(Reading time: 19 - 37 minutes)

ம்கும் என இடவலமாய் தலையசைத்தாள்..லேசாய் புன்னகைத்தவன்.எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசப்பட்றேன்..சொல்லப் போனா உனக்காக தான் நா திரும்ப இந்த ஊருக்கு வந்ததே..பட்டணத்துல இருந்தேன்ங்கிறதால என்ன தப்பா நினைச்சுடாத நா விரும்பின முதல் பொண்ணும் நீதான் கடைசி பொண்ணும் கண்டீப்பா நீயாதான் இருப்ப யோசிச்சு உன் முடிவ சொல்லு நாளைக்கு நம்ம ஆத்தங்கரைல உனக்காக காத்திருப்பேன்..என்றவாறு அவன் சென்றுவிட இவளுக்கோ என்ன நடக்கிறது என்பதே வெகு நேரம் புரியவில்லை..அவள் தோழி வந்து  தோள்தட்ட அப்போதுதான் சுயநினைவிற்கே வந்தாள்..

அவுக எவ்வளவு பெரிய ஆளு என்னபோய் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்றாகளே..இதெல்லாம் எப்படி ஒத்து வரும் இந்த ஊர்காரங்க என்ன சொல்லுவாக..சாமி ஒத்துப்பாரா??மொதல்ல எனக்கு பிடிச்சுருக்கா தெரிலேயே எந்த கேள்விக்குமே பதில் தெரியவில்லை என்பதுதான்விடிய விடிய யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவளாய் அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்று சிவனிடம் முதலில் தன் விருப்பத்தை தெரிவித்துவிட்டு ஆத்தங்கரையில் தன்னவனுக்காய் காத்திருந்தாள்..கடைசி படியில் அமர்ந்து நீருக்குள் காலை விட்டு விளையாடியவாறு அமர்ந்திருக்க பத்து நிமிடம் கழித்து வந்தவனுக்கு தனக்கு முன் அவள் வந்திருப்பதே அவள் மனதை கூறியது  இருப்பினும் அவளை சீண்டஎண்ணியவனாய் ஒன்றும் பேசாமல் பின்னால்  நின்றுகொண்டான்..சில நிமிடங்கள் காத்திருந்தவள் அவன் வரவில்லை என்றெண்ணி எழுந்து திரும்ப அருகினில் நின்றவனை கண்டு பதறி நகரப் போனவள் கால் இடறி நீருக்குள் விழப்போக அவளின் ஒரு கரத்தை பற்றி மற்றொரு புறம் இடையைப் பற்றி இழுத்து நிறுத்தினான்..சஹானாவின் முகத்தில் அப்படியாய் ஒரு பரவசம்..நாணத்தால் சிவப்பேறியது..பார்த்திருந்தவனுக்கோ தன்னவள்மேல் காதல் இன்னும் இன்னுமாய் அதிகரித்தது..சில நொடிகளில் தான்நிற்கும் நிலையறிந்து சட்டென விலகி ஓட எத்தனித்து இரண்டு படியேற. தேவி நா கேட்டதுக்குபதில் இன்னும் சொல்லலியே நீ??என்றவனின் கேள்வியில் அங்கேயே நின்று அவன்புறம் திரும்பியவள் தலைகுனிந்தவாறே நின்றாள்.குறுஞ்சிரிப்போடு  அவளருகில் வந்தவன் என்ன பிடிச்சுருக்கா பிடிக்கலையா????

அவள் ஆமாம் என்பதாய் தலையசைக்க..ம்ம் இப்படி சொன்னாஎன்ன அர்த்தம்..பிடிக்கலநு சொல்றியா என மீண்டும் அவளை வாற அதிர்ச்சியாய் தலைநிமிர்த்தி அவள் பார்க்க அடடா அப்போ பிடிச்சுருக்கா??என தலைசாய்த்து அவள் உயரத்திற்கு ஈடுகொடுத்து கேட்க வெட்கச் சிரிப்போடு ஆமா என்றவள் ஓடிவிட நாளைக்கும் இதே நேரம்இங்கேயே காத்திருப்பேன் என்றவனின் குரல் காற்றில் கரைந்தது..வீட்டிற்கு வந்தவளுக்கு  மனம் நிறைந்திருந்தது தனக்கான உறவாய் உலகமாய் ஒருவன் வரப் போகிறான் என்ற எண்ணம் அவளை மகிழ்ச்சியடையச் செய்தது..சாமியிடம் கூறலாமா வேண்டாமா என்றெண்ணியவள் எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என தெரியாமல் குழம்பினாள்..இத்தனை வருடத்தில் அவருக்கு தெரியாத ரகசியம் என அவளிடம் ஒன்றும் இருந்ததில்லை..ஆனால் இந்த விஷயம் கார்த்திகேயன் மூலமாக தெரிவதே நல்லது என தோன்ற அதுவரை காத்திருக்க முடிவு செய்தாள்..

ன்றைய பொழுது இனிமையாய் விடிய சஹானாவிற்கு அவளின் கார்த்திகேயனை பார்க்க போவதே பன்மடங்கு பொலிவைக் கொடுத்தது..விரைவாய் அத்தனை வேலையையும் முடித்துவிட்டு ஆத்தங்கரைக்கு செல்ல கார்த்திகேயன் அவளுக்காக காத்திருந்தான்..அவள் வந்தது தெரிந்தும் அவளாய் வாய் திறக்கட்டும் என அவன் காத்திருக்க அவளோ எப்படி அழைப்பது என்று தெரியாமல் கைகளை பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்..ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவனாய் பின் திரும்பி,அது சரி இப்படி வாயே பேசாம வாழ்க்கை பூரா ஓட்ரதா உத்தேசமா??

அப்போ நா வந்தது உங்களுக்குத் தெரியுமா??என்றாள் மெதுவாய்..

அப்பாடா ஒரு வழீயா பேசிட்டியா நா கூட வாழ்க்கைபூராவுமே நீ ஆமா இல்லநு மட்டும் தான் சொல்லுவியோநு நினைச்சு பயந்துட்டேன் சரி  இப்படி உக்காரு என்றவாறு அருகில் கைகாட்ட சற்று இடைவெளி விட்டு அவனருகில் அமர்ந்தாள்..சிறு  புன்னகையோடே அவளை பார்த்திருந்தவன் ஆமா நீ எப்பவுமே இப்படி அமைதியாதான் இருப்பியா ஏன் என்கூட பேசமாட்ற ஒரு வேளை என்மேல நம்பிக்கை வரலையோ இன்னும்??

சட்டென கண்களில் நீர்கோர்த்திருந்தது பெண்ணவளுக்கு..ஏன் இப்படி பேசுறீக???

ஏ ஏன் அழற??கண்ணைத் தொட முதல்ல..இனி நானும் அப்படி பேசமாட்டேன்..சொல்லு ஏன் அமைதியாவே இருக்க??

வந்து வந்து எனக்கு உங்கள எப்படி கூப்பிடறதுநு தெரிலயே என்றாள் தயங்கி தயங்கி..உங்க அப்பாவ பேரு சொல்லிதான கூப்டுற என்னையும் அப்படியே கூப்டு..

அய்யய்யோ தப்பு தப்பு சாமியவே அப்படி கூப்டகூடாதுநு எவ்வளவோ முயற்சி பண்றேன் ஆனா மாத்திக்க முடில உங்களலா அப்படி கூப்பிடமாட்டேன்..

ம்ம் சரி அப்போ மாமாநு கூப்டு இனி ஒழுங்கா பேசுவ தான..ம்ம் என அழகாய் தலையசைக்க அவனும் அவளை போல் செய்து சிரித்தான்..

ம்ம் சரி உங்கப்பாகிட்ட விஷயத்தை சொல்லிட்டியா??

இல்ல. ஏனோ எனக்கு இத சொல்ல வாயே வரமாட்டேங்குது சாமி ஒண்ணும் சொல்லமாட்டாரு தான் இருந்தாலும் ஒருமாறி பயமாயிருக்கு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.