(Reading time: 12 - 24 minutes)

எனக்கு ஒரளவு மறைவாய் பேசிப் பழக்கம் இல்லை, ஒருவேளை வாழ்க்கையில் நான் சாதிக்க இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதேபோல் உங்களை எப்போ முதன் முதலாய்ப் பார்த்தேனோ...அப்போதே நான் நேசிக்கத் தொடங்கிவிட்டேன்.

மெல்லியப் புன்முறுவலோடு, அவனை நோக்கிய மாயா, ஏதும் புதியதாக சொல்லப்போகிறீர்கள் என்று எண்ணினேன். இதே வார்த்தைகளை அடிக்கடிக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது. இது ஆணவம் இல்லை உண்மை. இந்த உடலும், அழகும் நிலையானது அல்ல, அதனால் என் உடலையும் அழகையும் எண்ணி நான் கர்வம் கொண்டது கிடையாது.

மெய் அழியக் கூடியதுதான் மாயா? ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் முதலில் இனக்கவர்ச்சியனால் தான் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் உண்மையான அன்பு தழைப்பது இதயத்தில்! மாயா....உன் மேல் காதல் பிறக்கக் காரணமே, அன்புதான், உங்க நாட்டிய நாடகம் அதில் காதலுக்கென ஏங்கும் பார்வை, அன்பு, தவிப்பு விழிகளிலேயே அன்பையும், காதலையும் அருவியாய் கொட்டிய நிமிடம் காதலின் துடிப்பு இவையெல்லாம் கண்டவுடன நீங்கள் ஏங்கிய காதலை உடனே தந்துவிட வேண்டும் என்ற துடிப்பு என்னிடம் எழுந்தது. இன்பேக்ட் ஒரு விநாடி மேடையேறி விடலாமா என்று கூட யோசித்தேன்.

கலகலவென்று நகைத்தாள் மாயா.....காதல் என்று நீங்களே முடிவு கட்டிவிட்டீர்களா?

அந்த தவிப்பை என்னால் உணர முடிந்ததே ?

கண்களைப் பார்த்துப் பேசுபவனை நம்பலாம் என்று கூறுவார்கள், கமல் உங்கள் கண்கள் என் கண்களை நேரடியாகச் சந்திக்கும் போதே நீங்கள் நேர்மையானவர் என்று நான் உணர்ந்தேன். ஏனோ எனக்கும் உங்களிடம் எதையும் மறைக்கத் தோன்றவில்லை, என்னைச் சுற்றி சில கசப்புகளையும், துரோகங்களையும் கண்டுவிட்ட பிறகு யாரையும் நம்பும் பாங்கு எனக்கு இல்லை, காதலுக்கு நான் ஏங்கவில்லை ஆனால், ஆனால் நட்பிற்கு ஏங்குகிறேன். மேல்பூச்சு இல்லாமல் எதையும் விவாதிக்கும் ஒரு நட்பிற்கு என் அலங்காரத்திற்கும், புகழுக்கும் மட்டும் வரும் உறவுகளை நான் ஏற்பது இல்லை, நம் சில அத்தியாயங்கள் நட்பு எழுத்துக்களால் எழுதப்படட்டுமே ?!

நான் காத்திருக்கிறேன் மாயா..... காலம் மாறும் என்னும் நம்பிக்கையில்..! அவன் கண்கிளல் தெரிந்த உறுதி அவளை அசைத்துப் பார்த்தது, அன்றிலிருந்து அவர்களின் நட்பு உறுதியடைந்தது. ஒருமுழு வருடம் சென்றபிறகு தொழில் நிமித்தம் கமல் லண்டன் கிளம்புகையில் மாயா அவனைச் சந்தித்தாள்.

ஏன் எதற்கு என்று கேட்காமல் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா? அதுவும் உடனேயே ? மடியில் படுத்திருந்தபடி அவள் குழந்தையாய் கேட்ட கேள்வியில் திகைப்பாய் மான்விழிகளை நோக்கினான் இலேசாய் அவள் கண்கள் கலங்கியிருந்தது.

என்ன மாயா ஏதும் பிரச்சனைாயா ? நீதானே நான் இன்னும் காதலை முழுமையாக அனுபவிக்கவேண்டும் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்றாய் ?!

என் பணத்திற்காகவும் இந்த உடலுக்காகவும் ஏங்கும் சில புல்லுருவிகள் ............விடுங்க அதெல்லாம் ஏன் ? அத்தை அவங்க பையன் சந்துருவைக் கட்டிக்க சொல்லி வற்புறுத்துறாங்க கமல்.

சரி...எப்போ கல்யாணம் செய்துக்கலாம். இப்பவே ஏதாவது கோவிலில் வைத்து தாலி கட்டவா ?

வேண்டாம் வேண்டாம் முதலில் லண்டன் போய் வாருங்கள் அதற்குள் நான் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. நான் ... வெறும் மாயாவாக வந்தாலும் கூட என்னை ஏற்றுக்கொள்வீர்களா கமல். எல்லா அடையாளங்களையும் தொலைக்கப் போகிறேன், நீங்கள் லண்டன் சென்று வரும் போது புதிய பறவையாய் ஒரு சிறு கூட்டிற்குள் காத்திருப்பேன் என்று அவள் உறுதியளித்த பிறகுதான் அவன் பிளைட்டில் ஏறியதே ?!

அப்படியும் தன் நண்பன் அசோக்கிடம் சொல்லி சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டுதான் சென்றான் ஆனால் திடுமென்று லண்டன் வந்து சேர்ந்த ஒருவாரத்தில் மாயா தற்கொலை செய்து கொண்டாள் என்று அசோக்கிடம் இருந்து வந்த செய்தி அவனை சுக்கு நூறாய் உடைத்துப்போட்டு விட்டது, போட்டது போட்டபடி விரைந்து வந்து விட்டான். லண்டன் பயணம் முடித்ததும் இதே விமான நிலையத்தில் அடுத்து நம் தேனிலவிற்காய் வந்து நிற்போம் என்று மாயாவின் பட்டுக்கன்னத்தில் தட்டி அது சிவந்து போகும் அழகை ரசித்தபடியே சென்றது நினைவுக்கு வந்தது. ஏனோ சூன்யமான ஒரு மனநிலை அவனிடம். அவன் மாயா இருந்த இடம் மட்டும் வெறுமையாய்.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.