(Reading time: 20 - 40 minutes)

ல்லை என்று தலை ஆட்டினாள், காதில் அணிந்திருந்த ஜிமிக்கியுடன், பின்னி கிடந்த ஒன்றிரண்டு முடிக்கற்றைகளுடன் அவள், நிலவைவிட அழகாய்த்தெரிந்தாள்.

பீச் போலாமா தர்ஷினி..  இன்னிக்கு பௌர்ணமி, கடல் ரொம்ப அழகா இருக்கும் ஒரு வாக் போலாமா?

இதழ்கள் விரிந்து புன்னகைத்தாள்.  தலையை அசைத்து பதில் சொன்னாள். இருவரும் நடந்தனர்,  சாலையைக்கடக்கும் போது அவள் கையை மென்மையாக பற்றிக்கடந்தான். இருவரும் கடற்கரைக்கு வந்தனர். கூட்டத்தைக் கடந்து இருவரும் நடந்தனர். அவனுடைய அந்த அருகாமை அவளுக்கு பிடித்திருந்தது. உண்மையில் அவள் மனம் அதை தான் வேண்டியது என்பதை அவள் உணர்ந்தாள். அவள் அதிகம் பேசாது அவனுடம் மௌனமாக வருவது அவனுக்கும் பிடித்திருந்தது. கொஞ்சம் நடந்து பின் இருவரும் மணலில் அமர்ந்தனர்.

“உண்மையிலேயே பீச்சுக்கு தான் வந்தீங்களா?” – தர்ஷினி

தர்ஷினியின் பக்கம் திரும்பி அவள் முகம் பார்த்தான். “இல்ல, உன்ன பாக்கத்தான்!” அழுத்தமாக உச்சரித்து முடித்து அவளை உற்று நோக்கும் அவன் கண்களை சந்திக்க இயலாது முகத்தை தாழ்த்தி மண்ணை அழைந்தாள். உண்மையை உரைத்துவிட்டு அவள் நடுக்கத்தை இரசித்துக்கொண்டு அவன் தோடர்ந்தான்,

“பின்ன, மேம் அன்னிக்கு ரொம்ப அவசரமா கிளம்பிட்டீங்க…எங்க கூடலாம் நீங்க டைம் ஸ்பென்ட் பன்னுவீங்களா? என்ன இருந்தாலும் காவ்யா மாதிரி வருமா?”

தீடிரென்று அவன் மரியாதையுடன் பேசியது மனதிய ஏதோ செய்ய..”யாரா இருந்தாலும் காவ்யா மாதிரி கிடையாதுதான், ஏன்னா அவ என்னோட உயிர்.. அம்மாக்கும் அப்பாக்கும் அடுத்து எனக்கு அவ தான்.. ஆனா சீக்கிரம் கிளம்பினதுக்கு அது இல்ல காரணம்.  அன்னிக்கு  நிறைய அம்மாவ பத்தி பேசிட்டோம் அதான் தீடிர்னு அப்செட் ஆயிட்டு, அங்க இருந்தா  அழுதுறுவனோன்னு தொணுச்சு! அதான்.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க”

அவளையே பார்த்திருந்தவன், “அப்ப காவ்யா மாதிரி உன்னோட ஃபிரண்டாகுறதுக்கு நான் என்ன பன்னனும் தர்ஷினி மேம்?”  அவன் புன்னகைத்தான்

“சொ..சிம்பிள்.. சுயநலம் ஏதுமில்லாம உண்மையா பழகனும்” – தர்ஷினி. இருவரும் புன்னகைத்தனர்.

“சொல்லுங்க, என்ன ஏன் பாக்க வந்தீங்க?” – தர்ஷினி, எப்படியேனும் அவன் மனதை திறந்து உதிர்க்கும் வார்த்தைகளுக்கு அவள் காத்திருந்தாள்.

‘என்னக் கேள்விடீ இது… ? ‘ என்று அவன் மனம் துடித்தது. “உன் வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற வீடு விலைக்கு வருது, அத வாங்கலாம்னு வந்தேன்… யாருகிட்ட அத பத்தி விசாரிக்கலாம்னு யொசிச்சப்ப..திடீர்னு நம்ம தர்ஷினி மேடம் இங்க தான இருக்காங்க.. அவங்களுக்கு தான் பெசன்ட் நகர்ல இருந்து அம்பத்தூர் வரைக்கும் தெரியுமே .. சொ உன்ன கேக்கலாம்னு… வந்தேன்…!” – அவன் கேலியாய் கூறவும் அவள் பொய் என்று தான் நினைத்தாள்.

“உங்கக்கிட்ட ஒன்னு கேட்கனும். என்ன பார்த்த அன்னிக்கே கண்டு பிடிச்சிட்டீங்களா? நான் உங்க ரிலேஷன் தான்னு தெரிஞ்சுட்டா?”  - தர்ஷினி

“இல்ல, ஆனா நீ எங்க வீட்டு பொண்ணுனு மனசு சொல்லுச்சு…” – சிவா

“சொல்லும் சொல்லும்… நல்லா பொய் சொல்றீங்க.. “ இருவரும் சிரித்தனர்.

“தர்ஷினி” அழைப்புக்கு நிமிர்ந்தவளை கூர்ந்து பர்த்துக்கொண்டே.. “எனக்கு கல்யாணம் ஆன விஷயம் உன்ன கஷ்ட படுத்திட்டா தர்ஷினி”

ஆமாம் என தலை அசைத்தாள். பின், “ஆனா அத விட விஷ்ணுக்கு அம்மா இல்லங்கிறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு”

“அப்ப ஏன் வந்ததில இருந்து நீ விஷ்ணுவ பத்தி ஏதும் கேட்கல?”

“ஏன்னா, உங்கக்கிட்ட அதிக உரிமை எடுத்துகிட்ட மாதிரி ஆயிடும்.. அதான்!”

அவள் உண்மையை உரைத்தது அவனுக்கு பிடித்திருந்தது. அவனது கடந்த காலத்தை அவள் தோண்டி துருவாவது அவனுக்கு இன்னும் அவள் மேலான அன்பை அதிகரித்தது. இருவரும் பேசிக்கொண்டே எழுந்து நடந்தனர். அவனது கார் அருகே வந்ததும்..

“வா, தர்ஷினி அப்டியே உன்ன வீட்டில விட்டுட்டு நான் கிளம்புறேன்..”

“இல்ல, வீடு பக்கத்தில தானே … நான் நடந்தே போயிடுவேன்…. அப்பா வீட்டில இருக்கிற நேரம் வேர.. வீணா அவங்க டென்ஷன் ஆவாங்க.. அப்ப நான் கிளம்பட்டுமா… அடுத்த தரவ கண்டிப்பா விஷ்ணுவ கூட்டிட்டு வாங்க…!”

“ஒரு நிமிஷம்..” அவன் காரிலிருந்து ஒரு கவரை எடுத்து தர்ஷினியிடம் கொடுத்தான் அது அவன் வீட்டில் அவள் விட்டு வந்த புடவை.

அதைப் பார்த்ததும், “இத நான் உங்க மிஸஸ்காக வாங்கினது” - தர்ஷினி

“தெரியும், அதனாலதான் உங்கிட்ட கொடுக்கிறேன்!” அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், அவன் கண்களில் முன்னிய உணர்வுகள் அவளை ஏதோ செய்ய அவன் கைகளிலிருந்து அந்தக் கவரை வாங்கிகொண்டாள். பின் எப்படி நடந்து வீடு வந்து சேர்ந்தாள் என அவளுக்கு நினைவில் இல்லை.  அன்றைய இரவிற்கு அவள் காத்திருந்தாள். வீட்டு பணிகள் முடித்து மாணிக்கம் உறங்கியதும் மெதுவாக அவள் அந்தக் கவரைப் பிரித்தாள். அவள் வாங்கிய புடவைதான் அது. ஆனால் அது அவன் கைகளிலிருந்து அவளிடம் கிடைத்ததில் எல்லையில்லா ஆனந்தம் அவளை நனைத்தது. கவருள் சிறிய துணிப்பை ஒன்று இருந்தது விரித்துப் பார்த்தாள்.. அதில் இரண்டு அழகிய வெள்ளி மெட்டி பளீரென மின்னியது. தர்ஷினியின் கண்களை கடந்து கண்ணீர் கண்ணத்தில் வழிந்தது. அந்த நொடி அவள், “இறைவா, இதை அவரே எனக்கு போடுற நாளை சீக்கிரம் கொடு” என்று வேண்டினாள். அந்தக் கவருள் அவன் விட்டிருந்த பிஸ்னஸ் கார்டை எடுத்துப்பார்த்தாள்.. பின் மார்போடு அனைத்துக்கொண்ட அந்த புடவையோடு அவள் உறங்க முயற்சித்தாள்.. ஏதேதோ எண்ணங்கள் அவளை படுத்தியது. எதற்கும் அவள் அணை போடவில்லை. கட்டவிழ்ந்த குதிரையாக இதயத்தில் மலர்ந்த காதலை அவள் இரசித்தாள்…வெளியே முழு நிலவு அவளது நிலைக்கு வெட்கி தன்னை மேகத்திற்குள் மறைத்தது..இரவோடு சேர்ந்து அதுவும் கரைந்தது…

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.