(Reading time: 18 - 35 minutes)

னவுகள் மிதந்த மலர்ச்சியான முகத்துடன் இருக்கும் இந்த மஹிந்தன் அவனுக்குப் புதிது.பிசினெஸில் அவன் வெற்றி பெறும் போதும் பெண்களிடம் அவன் பொழுதுகளை கழிக்கும் போதும் அவன் சிரிக்கும் சிரிப்பில் ஓர் அலட்ச்சியம் இருக்கும். ஜோக்குகள் அவனுக்கு தனக்கும் பழக்கம் இல்லாததாக இருந்தது. எனவே இப்பொழுது அவனின் முகத்தில் இருந்த அவனின் பூரிப்பான சிரிப்பு இன்னும் அவனை இளமையானவனாக அழகானவனாக காண்பித்தது கதிருக்கு.

தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த கதிரை பார்த்த மஹிந்தன் “வொய் ஆர் யூ லுக் மீ ஸ்ட்ரேன்ஜ்”. என்று புன்னகையுடன் கேட்டபடி காரின் பின்னால் வருணை உட்காரச் சொல்லி ஜாடை காட்டியபடி முன்னாள் ஏறி அம்ர்ந்தான் மஹிந்தன்.

அவன் கேட்டதற்கு, நீ இன்னைக்கு பார்க்க வித்தியாசமா எனக்கு தெரியிற என்றான் கதிர்.

அவன் அவ்வாறு கூறியதும் தன்னை குனிந்து பார்த்தவன் நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன் எதைவைத்து அப்படி சொல்ற, என்று கேட்டான் மஹிந்.

உடனே உன் முகம் எப்பொதும் விட இன்று பளிச் என்று இருக்கிறது. உன் ஸ்மைல் எப்பொழுதும் விட இன்று அழகாக இருக்கிறது என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் மஹிந் அச்சோ இப்படி எல்லாம் நீ என்னை சொன்னாள் எனக்கு உன் கூட உட்கார பயமாக இருக்கு.இந்த டயாலாக்கை என்னை ழையா பார்த்து சொள்ளவேண்டும் என்றான்.

இவர்கள் பேசும் போது கதிர் புன்னகைத்துக்கொண்டே யோசனையுடன் மஹிந்தனை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவனின் முகக்குறிபை பார்த்த மஹி கேளு வருண் உனக்கு என்ன தெரியனும், நீ கேட்பதற்கு நான் கட்டாயம் பதில் சொல்வேன் யோசிக்காமல் கேள் என்றான்.

இல்ல! நான் இங்க வருவதற்கு முன் உங்களை பார்த்து நிறைய திட்டனும் என் அக்கா அழும் படி நீங்கள் அவளை வைத்திருந்தால் உங்களின் முதல் எதிரி நானாகத் தான் இருக்கணும் என்று நினைத்துக் கொண்டு தான் இங்க வந்தேன்

ஆனா! இங்க வந்தபிறகு அது மாதிரி உங்களிடம் நான் பேசவேண்டிய அவசியம் இல்லை என்பதை உங்கள் அம்மாவுடன் நீங்கள் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன். இருந்தாலும் ஒரு சந்தேகம் நீங்கள் இவவளவு பெரிய ஆள் நீங்கள் என் அக்காவை ரொம்ப விரும்புகிறீர்கள் பிறகு ஏன் அவளை இப்படி நிர்பந்தத்தில் நிறுத்தி கல்யாணம் பண்ணினீர்கள் ஒன்று என் அக்காவின் மனம் மாறி உங்களின் அன்பை புரிந்து கொள்ளச் செய்திருக்கலாம் பின்பு அவளின் சம்மதத்துடன் எங்களின் வீட்டில் பெண் கேட்டுவந்து கல்யாணம் செய்திருக்கலாமே என்று கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டதும் மஹிந், நான் சொல்லவதை கேட்டு நீ கோபப்படக் கூடாது நான் முதலில் ழையாவை பார்த்தபோது அவள் யார் என்று எனக்குத்தெரியாது. இருந்தாலும் அவள் கண்கள் எனக்கு மறக்க முடியாத ஓர் ஈர்ப்பைக் கொடுத்தது.அதற்குப்பின் எனக்கு ஐஸ்வர்யாவுடன் நிச்சயம் ஆனபிறகு தான் உன் அக்காவைப் பார்த்தேன் ஆனால் அப்பொழுது இரண்டு பேருக்கும் மோதல் தான் வந்தது. அப்போ உன் அக்கா என்னை பார்த்து கூறிய வார்த்தைக்கு கோபத்துடன் அவளின் மனதை காயப்படுத்த என் அருகில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று தான் நினைத்தேன். பட், அவள் என் கிட்ட வந்த பிறகு அவள் என்னுடையவள் என்ற பீலிங்ஸ் எனக்கு ஏற்பட்டது ஆனால் நான் அவளிடம் முதலில் காண்பித்த வில்லன் வேஷம் அவளின் மனதில் பதிந்து போய்விட்டது. சோ! என்னால் அவளை அட்ராக்ட் பண்ணமுடியவில்லை. அவளை நான் ஈர்க்கனும் என்று நான் யோசிச்சு வேலை செய்தால் அவள் யோசிக்காமலே அவளை அறியாமலே என்னை ஈர்த்து என்னை அவள் மேல் பைத்தியமாக ஆக வைத்தாள்

அதனால்தான் அவளை கல்யாணம் செய்தேன். ஆனால் ஓர் விஷயத்தை நான் கட்டாய,ம் சொல்வேன். நான் அவளை ஏமாற்றி கல்யாணம் செய்த பிறகு தான் ஒன்றை உணர்ந்தேன். அவளுக்கும் என் மேல் கொஞ்சம் ஈர்ப்பு இருக்கு என்று உணர்ந்தேன். இப்பொழுது உன் அக்கா என்னை அவள் அறியாமலே லவ் பண்றாள். ஆனால் அதை நான் அவளை கட்டாயப் படுத்தி கல்யாணம் செய்தேன் என்ற கோபம் அவளை உணரச் செய்ய மாட்டேன் என்கிறது. பட், கூடிய சீக்கிரம் முழுசா என் ழையா எனக்கு கிடைப்பாள் என்றான்.

அவன் கூறியதை கேட்டதுமே என் அக்காவின் கோபத்தை குறைப்பது அவ்வளவு ஈசி என்று நினைத்துவிடாதீர்கள், அதற்கு இந்த மச்சினன் உதவி உங்களுக்கு கட்டாயம் தேவை என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் சிரித்தபடி நோ நோ இந்த மஹிந்தன் யாருடைய உதவியையும் இதுவரை எதற்கும் பெற்றதில்லை என்றவன். பட், நீ என் ழையாவின் தம்பி அதுவும் பாசமான.... தம்பி. சோ! உன்னை உதவியை கன்சிடர் பண்ண கொஞ்சம் யோசிக்கிறேன் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும், அப்பா! ரெம்ப பிகு தான். அப்படியெல்லாம் போனாப் போகுதுன்னு ஹெல்ப் கேட்டால் என்னால் செய்ய முடியாது. உங்கள் பிசினெஸ் மேன் கெத்தை விட்டு கொஞ்சம் இறங்கி வந்து என்னிடம் நீங்கள் கேட்டால் அவளின் வீக் பாய்ன்ட் என்ன, என்ன செய்தால் அவளுக்கு உங்களை பிடிக்கும் என்று டிப்ஸ் கொடுக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் ஹெல்ப் கேட்ட இவவளவு பந்தா செய்கிறீர்கள் சோ! நான் அந்த டிப்ஸ் சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன் என்று கூறினான்.

ஓகே வருண் சரண்டர்.ப்ளீஸ் எனக்கு அந்த டிப்ஸ் வேணும் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது கார் வருனின் வீட்டின் முன் நின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.