(Reading time: 10 - 19 minutes)

திருமணம் முடிந்து பெரியவர்கள் திருநீறு பூசி விட ஆரம்பித்தனர்.. செழியன் அப்பா, அம்மா வர அவர்களோடு செழியனும் இணைந்து தங்கள் திருமண பரிசை கொடுத்தனர்.

முதல் நாள் அவர்கள் வரவில்லை என்பதால் செழியன் பெற்றோரோடு சேர்ந்து போட்டோ எடுக்க சொல்லி செந்தில் சொல்ல, எல்லோரும் போட்டோவிற்கு நின்றனர்.

பிறகு அவர்கள் இறங்கி வந்து hod இருக்கும் இடம் நோக்கி வந்தனர். எல்லோரும் ஒரே இடத்தில அமர்ந்து இருக்க, அங்கே வந்தவர்கள்

“வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?.” என்று hod யை கேட்க,

“வணக்கம் ஐயா.. நான் நல்லா இருக்கேன்.. நீங்க அம்மா, எல்லோரும் சுகமா?” என்று நலம் விசாரித்தார்.

அவருக்கு பதில் சொன்ன செழியன் அப்பா, மற்ற staff இடமும் விசாரித்தார். அவன் அம்மாவோ வளர்மதியிடம் நலம் விசாரித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது செழியன் “அப்பா, அம்மா.. இவங்க மலர் விழி.. எங்க departmentக்கு புதுசா வந்த lecturer.. join பண்ணி ஆறு மாசம் ஆகுது..” என்று அறிமுகபடுத்தி வைத்தான்..

மலரும் அவர்களை பார்த்து “வணக்கம் சார், வணக்கம் மேடம்”  என,

செழியன் அம்மாவோ “மேடம் எல்லாம் வேண்டாம்மா.. அம்மா ன்னே சொல்லு” என்று கூறினார்.

செழியன் அப்பா, மலர் அப்பாவை பற்றி விசாரிக்க, மலரும் பதில் கொடுத்தாள். மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, தங்கள் சொந்தங்களை பார்க்க சென்றனர்.

செல்லும் போது செழியன் அம்மா “ரொம்ப அழகா இருக்கம்மா நீ... உங்க வீட்டிலே சுத்தி போட சொல்லு “ என்று சொல்லிவிட்டே சென்றார்.

அவர்களின் இயல்பான பழக்கத்தை பார்த்த மலருக்கு அவர்கள் மேல் மரியாதை வந்தது.

மணமேடையில் திருமண சடங்குகள் ஓரளவு முடிந்து இருந்ததால், இவர்கள் department எல்லாரும் ஒன்றாக சென்று அவர்களுக்கு தேவையான பொருள் வாங்கி கொள்கிற மாதிரி ஒரு கிப்ட் செக் கொடுத்து விட்டு வந்தார்கள்.

இதற்கு பின் செந்தில்க்கு செழியன் தேவை இல்லாததால் அவன் தன் மனைவியோடு பேச, செழியனை கழட்டி விட்டான். துரோகி .. தாலி கட்டி முடிச்ச உடனே friend அ கழட்டி விட்டுட்டானே.. இவனை எல்லாம்.. என்றபடி மனதில் திட்டிக் கொண்டு இருந்தான்,

அவன் மனசாட்சியோ “ஐயா .. எப்படி இருப்பீங்களோ..” என்று கேட்டது..

“ஹேய். நான் எல்லாம் தாலி கட்டும் முன்னாடியே கழட்டி விட்டுடுவேன்” என்று அவன் மனம் கூற,

மனசாட்சியோ “தூ.. நீ எல்லாம் நல்லா வருவடா ..” என்றது.. அதை துடைத்து போட்டு விட்டு, அன்றைய தனது தலையாய கடமை ஆன தன் மனம் கவர்ந்தவளை சைட் அடிக்க சென்றான்.

மலரின் பின்னாடியே செழியன் மனம் அலைய, தன் அப்பா , அம்மாவை எண்ணி சற்று அடக்கமாக நடந்து கொண்டான்.

அப்படியும் அவன் அப்பா கண்ணில் இருமுறை அவன் மலரை பார்க்கும் பார்வை பட்டு விட்டது. அவர் ஏதோ யோசனையோடு இருக்க, செழியன் அம்மாவிற்கோ மலரின் அழகில், பேச்சில் கவரபட்டவராய் இந்த மாதிரி பொண்ணு நமக்கு மருமகளா வந்தா எப்படி இருக்கும் என்ற எண்ணமே தோன்றிக் கொண்டு இருந்தது.

எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்து கை கழுவி வர, மலர் கடைசியாக வந்தாள் . மற்றவர்கள் எல்லாம் முன்னே சென்று விட்டனர்.

dining ஹாலும், திருமண ஹால் உம இரண்டு தளங்களாக இருக்க, கீழிருந்து மேலே ஏறிக் கொண்டு இருந்த செழியன், மலர் மட்டும் தனியாக இறங்குவதை கண்டு, அந்த படியிலேயே நின்றான்.

மலர் முதலில் அவனை கவனிக்காமல் இறங்கி கொண்டு இருந்தவள், அருகில் வரும்போது கவனித்து நிற்க, மெதுவாக இரண்டு படிகள் மேலேறி வந்தவன், அவள் கை பிடித்து

“ஹேய்.. மை விழி ..  நாமும் இன்னிக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா ?” என்று கேட்க,

மலர்விழியோ அவனின் வார்த்தைகளில் திகைத்து நின்றாள்.

 

தொடரும்!

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.