(Reading time: 10 - 20 minutes)

ங்களுக்கும் தோட்டக்கலைல ஈடுபாடு இருக்கா பாரதி...”,என்ற கேள்வியை ராஜா கேட்டவுடன், பாரதியின் மண்டைக்குள் கொசுவற்றி சுழன்று, மனது அவளை அவளின் பத்து வயதிற்கு அழைத்து சென்றது....  அவளும், சாரங்கனும் ஆளுக்கு ஒரு மரக்கன்றை நட....  ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டு தன் செடி அடுத்தவரின் செடியை விட வேகமாக வளரவேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் மற்றும் தங்கள் பெற்றோர் வாங்கி வைத்திருந்த உரத்தையும் போட்டு கவனித்த ஓவர் கவனிப்பில்  செடிக்கு அஜீரணம் வந்து மடிந்து போனது.... இரு வீட்டு பெற்றோர்களாலும்  மரம், செடி இருக்கும் பக்கம் நடக்கக்கூட கூடாது என்ற தடா சட்டம் சில நாட்களுக்கு அதன் பிறகு அமல்படுத்தப்பட்டது. இதை பெருமையாக சொல்ல முடியாத காரணத்தால் ஆமாம், இல்லை என்று இரு பொருள்படும்படியாகத் தலையாட்டி வைத்தாள்.

“உங்களுக்கு பொறுமை அதிகம்தான் ராஜா...  இத்தனை பெரிய மாடித்தோட்டம் அமைக்கணும் அப்படின்னா அதுக்கு எத்தனை நேரம் செலவழிக்கணும்... அதோட முடியற கதை இல்லையே... அதுக்கப்பறம் அதை மெயின்டெயின் பண்ணுறதும் பெரிய வேலைதானே..... காலேஜ் வேலை, நீங்க ஏதோ தீஸீஸ் எழுதிட்டு இருக்கீங்கன்னு ஆன்ட்டி சொன்னாங்க, அதுக்கு பிரிப்பேர் பண்றதுன்னு பிஸியா இருப்பீங்க....  இதெல்லாம் போக  உங்களுக்கு நேரம் கிடைக்குதா”

“தோட்டவேலை  எனக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் மிஸ். பாரதி,   பொதுவா ஒரு வேலை உங்களுக்கு பிடிச்சுப் போச்சுன்னா அப்போ அது கஷ்டமா இருக்காது இல்லையா.... எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது... வெளில சுத்தறது பிடிக்காது.... ஸோ என்னோட ஓய்வு நேரத்தை இப்படி செலவழிக்கறேன்....”,ராஜா கூற சனி, ஞாயிறுகளில் பாரதி அவள் தோழிகளுடன் அடிக்கும் கோட்டம் ஞாபகத்திற்கு வந்தது..... நமக்கு நேர் எதிரா குணத்துல இருக்காரே இவர் என்ற யோசித்தாள் பாரதி.

“ராஜா உங்களுக்கு நண்பர்கள்  இல்லையேன்னு கவலைப்படாதீங்க.... இன்னிலேர்ந்து என்னை நானே உங்களோட பெஸ்ட் பிரெண்ட்டா அப்பாயின்மென்ட்  பண்ணிக்கிட்டேன்....  என்னோட ஒரு வாரம் தொடர்ந்து பேசுங்க... அதுக்கப்பறம் RJ வேலைக்கு போகற அளவு ரெடி ஆகிடுவீங்க....”

“ஹாஹாஹா மிஸ். பாரதி, நீங்கதான் வக்கீல்.... தொடர்ந்து எதிர்கட்சிகாரங்களை  மடக்கி, மடக்கி பேசற லைன்ல இருக்கீங்க.... நான் சாதாரண வாத்தியார்தானே, ஸோ இந்த அளவு  பேசினாலே போதும்.....”

“நல்லா யோசிச்சுக்குங்க ராஜா..... ஒரு நல்ல குருவை நீங்க இழக்கறீங்க...... அப்பறம் அன்னைக்கே பாரதி சொன்னாளே நாம கேக்கலையேன்னு நீங்க ஃபீல் பண்ணக்கூடாது.....  இப்போத்தான் நாம ஃபிரெண்ட்ஸ் ஆகிட்டோமே.... நான் ஒண்ணு கேப்பேன்... நீங்க மறுக்காம ஒத்துக்கணும்....”

“ஆ... நீங்க பீடிகையோட கேக்கறதை பார்த்தா ரொம்ப பயமா இருக்கே.... நான் ரொம்ப ஏழை வாத்தியாருங்க.... பெரிய அமௌன்ட் எல்லாம் கேக்காதீங்க.....”

“ச்சே என்னை இத்தனை சீப்பா நினைச்சுட்டீங்களே.... போயும் போயும் உங்கக்கிட்ட பணமா கேப்பேன்.... ஒரு காரோ, வீடோ இந்த லெவல்லதான் என்னோட கோரிக்கையே இருக்கும்...”

“மிஸ். பாரதி நீங்க சான்சே இல்லை....”

“இதுதான்.... இந்த மிஸ் கேக்கும்போது ரொம்ப கடுப்பாகுது.... ப்ளீஸ் அதை விட்டுட்டு வெறும் பாரதின்னு கூப்பிடுங்களேன்.....”,என்று கேட்க ராஜா சரி என்பதுபோல் தலையாட்டினான்.

“சரி ரொம்ப நேரமா ஆன்ட்டி தனியா இருக்காங்க.... வாங்க கீழ போகலாம்... அதுக்கு முன்னாடி உங்க தோட்டத்தை நான் போட்டோ எடுக்கணுமே அனுமதி உண்டா”,பாரதி கேட்க, ராஜா தலையசைக்க , பல கோணங்களில் அந்த தோட்டத்தை புகைப்படம் எடுத்து, கூடவே ராஜாவிற்கு தெரியாமல் அவனையும் படம் எடுத்து கீழே இறங்கினாள் பாரதி.  அவளின்  பேச்சை ரசித்து புன்னகைத்தபடியே அவளின் பின் படியிறங்கினான் ராஜா.

தொடரும்

Episode 08

Episode 10

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.