ளே செல்ல, சீட்டு வாங்கிய பின், இருவரும் உள்ளே சென்றனர்........ இவர்களுடன் சில சுற்றுலா பயணிகளும் இருந்தனர்....... அனைவருக்கும் அங்கு இருந்தவர், குக்கூ கடிகாரம் பற்றி தெளிவாக விளக்கி கூறினார்....... அதை பார்த்து முடித்ததும், அங்கிருந்த கடையில் ஒரு குக்கூ சுவர் கடிகாரத்தை வாங்கி பூர்விக்கு பரிசளித்தான் இந்தர்......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.