(Reading time: 11 - 21 minutes)

"ரொம்ப நாளா இந்த மாதிரி அன்புக்காக ஏங்கி இருக்கேன்!அப்பாக்கிட்ட அன்பு கிடைத்தாலும் அம்மா இல்லாத குறை எப்போதும் இருந்துட்டே இருக்கும்!இனி கவலையில்லை!அதான் நீ வந்துட்டல்ல!"-காதலின் உண்மையை விளக்கியவரை இமைக்காமல் பார்த்தார் காயத்ரி.

"சாப்பிடுங்க!"

"போதும் செல்லம்!"

"என்ன சாப்பிடுறீங்க நீங்க?குழந்தைக்கூட நிறைய சாப்பிடும்!"

"அடிப்பாவி!நீ ஊட்டிவிட்டேன்னு வழக்கத்தை விட 2 இட்லி அதிகமா சாப்பிட்டு இருக்கேன்!இதுக்கு மேலே தாங்காது!விட்டுவிடும்மா!"

"சரி...கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுங்க!மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்?"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்!நான் பார்த்துக்கிறேன்!"

"ப்ச்..கல்யாணத்துக்கு அப்பறம் நான் தானே செய்யப்போறேன்!ஒருநாள் கல்யாணத்துக்கு முன்னாடி செய்தாதான் என்ன?"

"இல்லை செல்லம்!"

"உஷ்!பேசாம! ஒரு அரை மணி நேரம் கழித்து,இந்த கஷாயத்தை குடிங்க!"

"கஷாயமா?"-முகம் சுழித்தார் அவர்.

"என்ன அப்படி கேட்கிறீங்க?குடிங்க..."-சிறு பிள்ளையை மிரட்டுவதாய் மிரட்டினார்.

"ஓய்!கமிஷ்னர்டி!இப்படி மிரட்டுற?"

"ஊருக்கே ராஜாவா இருந்தாலும் வீட்டுக்கு யாரு ராணி?"

"............."

"பேசாம போய் கொஞ்ச நேரம் தூங்குங்க!"

"சரிங்க!"-இறைவன் மறு உருக்கொண்டு கடைந்த அமிர்தமாய் தித்தித்த காதலில் துயரும் சேர பார்த்தது.

மாதம் இரண்டு வேகமாய் கடக்க,அன்று நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மகேந்திரனின் உறக்கத்தைக் கெடுத்தது தொலைப்பேசி அழைப்பு!!

"ஹலோ!மகேந்திர குமார்!"

"என்னங்க..!நான் காயத்ரி பேசுறேன்!"-பதற்றமாக ஒலித்தது அவர் குரல்!!

"காயு!என்னம்மா?என்னாச்சு?"

"நம்ம விஷயம் அப்பாக்கு எப்படியோ தெரிந்துப் போச்சுங்க!அவர் என்னை ஊருக்கு அழைச்சிட்டு வந்துட்டார்!அதுமட்டுமில்லாம,எனக்கும் என் அத்திம்பேரோட தம்பி ரகுராமுக்கும் நிச்சயம் பண்ணப் பார்க்கிறாங்க!எனக்கு பயமா இருக்குங்க!உடனே வாங்க!"

"அழாதே!எனக்கு நீ அழுதா பிடிக்காது!நான் உடனே வரேன்!என் கூட கிளம்ப தயாரா இரு!"-இணைப்பைத் துண்டித்து உடனடியாக கிளம்பினார் மகேந்திரகுமார்.மறுநாள் காலை சரியாக தாம்பூலம் மாற்றடப்படும் நேரம்....

உயிரே ஒடுங்கிக் கொண்டிருந்தது காயத்ரிக்கு!!

மனதில் இறைவனை நிறுத்தி மனமுருக வேண்டினார் அவர்.

"காயத்ரி சொன்னாக்கேளு!இந்தக் கல்யாணம் நிச்சயம் நடக்கும்!"

"அவர் வருவாருக்கா!மனதளவுல என்னிக்கோ எங்களோட வாழ்க்கையை நாங்க தொடங்கிட்டோம்!வாழ்ந்தா அவர் கூட தான் வாழ்வேன்!இல்லைன்னா,இந்த நிச்சயம் நடந்து முடியும்போது காயத்ரி மகேந்திரன் உயிரோட இருக்க மாட்டா!"-வாழ்வின் சங்கல்பத்தினை நொடியில் விளக்கினார் காயத்ரி.

"காயத்ரியை அழைச்சிட்டு வாம்மா!"-குரல் ஒலித்தது.

"காயு!"

"பயப்படாதேக்கா!இந்த நிச்சயம் நடக்காது!அவர் வருவாரு!"-துணிந்து கீழிறங்கி சென்றார் அவர்.

"வாம்மா!பெரியவாக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ!"-அவர் அசையாமல் சிலையாக நின்றார்.

"படித்த பொண்ணு இல்லையா?பரவாயில்லை...தட்டை மாற்றிக்கோங்க!"-இரு குடும்பத்தாரும் தத்தம் தாம்பூலத்தை மாற்ற முனைந்த நேரம்,

"ஒரு நிமிஷம்!"என்ற குரல் அவர்களைத் தடுத்தது.

காயத்ரியின் மனம் கவ்வி இருந்த வேதனை உடைந்துப்போக,

அபயம் அளிக்க வந்த குரலின் உரிமையாளரை மறந்தவர் சூழ்நிலை மறந்து ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொண்டார்.

"காயத்ரி!"

"ஒரு நிமிஷம் சார்!"

"யாருங்க நீங்க?இங்கே எதுக்காக வந்து பிரச்சனை பண்றீங்க?"

"பிரச்சனை பண்ண வரலை!காயத்ரியை கூட்டிட்டு போக வந்தேன்!என்னைப் பற்றி நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்!அதனால,என்னோட அறிமுகம் தேவையில்லைன்னு நினைக்கிறேன்!"

"காயத்ரி என்னடி இதெல்லாம்?உன் விருப்பத்துக்கு உன்னை வளர்த்தேனே!இப்படி தலைகுனிய வைத்துட்டியே!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.