(Reading time: 19 - 37 minutes)

பெற்றோரின் இழப்பு அவனை பெரிதாய் பாதிக்க ஊருக்கு வருவதையே குறைத்துவிட்டிருந்தான்..தோட்டத்து பொறுப்புகளையெல்லாம் நம்பிக்கையானவரிடம் ஒப்படைத்து இருக்க வருடத்துக்கு ஒரு முறையோ இருமுறையோ தான் வந்துவிட்டு போவான்..அதுவும் ஓரிரு நாட்களே அதனால்தேவிகா அவனை பார்த்திருக்க வாய்ப்பில்லாமல் போனது..

றுநாள் கோவிலுக்கு வழக்கம்போல்சென்றவள் கண்திறந்த நேரம் எதிரிலிருந்தவனை கண்டு தலைதெறிக்க ஓடாத குறைதான்.சிட்டாய் பறந்துவிட்டாள்.அதன்பின் அவன் கண்ணில் படாமல் ஒவ்வொரு நாளும் தப்பிப்பதே ப்ரம்ம ப்ரயத்தனமாய் இருந்தது அவளுக்கு..இதனிடையில் அவன் வீட்டிற்கே சென்று அவனை பார்ப்பாள் என நினைக்கவேயில்லை ஏதோ வேலையாய் வெளியே போகவேண்டும் என்று சாமி கூற அவளும் எப்போதும்போல் கோவில் வேலையாய் இருக்குமென செல்ல அவன் வீட்டுக்கு தெருவை கண்டதும் பயம் அப்பிக் கொண்டது..

இங்க எங்க போறோம் சாமி???

இல்ல தேவி நம்ம பண்ணையார் மகன் இல்ல அவரு நிரந்தரமா நம்ம ஊர்லயே தங்கபோறாராம் அதான் அவர பாத்து திருவிழா விஷயமா பேசிட்டு வரலாம்நு வந்தேன் கோவில் விஷயமா நீயில்லாம நா எப்போ போய்ருக்கேன் அதனாலதான் அதோ அதான் அவுக வீடு நீயும் இங்க வந்ததில்லல வா வா..

குனிந்த தலை நிமிராமல் அவரின்பின் சென்று ஓரமாய் நின்று கொண்டாள்..சில நொடிகளில் உள்ளிருந்து அவன் வரும் காலடி சத்தம் கேட்க பெண்ணவளுக்கோ இதயைத்துடிப்பு அதிகமாய் எகிறியது..

வணக்கம் ஐயா என் பேரு சாமி இது என் பொண்ணு தேவிகா..மரியாதைக்காய் தலை நிமிர்த்தி பார்க்க அவனோ கண்சிமிட்டி சிரிக்க சட்டென தலைதாழ்த்திக் கொண்டாள்..

நீங்க வயசுல பெரியவரு ஐயாநு கூப்டாதீங்க என் பேரு கார்த்திகேயன் அப்படியே கூப்டுங்க..

அய்யோ அதெப்படி சரியாவரும்??

எல்லாம் சரியாவாரும்..என புன்னகைக்க அடுத்து திருவிழா சம்மந்தமாய் தேவையானவற்றை பேசிவிட்டு கிளம்ப எத்தனிக்க சாமியோடு சேர்ந்து வெளியே வந்தவள் வாசலை தாண்டிச் சென்று அவனை திரும்பிப் பார்க்க அதற்காகவே காத்திருந்தவன் விடைக் கொடுத்து கையசைத்தான் பதறிப் போனவளாய் நிற்காமல் ஓடிவிட்டாள்..சாமி அன்று முழுவதும் தான் பார்ப்பவர்களிடமெல்லாம் அவனைப் பற்றி உயர்வாய் கூறிக் கொண்டிருந்தார்..இப்படியாய் நாட்கள் நகர கோவில் திருவிழா நாளும் வந்தது..சாமி வாங்கிக் கொடுத்த அரக்கு நிற தாவணியில் தலைநிறைய பூவோடு அம்சமாய் கிளம்பி வந்தவளை பார்த்தவருக்கு கண்களில் நீர் கோர்த்தது..உன்ன பெத்தவக சரியாதான் பேரு வச்சுருக்காக அந்த மகாலட்சுமியேதான் தேவிம்மா நீ..உன்ன கூடிய சீக்கிரம் ஒருத்தன் கைல பிடிச்சு குடுத்துட்டா நிம்மதியா கண்ணமூடிருவேன்..

என்ன சாமி பேச்சு இது கோவிலுக்கு போய் மத்தவங்களுக்கு சந்தோஷமா குறி சொல்லபோற இப்போ இது தேவைதானா..வா போலாம்..என்றவாறு கோவிலையடைய அனைத்து முக்கியத் தலைகளும் வந்தவுடன் சிவனுக்குரிய ஆராதனைகள் ஆரம்பமாக சில நிமிடங்களிலேயே சாமி நிலைதடுமாறி ஆட ஆரம்பிக்க தேவிகா தாங்கிப் பிடிக்க முயல அவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க தடுமாறினாள்..அதை கவனித்திருந்தவன் சட்டென மறுபுறம் தாங்கிப் பிடித்து நின்றான்..அதன்பின்பு சாமி நினைவிற்கு வரும் வரையிலுமே கூடவேயிருந்து உதவிகள் செய்தான்..கோலாகலமாய் திருவிழா ஒருபுறம் நடக்க மாலைவேளையில் அங்கிருந்த கடைகளை வேடிக்கை பார்த்தவாறு தேவிகா வந்து கொண்டிருக்க எதிரில் வந்த கார்த்திகேயனை கண்டு கொண்டாள்..அப்படியே அவள் அங்கிருந்து நகர முற்பட அவனின் கணீர் குரலில் அவனை ஏறிட்டாள்..

தேவிகா நாளைக்கு காலைல கோவிலுக்கு வரும்போது கொஞ்சம் எனக்காக காத்திரு நா உன்கூட கொஞ்சம் பேசனும் வரேன் என்றவாறு அவன்போக்கில் சென்றுவிட்டான்..கேட்டவளோ வாயடைத்து நின்றாள்..அவர் என்கிட்ட என்ன பேசபோறாரு..எதுக்காக கூப்பிடுறாரு தெரிலயே..என்று ஆயிரம் முறை எண்ணியும் ஒன்றும் புரியாமல் அன்றைய தூக்கம் தொலைந்ததுதான் மிச்சம்..

றுநாள் பொழுதோடே எழுந்து கோவிலுக்கு ஒருவித தவிப்போடே செல்ல அங்கு சிவனை எண்ணி கண்களைமூடி வேண்டியவள் கண் திறந்தபோது கார்த்திகேயன் நின்றிருந்தான்..அவன் ஏதோ கூற வாயெடுக்க சரியாய் ஒருவர் அவனிடம் ஏதோ கேட்க வர விட்டால் போதுமென பிரகாரத்தை சுற்ற சென்றுவீட்டாள்..

ச்ச்சச அவர பாத்தா ஏன் இப்படி மூச்சு வாங்குது..கை கால் எல்லாம் உதருது நல்லவேளை முத்து அண்ணன் வந்து காப்பாத்தினாங்க என நிம்மதி பெருமூச்சை முழுசாய் முடீப்பதற்குள் பின்னிருந்து அருகில் அவன் குரல் கேட்க சட்டென திரும்பினாள்..

நில்லுனு சொன்னேனே இவ்ளோ வேகமா எங்க போற??கொஞ்சம் இப்படி வா என்றவாறு குளத்தருகில் நிற்க அவளை உள்ளே இரண்டு படி கீழிங்கி நிற்கச் சொன்னான் எனவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவன் மட்டுமே தெரிவான்..எதுக்கு கூப்டேன்னு தெரியுமா???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.