(Reading time: 9 - 17 minutes)

"எப்போ வருவாங்க?"

"சீக்கிரமே!"

"தேங்க்யூப்பா!"-என்று புன்னகைத்தப்படி தன் தந்தையை அவன் அணைத்துக் கொள்ள,அவன் பிடிவாதம் தளர்ந்ததன் அறிகுறியாய் பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியானது.

மிக ஆழ்ந்த நித்திரையில் சஞ்சரித்திருந்தவளுக்கு திடீரென விழிப்புத் தட்டியது.பிரிக்க முடியாமல் விழிகள் இரண்டையும் பிரித்து பார்த்தாள்.மணி தற்சமயம் இரவு இரண்டு!!மீண்டும் உறக்கம் வர அவள் இடப்பக்கமாக திரும்பி படுக்க,அவளருகே நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் ஆராத்யா.மனம் தூக்கிவாரி போட சட்டென எழுந்து அமர்ந்தாள் கீதா.

இவள் எப்போது இங்கு வந்தாள்??சிவா எங்கே??மனம் குழம்பி போனது அவளுக்கு!!மெல்ல மெத்தையை தியாகித்து எழுந்து தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.தன்னிச்சையாக அவளது விழிகள் அவளறியாமல் அவனை தேடின.எங்கே சென்றிருப்பான்??என்ற குழப்பத்தோடு எங்கும் தேடியவளின் விழிகளில் சோபாவில் படுத்தப்படி உறங்கிக் கொண்டிருந்தவன் தென்பட்டான்.

இவன் எப்போது இங்கு வந்தான்??எதற்காக இங்கு துயில் கொள்கிறான்??சில நொடிகள் குழந்தயென கேசம் கலைந்து உறங்கி கொண்டிருப்பவனிடம் நிலைப்பெற்று இருந்தன அவளது விழிகள்!!

"அக்கா!"-உறக்க கலக்க நிலைந்த குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினாள்.கரத்தில் காலி தண்ணீர் கோப்பையுடன் நின்றிருந்தாள் ஆராத்யா.

"தூங்கலையா?"

"அது...நான்!"

"ஓ...மாமாவை பார்க்க வந்தியா?"-குறும்போடு கேட்டாள் அவள்.

"..............."

"நீ நேற்று சீக்கிரம் தூங்கிட்டியா!நாளைக்கு வேற நான் ஊருக்கு போக போறேனா!அதான்,மாமா இன்னிக்க உன்கூட தூங்க சொல்லிட்டார்!"

"ஓ..!"-இயல்பாக வேறு எவருடனும் உறங்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் வருணுடனும் உறங்காமல்,ஒரு பெண்ணின் அறைக்கு சென்றால் சில தர்மசங்கடமான சூழல் உருவாகலாம் என்று எண்ணி அவன் இங்கு உறங்கி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது அவள் மனம்!!

"சரி நீ போய் தூங்கு!நான் வரேன்!"

"ஓகே!ஓகே!"-வந்த காரியத்தை நிறைவேற்றாமல் திரும்பி சென்றாள் ஆராத்யா.

அவள் சென்றதும் மீண்டும் ஒருமுறை அங்கு பள்ளிக் கொண்டிருந்தவனை நோக்கினாள் கீதா.நடுங்கும் குளிரில் போர்வை கூட போர்த்தி கொள்ளாமல் உறங்கி கொண்டிருந்தான்.தன் அறைக்கு சென்றவள்,அவனது தலையணையையும்,போர்வையையும் எடுத்து வந்தாள்.

அமைதியாக உறங்கி கொண்டிருந்தவனின் சிரத்தை தூக்கி,அதனை தலையணை மீது பதிப்பித்தாள் அவள்.அவன் சற்றே உறக்கம் கலைய,சிணுங்கினான்.

"மா!ப்ளீஸ்..ஐந்து நிமிடம்!"-உறக்கத்திலே புலம்பியவனை சில நொடிகள உற்று பார்த்தாள் அவள்.பின்,புன்னகையுடன்,அவனுக்கு போர்த்திவிட்டாள்.போர்வையை இறுகப் பிடித்தப்படி குழந்தையென மீண்டும் ஆழ் நித்திரையில் விழுந்தான் அவன்.எதிர்பாராத விதமாக,அவனை நீங்கி அவள் எழுவதற்குள் அவளது கரம் அவனால் சிறைப்பிடிக்கப்பட்டது.திடுக்கிட்டு போய் சுதாரிப்பதற்குள் அவனது கன்னம் அவள் கரத்தினால் தீண்டப்பட்டது.சிலையாகி போனாள் கீதா.ஒன்றும் புரியாமல் தவித்திருந்தாள்.எனினும்,அவளது கரத்தை விடுவிடுக்க அவள் முனையவில்லை.ஒரு வித நேசம் அவள் முகத்தில் பிரதிபலித்தது.உறங்கி இருந்தவனின் முகத்தையே உற்றுப் பார்த்தாள் அவள்.அதில் இருந்தது நேசமா?இல்லை...அதையும் தாண்டிய உணர்வா?அதை அவள் மட்டுமே அறிவாள்.

"அக்கா!"-பின்னால் இருந்து ராகமான குரல் கேட்க,திடுக்கிட்டு தன் கையை எடுத்துக் கொண்டாள்.

"என்னக்கா பண்ற?"

"நீ தூங்கலையா?"

"ரொம்ப நேரமாச்சே!என்னன்னு பார்க்க வந்தேன்!அவசரப்பட்டு வந்துட்டேன் போலிருக்கு!"

"பேசாம வா!டைம் ஆகுது!"

"ரொம்ப பறக்காதே!காலையில கிளம்பிடுவேன்!"

"ஏ..நான் அதை சொல்லலைடி!"

"புரியுது புரியுது!!எனக்கு தூக்கம் வருது!நானும்,வருணும் கிளம்பிட்ட அப்பறம் உன் ரொமான்ஸை வைத்துக்கொள்!"-என்றவள் தமக்கையின் கரத்தை பிடித்து இழுத்து சென்றாள்.ஏனோ விளக்க இயலாத ஒரு உணர்வு அவள் இதயத்தில் பதிந்து போனது.

றுநாள் காலை...

"இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போங்களேன்!"-வருத்தத்தோடு கேட்டான் சிவா.

"அண்ணா!அப்பா இதுக்கே என்னை திட்டுறாரு!"

"ஏன்?"

"என்னண்ணா?இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு!நாங்க எதுக்கு நடுவுல?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.