(Reading time: 11 - 21 minutes)

“ஓ வெண்ணிலா என்

மேல் கோபம் ஏன்

ஆகாயம் சேராமல் தனியே

வாழ்வது ஏனோ...ஓ...

காதலே உன் பேர் மௌனமா

நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம்

வளர்ப்பது சரியா..சரியா..”

கிளம்பும்போது விஷ்வாவிடம் சென்ற நாராயணன்..,அவனை பார்த்து”அடுத்த கல்யாணத்துக்கு ரெடி பண்ணிடியாடா..”என்று யாமினியை ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டு இருந்ததார்.

அனைவரும் அவளை அழைத்து விட்டு சென்ற பின்பு,அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தன்னால் மூவரது திருமணமும் நிற்கிறதே என்ற எண்ணமே  அவளை குழப்பிக் கொண்டிருந்தது.

என்ன செய்வது  இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என்ற எண்ணமே அவளை குழப்பிக் கொண்டிருந்தது.கவி அந்த எண்ணத்திலே தன்னை சுற்றி நடப்பதை கூட அறியாமல் உழன்றுக் கொண்டிருந்தாள்.

அமர் அனன்யாவிற்கு கால் செய்து அவளை  வரவழைத்தான்.அவன் கொஞ்சமாக விஷயத்தை அவளது காதுக்கு கொடுத்திருந்தான்.அதனால் அவள் கவியை  எதுவும் தொந்தரவு செய்யாமல் இருந்தாள்.

அன்று மாலையே அனன்யா ஊரிலிருந்து வந்துவிட்டாள். கவி இரவு உறங்கிய பின் அவர்கள் தங்களது மாநாட்டை கீழே இருந்த  பூங்காவில் ஆரம்பித்தனர்.யாமினியை தவிர,யாமினி அவளது பிளாட்டிற்கு சென்றுவிட்டாள்.(நம்ப எல்லா கேரக்டர்ஸ் கிட்டையும் ஒரு அட்டண்டன்ஸ் போட்டுட்டு வந்துடலாம்..)

விஷ்வாவே அவளது நினைவில் இருந்தான்.அவன் மிகவும் வேதனையோடு தாத்தாவுடன் கிளம்பி சென்றதே மனதில் நின்றது.

அதே நேரத்தில் கவியும் எவ்வளவு வேதனைப்படுவாள் என்று அவள் எண்ணிப் பார்த்தாள்.

அவளுக்கு தெரியுமே விஷ்வாவிற்கும்,கவிக்கும் இடையேயான அன்பு எத்தகையது என்று.

ஆனால் இன்று கவி விஷ்வாவை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை.

கண்டிப்பாக விஷ்வா பேசியவை கவியை பாதித்திற்கும்..,கவி இந்த உலகில் அன்பு வைத்தவர்களுள் அவனும்  ஒருவன் அல்லவா..,ஒரு தோழியாய் இருந்தும் இவளாலும் இப்பொழுது கவியினுடன் இருக்க முடியவில்லையே,தனது தோழர்க்கூட்டமே தன்னை  எதிரியாக நினைக்கிறார்களே..என்ற எண்ணமே அவளை தூங்கவிடாமல் செய்தது.

காஷின் வீட்டிலோ அவன் மட்டுமே இருந்தான்.விஷ்வாவும் ஊருக்கு சென்றுவிட்டதால்,அவனின் நினைவு முழுவதும் கவியை சுற்றியே இருந்தது.

(அவனோட நினைவு என்ன சொல்லுதுனு  பார்க்கலாம்...)

“தொலைவில் தொடுவான் கரைய

தொடும் தொடும்

அருகில் நெருங்க விலகி

விடும் விடும்

இருவர் மனதில் ஏனோ பட பட

ஒருவர் பார்த்தால் மௌனம்

உடைபடும் நீ

பெண்மையே கருவம் ஏனடி

வாய் வரை வந்தாலும் வார்த்தை

மறைப்பது ஏனோ ஏனோ...நீ

சுவாசமே உடம்பில் ஊடலா

என்  ஜீவன் தீண்டாமல்

வெளியே செல்லாதே நீ

வெற்றி கொள்ள உன்னை

தொலைக்காதே..”

AEOM

“ராட்சசி..,என்னையே கை ஓங்க வச்சிட்டா..,என் கையாள அடிக்க வச்சிட்டாலே..,அவள எப்படியெல்லாம்  வச்சிருக்கனும்னு ஆசை பட்டேன்..,அவளோட வலிக்கு நானே காரணமகனும்னு..,அவள.....,எதுக்கு இப்படி என்னை கொல்லுரா...”என்று யோசித்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

அனைவரது குழப்பத்திற்கும் காரணமான காரண கர்த்தாவோ நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.அவள்  இவ்வளவு நிம்மதியாக உறங்குகிறாள் என்று நினைக்காதிர்கள்..,அவளை உறங்க வைத்துள்ளனர்.அவள் அமைதியற்று திறிவதைப் பார்த்த அவளது நண்பர்கள் கூட்டம் அவளுக்கு பாலில் தூக்கமாத்திரையை கலந்து கொடுத்தனர்.

அதன் திருவருளால் நமது நாயகி நன்கு உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.