(Reading time: 10 - 20 minutes)

நாளாக நாளாக மகேந்திரனின் உடலில் பல்வேறு மாறுதல்களை உணர்ந்து,மீண்டும் தன்னை பரிசோதிக்க,'எச்.ஐ.வி. பாஸிடிவ்!' என்ற முடிவு வந்தது.

உண்மையை என்று தான் இவ்வுலகம் நம்பியிருக்கிறது??மாயை திறை சுற்றப்பட்ட ஞாலம்,நியாதத்தை சிந்திக்குமா??காயத்ரியின் பார்வையில் அது தன் ஆருயிர் காதலன் தனக்கிழைத்த துரோகமாகவே தோன்ற,விளைந்தது நிரந்தர பிரிவு!!

ஆக்ரோஷம் வஸ்திரம் கொண்டு நேத்திரம் மூட,மகளையும் அத்தாயானவள் தியாகம் செய்தாள்!!

மகேந்திரனின் சரித்திரம் எதற்கும் கலங்காத ருத்ராவின் உள்ளத்தையே உலுக்கி எடுத்து,அவன் கண்களில் இருந்து துளி நீரை சிந்த வைத்தது.

"நான் அவர் பேச்சை கேட்டிருந்திருக்கணும்!அதைவிட நான் பண்ண பெரிய தப்பு என் அப்பா வீட்டுக்குப் போனது!அங்கே அவர் தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டி,என்னை மனதளவுல சித்திரவதை செய்து,நான் சாக முயற்சி பண்ண சூழ்நிலையையும் கெடுத்து,என்னை ரகுராமுக்கு கல்யாணம் செய்து வைத்தாங்க!"

"இன்னிக்கு வரை!குற்ற உணர்ச்சியால செத்துட்டு இருக்கேன்!மரணமும் என் மேலே இரக்கம் காட்டலை!என் மகளும் காட்டலை!"

"மாயா உண்மையிலே எவ்வளவு நல்லப்பொண்ணு தெரியுமா?அவர் அப்படி வளர்த்தார்!அவ முகத்துல எப்போதும் சிரிப்பு இருந்துட்டே இருக்கும்!யாருக்கும் ஆட்படாத அவரே மாயாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டார்.அவளும் அவரோட பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டா!அவர் சொன்னா ஏன்,எதுக்குன்னு கூட கேள்வி கேட்க மாட்டா!உடனே முடித்துவிட்டு வந்து நிற்பா!மாயா இடக்கை பழக்கம் இருக்கிறவள்!நான் பயங்கரமா அவளை திட்டுவேன்.அவர் ஒருநாள் அப்பாக்கு தான் இடக்கை பழக்கம் இருக்கே,நீயும் ஏன்மா இடக்கையிலே எழுதணும் அம்மா சொல்ற மாதிரி வலது கையிலே எழுதுடான்னு ஒருமுறை தான் சொன்னார்.அப்போ மாயாக்கு என்ன 4 வயசு இருக்கும் அவ்வளவுதான்!அதோட,லெப்ட் ஹேண்ட் யூஸ் பண்றதையே விட்டுட்டா!"-ருத்ராவின் மனதோடு சேர்ந்து,மாயாவின் மேல் அவன் வைத்த எண்ணங்களும் இளக ஆரம்பித்தன.

"எல்லாத்துக்கும் காரணம் நான் தான்!என் மாயா இப்போ வாழ்க்கையில பிடிப்பு இல்லாம வாழ காரணம் நான் மட்டும் தான்!என்னை மாதிரி மோசமான அம்மா உலகத்துல யாரும் இருக்க முடியாது!"-கண்ணீரில் கரைந்தார் காயத்ரி.

"அ...அழாதீங்கம்மா!உங்க மேலே தப்பு எதுவுமில்லை!இதெல்லாம் தற்செயலா நடந்தது!அதுக்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும்!"

"மற்றவங்களுக்கு மாயாவோட ஆக்ரோஷம் மட்டும் தான்பா தெரியும்!தப்பு பண்ண எனக்கு மட்டும் தான் அதன் பின்னால் மறைந்திருக்கிற மகேந்திரனுடைய வலியும்!வேதனையும் புரியும்!மாயா கண்ணாடி மாதிரி,என்ன அந்தக் கண்ணாடி அவ அப்பாவோட பிம்பத்தை மட்டும் தான் பிரதிபலிக்கும்!அவர் எந்தளவு வேதனையை அனுபவித்திருந்தா,மாயா இந்த அளவு என் மேலே வெறுப்பை காட்டுறான்னு யோசி!"

"மா!"

"ப்ளீஸ் ருத்ரா!என்னை கொஞ்ச நேரம் தனியா விடுறீயா?"-அவன் ஏதும் பேசவில்லை.மௌனமாக எழுந்து வெளியே சென்றான்.ஆனால்,புரிதலின் நிமித்தமாக அவனது மனம் முழுதிலும் அச்சமயம் மாயா மட்டுமே வியாபித்திருந்தாள்.

"ச்சே!அவசரப்பட்டுவிட்டோமோ!"-செவிக்கேட்ட சரித்திரம் யாவும் மறந்துப்போக,

"அப்பா அடிக்கடி நான் அவருடைய இரத்தம்னு சொல்வார்!வேணும்னா நான் கொடுக்கட்டா?"-என்ற மழலை வாக்கியமே அவனது நினைவில் தங்கியது.

"ஹவ் க்யூட் ஷி இஸ்?"-மென்மையாக புன்னகைப் பூத்தான் ருத்ர பிரதாப் ராணா.

ரண்டு வாரங்கள் உருண்டன...

நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து விசிலடித்தப்படியே தலை சீவிக் கொண்டிருந்தான் ருத்ரா.அதே நிலைக் கண்ணாடியில் சற்று உற்று பார்த்தவனுக்கு தன்னை சற்று தூரத்தில் விசித்ரமாய் பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் பிம்பம் தென்பட்டது.

"ஓய்!என்னடி?இதுக்கு முன்னாடி என்னை பார்த்ததே இல்லையா?"-பட்டென அவன் கேட்டதும்,அதே விசித்ர பார்வையோடு அவன் முன் வந்து நின்றாள் மித்ரா.

"மாமா!நல்லா இருக்கீங்க தானே!உடம்பு சரியில்லையா என்ன?"-அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.

"ஏன்?எனக்கு என்ன?"

"என்ன?கொஞ்ச நாளா பழைய ருத்ராவை பார்க்க முடியுதுன்னு பார்த்தேன்!அர்ஜூனுக்கும்,உங்களுக்குமான மனஸ்தாபம் சரியாயிடுச்சா?"-ஆர்வமாக கேட்டாள் அவள்.

"இல்லை...நீ ஏன் அவனைப் பற்றி எடுக்கிற?அவன் மட்டும கையில மறுபடியும் கிடைத்தால்,அந்த விலா எலும்பை அப்படியே பிடித்து உடைத்து விட்டுவிடணும்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.