(Reading time: 10 - 20 minutes)

ரொம்பக் குறும்பு பாரதி உனக்கு.... உன்னை வேலைக்கு வச்சிருக்கற உங்க சீனியர் பாவம்தான்...... சாரங்கன் உன்கூட வேலை செய்யறவரா?”

“ஆமாம் ஆன்ட்டி... அதை விட நானும், அவனும் பிறந்த அன்னைலேர்ந்து ஒண்ணா சுத்திட்டு இருக்கோம்....”, பாரதி கூற, அவள் சொல்வது புரியாமல் பார்க்க, அவர்கள் அப்பாக்களின் தோழமையில் ஆரம்பித்து, இவர்களின் நட்பு வரை சொல்லி முடித்தாள் பாரதி.  அதற்குள் ராஜாவும் கிளாஸ் முடித்து கீழே வர பாரதியின் சைட் அடித்தல் தொடர்ந்தது.  ராஜா அருகில் இருந்தாலே  பாரதியின் பார்வை அவனையே தொடர்வதை கவனித்த சுகுணா தனக்குள் சிரித்துக்கொண்டார்.

“சாரி..... கொஞ்சம் லேட் ஆகிடுச்சு... நாளைக்கு பசங்களுக்கு கணக்கு டெஸ்ட் இருக்கு..... அதான் எல்லாத்தையும் ரிவைஸ் பண்ண டைம் ஆகிடுச்சு.....”

“பரவாயில்லை ராஜா... எனக்கு நல்லா பொழுது போச்சு... பாவம் ஆன்ட்டிதான் தப்பிச்சு ஓடக்கூட முடியாம என்கிட்ட மாட்டிக்கிட்டாங்க...”

“அவ சும்மா சொல்றாடா ராஜா.... உன்னோட இருக்கும்போது நேரம் போறதே தெரியலை பாரதி... கலகலன்னு பேசற.....”

“ஆன்ட்டி நீங்க சொல்றதை அந்த சப்பாணி கேக்காம போயிட்டானே....  நான் பேசறதை எப்பவும் ஆஃப்  ஆகாத FM ரேடியோ அப்படின்னு கிண்டல் பண்ணுவான்...”, பாரதி சொல்ல ராஜாவும், சுகுணாவும் புன்னகை புரிந்தார்கள்.... மறுபடி ராஜாவின் சிரிப்பில் பாரதி ஃபிளாட்.

“ராஜா பாரதிக்கு நம்ம வீட்டை சுத்திக் காட்டுப்பா...”

“ஏம்மா இது என்ன பெரிய மைசூர் அரண்மனையா.... சுத்திப் பார்க்க.... மிஸ்.பாரதி நீங்க உக்கார்ந்த இடத்துல இருந்தே ஒரு சுத்து சுத்துங்க.... மொத்த வீடும் பார்த்துடலாம்....”, என்க, ‘ ஆ... இவன் என்னையும், சாரங்கனையும் விட படு நக்கல் பேர்வழியாக இருக்கிறானே’, என்று பாரதி பார்த்தாள்.

“ராஜா....  நம்ம வீடு நமக்கு எப்பவுமே அரண்மனைதான்..... வீடு பெரிசா இருக்கணும் அப்படின்னு அவசியம் இல்லை.... ரெண்டு ரூமா இருந்தாக்கூடா நமக்கு அந்த இடம் சந்தோஷத்தை தரணும்..... அதுதான் முக்கியம்....”

“சரியா சொன்ன பாரதி..... டேய் மாடில நீ வச்சிருக்கற தோட்டத்தை பாரதிக்கு காட்டுடா...”

“ஓ.... உங்களுக்கு தோட்ட வேலை ரொம்ப பிடிக்குமா ராஜா....”

“நீ வேறம்மா.... சனி, ஞாயிறு முழுக்க அங்கதான் பழி கிடப்பான்..... நான்கூட அக்ரிதான் படிப்பான்,  படிச்சுட்டு ஏதானும் கிராமத்துல விவசாய நிலம் வாங்கி அங்க செட்டில் ஆகிடுவானோன்னு நினைச்சேன்....”

“ஏம்மா இப்போக்கூட அதுதான் எனக்கு ஐடியா...... என்னோட retirement life கண்டிப்பா கிராமத்துலதான்.... இப்போக்கூட போய்டலாம்.... ஆனா இந்தக் குழந்தைங்க படிப்புக்காக யோசிக்க வேண்டி இருக்குது”

“அதை அப்போ பார்க்கலாம்டா.... நீ பாரதிக்கு மாடித்தோட்டத்தை காட்டிட்டு வா....”,சுகுணா கூற ராஜா , பாரதியை அழைத்துக்கொண்டு சென்றான்.

தோட்டத்தை  பார்த்த பாரதி நிஜமாகவே அசந்து விட்டாள்.... அத்தனை பசுமையாக இருந்தது.... காய்கறிகள், பூக்கள், கீரைகள் என்று தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு  படுநேர்த்தியாக இருந்தது....   ‘ஆவ்வ்வ் தோட்டத்தையே இத்தனை அழகா மெயின்டெயின் பண்ணினா அவரோட ரூம் எப்படி இருக்கும்.....’, பாரதியின் மனம்  ராஜாவின் தோட்டத்தையும், தன்னுடைய ரூமையும் ஒப்பிட்டுப் பார்த்தது......தராசில் அவளின் ரூம் மேலே, உயரே, உச்சியிலே என்று சென்று கொண்டிருந்தது.

“என்ன மிஸ்.பாரதி அங்கேயே நின்னுட்டீங்க.... வாங்க வந்து பாருங்க.....”

“ராஜா... நிஜமாவே செம்மையா இருக்கு.... எப்படி ராஜா இத்தனை அழகா பாராமரிக்கறீங்க....”

“தேங்க்ஸ் மிஸ்.பாரதி..... சின்ன வயசுலேர்ந்து தோட்டம் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்..... முதல்ல வீட்டை சுத்தி மட்டும்தான் இருந்தது.... ஒரு டிவி ப்ரோக்ராம் பார்க்கும்போது இந்த மாதிரி மாடில தோட்டம் வைக்கலாம்ன்னு  அதுக்கான வழி முறைகள் சொல்லிட்டு இருந்தாங்க... அதை பார்த்து ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி அமைச்சதுதான் இந்த மாடித் தோட்டம்”

“இருக்கற இடத்தை ரொம்ப அழகா பிளான் பண்ணி செய்து இருக்கீங்க ராஜா.... சில விஷங்களை சேர்த்தீங்கன்னா இன்னும் சூப்பரா இருக்கும்... இங்க உக்கார்ந்து சாப்பிட டேபிள்,சேர் அப்படியே அந்த இடத்துல ஒரு ஊஞ்சல் ரெண்டு மட்டும் வச்சுட்டீங்க.... நான் எங்க வீட்டை காலி பண்ணிட்டு வந்து இங்கயே செட்டில் ஆகிடுவேன்....”

“பௌர்ணமி அன்னைக்கு நானும், அம்மாவும் இரவு உணவு இங்கதான் சாப்பிடுவோம்... ஆனா கீழ பாய் விரிச்சு உக்கார்ந்து சாப்பிடுவோம்.....”

“ஹ்ம்ம் நீங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு.....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.