(Reading time: 10 - 19 minutes)

வர்கள் வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டில் தான் திருமணம் நடக்கும்.. கல்யாணம் திருச்சியில் என்பதால் , பெண் வீடு, மற்றும் இவர்களின் ஊர் சொந்தங்கள் அனைவரையும் பஸ் வைத்து அழைத்து வந்து இருந்தனர்.

ஊரில் என்றால் முஹுர்ததிற்கு முன்னால் ஊர்வலம் நடத்தி மாப்பிள்ளை அழைத்து வருவார்கள்.. இங்கே மண்டபம் இருக்கும் தெரு முனையில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்று அங்கிருந்து காரில் அழைத்து வர ஏற்பாடு ஆகி இருந்தது.

கோவிலுக்கு சென்ற சமயத்தில் தான் இவர்கள் department lecturer எல்லாம் வந்து சேர்ந்து இருந்தார்கள். அதனால் யாரும் இன்னும் செழியனை பார்க்க வில்லை.

டாப் ஓபன் காரில் செந்தில் ஊர்வலம் வர, செழியனையும் அருகில் அமர சொன்னார்கள்.. அவன் செந்திலை முறைத்த முறைப்பில், கல்யாண வீட்டிற்கு வந்த நண்டு  சிண்டுகளை காரில் அமர்த்திக் கொண்டான். செழியன் காரோடு நடந்து வந்து கொண்டு இருந்தான்.

மண்டப வாசலுக்கு வரவும், மலர் தன் காரில் இருந்து இறங்கவும் சரியாக இருந்தது. அவளை பார்த்த செழியன் அப்படியே freeze ஆகி நின்று விட்டான்.. ஊர்வலம் வந்த பெண்கள் முன்னால் சென்று கொண்டு இருக்க, செழியனை கவனிக்காத மலர், ஊர்வலத்தோடு உள்ளே சென்று விட்டாள்.

காரிலிருந்து இறங்கிய செந்தில், செழியன் அப்படியே நிற்பதை பார்த்து அவனை தொட்டு கூப்பிட, தன் நிலை திரும்பியவன் செந்திலோடு சேர்ந்து நடந்தான்.

அவன் நினைவு எல்லாம் மலரின் மீது தான்.. மலரை காலேஜ்லே புடவையில் தான் பார்கிறான் என்றாலும், இதே போல் அழகான பட்டு புடவையில் பார்த்தது இல்லை. முடிந்தவரை elegant லுக் கொடுக்கும் காட்டன் புடவை அணிந்து வருபவள், என்றாவது சிந்தெடிக் புடவையில் வருவாள். அணிகலன்களும் அதே போல் சிம்பிள் ஆக இருக்கும்.

ஆனால் இன்றுபோல் தழைய தழைய பட்டு புடவை உடுத்தி , பொருத்தமான நகை அணிந்து பார்த்தது இல்லை.. தலையிலும் நெருக்கமாக தொடுத்த மல்லிகை பூ.. அவர்கள் வீட்டிலே பூத்தது.. இங்கே எல்லாம் கொஞ்சம் இடம் விட்டு தான் பூ தொடுப்பார்கள்.. ஆனால் மதுரைக்கு தெற்கே எல்லாம் பூ நெருக்கமாக தொடுப்பார்கள்.. அதிலும் குண்டு மல்லி அப்படி தொடுத்தால் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்..

திருமணத்திற்கு போகிறாள் என்பதால் அவள் அம்மா அதிகமாகவே தொடுத்து இருக்க, அதை தலை நிறைய வைத்துக் கொண்டு வரும்போது அந்த மகாலக்ஷ்மியின் அம்சமாக , பெண்மை மிளிர நின்றவளை கண்டவனால் தன் கண்களில் இருந்து அவளை தவற விட முடியவில்லை.

நேரே உள்ளே சென்ற மலர், நேற்று போல் செழியனே தன்னை தேடி வருவனோ என்று மண்டபம் முழுக்க தேடியவள், அவனை காணாது ஏமாற்றத்தோடு, தன் காலேஜ் staff இருக்கும் இடம் செல்ல எண்ணினாள்.

அதற்குள் அவர்களே வாசலை நோக்கி வர, இவளும் அங்கேயே நின்றாள்.

வளர்மதி “வா மலர்.. இப்போ தான் வரியா” என,

“ஆமாம் அக்கா... எல்லாரும் ஏன் இங்கே வரீங்க”

“ஹ.. அங்கே பாரு மாப்பிளை ஊர்வலம் .... அங்கே டான்ஸ் எல்லாம் ஆடுறாங்க பார்” என, மலரும் திரும்பி நின்று என்ன வென்று பார்த்தாள்.

ரோடில் ஆட முடியாததால் சில இளவட்டங்கள் எல்லாம் சேர்ந்து ஸ்பீக்கரில்

“அவளுக்கென்ன அம்பா சமுத்திரம் .. அய்யர் ஓட்டலு அல்வா மாதிரி”

பாட்டை போட்டு மண்டப வாசலில் டான்ஸ் ஆட, செந்திலின் லோக்கல் friends உம அதில் சேர்ந்து கொண்டனர். அவர்களின் குத்தாட்டத்தை பார்த்த காலேஜ் குரூப் உம ஆடினார். அதிலும் HOD வடிவேலு பாணியில் ஆட, ஒரே கொண்டாட்டம் தான். ஆடிக் கொண்டு இருந்தவர் செழியனையும் உள்ளே இழுத்து விட, அதுவரை மலரை பற்றிய சிந்தனையில் இருந்தவன், அந்த ஆட்டத்தில் அவனும் சேர்ந்து கொள்ள இன்னும் களை கட்டியது..

இன்னும் நீண்டு இருக்க வேண்டிய அந்த கொண்டாட்டம் , யாரோ ஒரு பெரியவர் வந்து

“எ..போதும்டே.. அங்கன நல்ல நேரம் போயிட்டு இருக்கு.. உங்க ஆட்டம் பாட்டம் எல்லாம் பொறவு பார்த்துக்கலாம்...” என

ஒரு வழியாக மாப்பிள்ளையை உள்ளே அழைத்து சென்றார்கள். செந்திலோடு செழியனும் செல்ல, அதன் பிறகு தான் மலர் சுற்றுபுறம் உணர்ந்தாள்.

செழியனை தேடிக் கொண்டு இருந்தவள், அவனை வேட்டி சட்டையில் பார்க்கவும், அதிலும் வேட்டையை மடித்து கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடும்போது பார்த்தவள், அவனின் ஆண்மையிலும் , கம்பீரத்திலும் விழுந்துதான் விட்டாள்.

எல்லோருடும் உள்ளே சென்றவள் மனதில், தன்னை அவன் பாதித்தது போல், தானும் அவனை பாதித்து இருப்போமா என்ற எண்ணமே ஓடிக் கொண்டு இருந்தது.

இதன் இடையில் மேடையில் சடங்குகள் நடக்க, நல்லபடியாக திருமணம் முடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.