(Reading time: 20 - 40 minutes)

ம்மா, மாமா என்ன சொல்றாரு, விக்னேஷ் வீட்டில இருந்து செல்விய எப்ப பார்க்க வர்றாங்களாம்?” – இளமாறன்

இந்தக் கேள்வி வனிதாவை மட்டுமல்லாது செல்வியையும் கலைத்தது.

“வர்ற வெள்ளிக்கிழமைன்னு மாமா சொன்னார், பாப்போம் எனக்கென்னமோ மாமவோட வற்புறுத்தலால தான் அவங்க வர்றாங்களோன்னு தோணுது…” – வனிதா

“இல்லம்மா, விக்னேஷ் செல்வியோட ஃபொட்டோ பார்த்துட்டு அவ கிட்ட பேசனும்னு சொன்னாரு… நான் தான் ஒரு தடவ குடும்பத்தோட வந்து வீட்டில பேசுங்கன்னு சொன்னேன்.. அவங்க அப்பா கூட நல்ல மாதிரியாதான் இருக்காங்க.. ஆனா அவங்க ஸ்டேட்டசுக்கு கொஞ்சம் எதிர் பார்ப்பாங்கன்னு தோணுது..”- இளமாறன்

“ஆமாடா, ஆனா பையன் நல்ல பையனா இருக்கிற பச்சத்தில எப்படியாவது கல்யாணாத்த நடத்திரனும்… மாமவும் அத தான் சொல்றாரு..” – வனிதா

இளமாறனின் சிந்தனை ஓடியது. விக்னேஷ் சாந்தமான பையன், தன் தாய் தந்தையர்கு மிகவும் கட்டுப்பட்டவன். ஆனால் அவனது அம்மாவிற்கு இந்த சம்பந்தத்தில்  முழு சம்பந்தம் இருக்குமென தோன்றவில்லை. இது தொடர்பாக இலாவும் அவன் மாமாவும் அவர்களது வீட்டிற்கு சென்றபோது, விக்னேஷின் அம்மா வெளியே வரவில்லை. அதுவே அவனுக்கு மிக அதிதிருப்தியாய் போனது.இருந்தாலும் விக்னேஷின் நல்ல குணமும், வசதியும் செல்வியை நன்றாக வைத்துக்கொள்ளுவான் என்ற நம்பிக்கையை அவனுள் எழுப்பியது..

இதை யோசித்தவனாய், “அம்மா, இந்தக் கல்யாணம் நடக்கும், இன்னும் இரண்டு நாளைக்கு செல்விய லீவ் எடுக்க சொல்லி வீட்டில நல்ல ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க.. வெள்ளிக்கிழமை அவங்க வீட்டில இருந்து வரும்போது அவ தேவதை மாதிரி இருக்கனும்…” என்றான் புன்னகைத்துக்கொண்டே

உள்ளேக் கட்டிலில் புரண்டுகொண்டிருந்தவளுக்கு வேதனை முட்டிக்கொண்டு வந்தது. அவள் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு மனதை தேற்ற முயன்றாள். “விக்னேஷ்” மிகவும் நல்லவன் தான், ஆனால் அவன் மீது அவள் மனம் செல்லாது போனது. முன்பெல்லாம் திருமணம் ஆனதும் அது சரியாகிவிடுமென அவள் நினைப்பாள்…இன்று அந்த நம்பிக்கை நொறுங்கிப்பொனது.. இனிமேல் அவள் மனம் விக்னேஷை ஏற்பது கடினம், அவள் தன்னைத்தானே நொந்துகொண்டாள், “பாழாய்ப்போன இதயம், தன் தகுதி மறந்து, பலர் கண் விழும் மகா செல்வந்தனின் மேல் அல்லவா விழுந்தது…, இந்த மானங்கெட்ட மனதையெப்படி தடுப்பதென தெரியாது தவித்தாள் அந்த இளங்கொடி.

டற்கரைக் காற்றை வெகு நேரம் இரசித்துவிட்டு, அருகிலிருந்த புத்தகக் கடைநோக்கி நடந்தாள் தர்ஷினி. அந்த இளம் மாலை நேரம் மெதுவாக கருக்கத்தொடங்கியது, அந்த பரந்து விரிந்து கிடந்த கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை  ஒவ்வொரு வரிசையாக  பார்த்துக் கொண்டிருந்தாள். புதிதாகத் திற்ககப்பட்டிருந்ததாலும் புத்தகக்கடை என்பதாலும் கூட்டம் அதிகமின்றி இருந்தது. தர்ஷினி அந்தக் கடைக்குள் வந்து வெகுநேரம் சுற்றி இறுதியாக அவள் தேர்ந்தெடுத்த புத்தகங்களை வாங்குவதற்கு அவள் தன்னுடைய டெபிட் கார்டை நீட்டினாள்.

“மேம், இன்னிக்கு கார்டு ஸ்வைப் பன்ன முடியாது, நெட்வொர்க் இல்ல, கேஷ் குடுங்க”

“எவ்வளவு”

“900”

பர்சைத்துளாவினாள் அவ்வளவு தேராது, அவள் ஆசையாக இவ்வளவு நேரம் கடையை சல்லடைப்போட்டு தேடி எடுத்தவை. சில வற்றில் ஒரு பிரதி மட்டுமே இருந்தது. அதனை விட்டுப் போனால், பின்பு கிடைப்பது கடினம்.

“சார், கொஞ்சம் வெயிட் பன்னுங்க, பக்கத்தில போயிட்டு கேஷ் எடுத்துட்டுவரேன்” – தர்ஷினி

“தேவையில்ல தர்ஷினி” – என்ற குரலுக்கு அவள் திரும்பும்போது அருகில் நின்றிருந்தான் சிவா. அவள் கண்கள் மலர்வதை ஒரு நொடி இரசித்தவன், கடைக்காரரிடம் பணத்தை செலுத்தி, புத்தகங்களை வாங்கி அவன் கைகளில் வைத்துக்கொண்டு, தர்ஷினியிடம், “போலாமா?” என்றான் குறுகுறு பார்வையுடன். நிகழ்காலத்திற்கு வர தினறியவள் அவன் எடுத்துக்கொண்ட உரிமையில் உருகிப்போனாள். அவனை பார்க்கக்கூடாது, பார்த்தாலும் விலகிப் போக வேண்டுமென அவள் போட்டுவைத்திருந்த வரைமுறைகலெல்லாம் கரைந்துபோனது. இருவரும் கடையைவிட்டு வெளியே வந்தனர்.  

“நீங்க எங்க இங்க?” – தர்ஷினி

“வேல முடிச்சுட்டு அப்டியே பீச் போலாம்னு வந்தேன், நீ இந்த கடையில நிக்கிறத பார்த்தேன், சொ..ஜஸ்ட் லைக்தேட் ஐகேம்..“ சொல்லிவிட்டு அவன் வானத்தைப் பார்த்தான். முழு நிலவு காய்ந்தது. “உனக்கு இப்ப ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?” – சிவா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.